(Reading time: 11 - 22 minutes)
சிறுகதை - வாழ்க்கை - பிந்து வினோத்
சிறுகதை - வாழ்க்கை - பிந்து வினோத்

   

"நித்தி செல்லம்... கோமதி பாப்பா உன் ஃப்ரெண்ட் தானே? கொஞ்ச நேரம் இங்கே இருக்கட்டும்... நீ இந்த பக்கம் உட்காரு...."

   

என் பேச்சில் நித்திலாவின் முகம் சற்றே வாடியது.

   

"ஹுஹும்.. நான் தான் இங்கே உட்காருவேன்..." என்று மீண்டும் அடம் பிடித்தாள்.

   

"நித்தி பாப்பா அம்மா செல்லம் தானே? அம்மா சொன்னால் கேட்ப தானே? இப்படி அடம் பிடிக்க கூடாது..."

   

"ஹுஹும்ம்...." என்று அவள் மறுபடியும் மறுக்கவும்,

   

"செல்லக் குட்டி நீ இந்த பக்கம் உட்கார்ந்தால், அம்மா உனக்கு பிடிச்ச சின்ட்ரெல்லா கதை சொல்லி தருவேனாம்..."

   

நித்திலாவின் முகத்தில் சந்தோஷம் தோன்றியது. சொன்னது போலவே மறு பக்கம் அமர்ந்தாள்.

   

நல்ல வேளை நான் செய்து கொண்டிருந்த தவறை இப்போதாவது புரிந்துக் கொண்டேனே என்று என் மனதிலும் சற்று அமைதி ஏற்பட்டது. என் மகளை சிறந்த முறையில் வளர்க்க வேண்டியது என் கடமை அல்லவா?

   

எப்போதோ படித்த ஆங்கில புத்தகத்தின் வரிகள் நினைவுக்கு வந்தன,

   

'எந்த உறவிலும், அமைதியாக, மற்றவருக்கு மதிப்பும், வேண்டிய சுததிரமும் கொடுத்து சென்றால் அது என்றென்றும் நிலைத்து இருக்கும். ஆனால் எந்த உறவையும், இறுக்கமாக, என்னுடையது என்ற வெறியுடன் பற்றிக் கொண்டால், அது கை நழுவி காணாமல் போய் விடும்..' (Held loosely, with respect and freedom for the other person, it[relationship] is likely to remain intact. But hold too tightly, too possessively, and the relationship slips away and is lost. )

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.