அவை தவிர, உத்திரங்களின் மீதும், சத்திரத்து முகப்பிலும், புத்தர் பெருமானின் திருவாசகங்களும் அசோகருடைய நல்லுரைகளும் எழுதப் பெற்றிருந்தன.
சத்திரம் கட்டி முடித்து வெகு நாளாகிவிடவில்லை. புத்தம் புதிதாக இருந்த அந்த சத்திரத்திற்கு வந்த வழிப் போக்கர்களுக்கு அது தேவலோகம் போல் காட்சியளித்தது. பாடலிபுத்திரத்திலிருந்து புத்த கயாவிற்கும் கயாவிலிருந்து தலைநகருக்கும் போகும் வழிப் போக்கர்கள் பெரும்பாலும் புத்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் பிட்சுக்களாகவும் இருந்தார்கள். காசிக்கும் ராஜகிரிக்கும் போய் வந்து கொண்டிருந்தார்கள், வணிகர்களாகவும், பிராமணர்களாகவும், வேறு பல பெருந்தொழில் துறையினராகவும் இருந்தார்கள்.
யாராயிருந்தாலும் வரவேற்று இடங்கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. யாருக்கும் எவ்வித வேற்றுமையும் காட்டப்படவில்லை. எல்லோரையும் சமமாக நோக்கும் தன்மையே சத்திரத்து அதிகாரிகளிடம் காணப்பட்டது. எல்லாம் அசோக மாமன்னரின் நோக்கப்படியே யிருந்தது.
இந்தச் சத்திரத்துக்கு ஒருநாள் ஒர் இளைஞன் வந்து சேர்ந்தான். அவன் உடல் அங்கங்களிலே இளமையின் பூரிப்பும் கண்களிலே புதிய மினுமினுப்பும், முகத்திலே கவலையற்ற குதுரகலிப்பும் அவன் கடையிலே ஒரு துடி துடிப்பும் காணப்பட்டன.
காசியிலிருந்து வந்த ஒரு கூட்டத்தினரோடு அவனும் சத்திரத்துக்கு வந்து சேர்ந்தான். வந்தவுடன் அவன் மற்றவர்களைப் போலவே தனக்கு இடத்தேடிக் கொள்வதிலும், தன் துணிமணி படுக்கைகளை ஒழுங்கு படுத்துவதிலும், குளிப்பதிலும் உணவு தேடுவதிலும் ஈடுபட்டிருந்தான். மதிய உணவு முடித்த பிறகு சிறிது கேரம் இளைப்பாறி விட்டு, மாட்டு வண்டிகளில் அவர்கள் ராஜகிரி கோக்கிப் புறப்பட இருந்தார்கள்.
சத்திரத்தில் பதிவேட்டுக்காரன் அவன் பெயரைக் கேட்டபோது மகாலிங்க சாஸ்திரி என்று கூறினன். அந்தப் பெயரைக் கொண்டும், அவன் கூடவந்த ஆட்களைப் பார்த்தும் அவன் ஒரு பிராமண இளைஞன் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
சத்திரத்துப் பதிவேட்டிலே ஊர் பேர்தான் குறிக்கப் படுமே தவிர சாதி குலமெல்லாம் குறிக்கப்படமாட்டாது. எல்லாம் தோற்றம், வழக்கம், பேச்சு வார்த்தைகளைப் பார்த்துத்