(Reading time: 26 - 51 minutes)
சிறுகதை - துன்பம் போக்கும் அன்பர் (அசோகர் கதைகள்) - பாவலர் நாரா. நாச்சியப்பன்
சிறுகதை - துன்பம் போக்கும் அன்பர் (அசோகர் கதைகள்) - பாவலர் நாரா. நாச்சியப்பன்

மான் கன்றுகள் துள்ளிப் பாய்ந்து ஓடின. அவன் அசோகரின் எதிரில் போய் கின்றவுடன் அவை மீண்டும் அங்கே வந்து சூழ்ந்து கொண்டன. தன்னையும் அவை தம் அன்புலகில் ஏற்றுக் கொண்டு விட்டன போலும் என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டான் ஈசுவரநாதன்.

   

அசோகர் அவனே நோக்கி நிமிர்ந்தார். தான் வந்த காரணத்தைச் சில சொற்களில் அவன் விளக்கிக் கூறினான்.

   

"உடனடியாகக் கவனிக்க வேண்டியதுதான்" என்று கூறிக் கொண்டே அசோகர் எழுந்திருந்தார். ஆனால், அவர் இச் செய்தியைக் கேட்டுப் பரபரபபோ கலவரமோ அடைந்ததாகத் தெரியவில்லை.

   

அலுவல்மனைக்கு வந்தவுடன், சிற்றரசனின் ஒலையை வாங்கிப் பார்த்தார் அசோகர். உடனடியாகத் தன்னை வந்து சந்திக்கும்படி அவனுக்கு ஒரு கடிதம் அனுப்புமாறு ஈசுவரகாதனிடம் கூறினர். தூதர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஆணவமும் அசட்டுத் தைரியமும் தொண்ட அந்தச் சிற்றரசன் அசோகரை வந்து காண மறுத்து விட்டான். மறுநாளே அச்செய்தி கிடைத்து விட்டது.

   

"ஈசுவரநாதா, நாளை நான் அந்தச் சிற்றரசனைச் சந்திக்கப் போகிறேன். நீயும் வருகிறாயா!" என்று கேட்டார் அசோகர்.

   

'வருகிறேன்!" என்றான் ஈசுவரநாதன்.

   

இருவரும் தங்கள் அரச உடைகளைக் களைந்து மூட்டை கட்டிக் கொண்டார்கள். ஆட்டிடையர்களைப் போல வேடம் கொண்டு, சிற்றரசனின் கோட்டைக்குள்ளே நுழைந்தார்கள். பால்காரர் போல் நடித்து அரண்மனை அந்தப்புரத்தை அடைந்து விட்டார்கள். அங்கே ஒரு மறைவான இடத்திலே நின்று தங்கள் அரச உடைகளை அணிந்து கொண்டார்கள்.

   

பகையரசனின் அரண்மனை. அரச உடையில் மாமன்னர். பின்னால் இளவரசன். அசோகர் சற்றும் கலங்கவில்லை. அவர் உடன் செல்லும் தைரியத்தோடு ஈசுவரகாதன் இருந்தான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.