இருக்கும். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருந்து கழித்த நிமிடங்கள் கண் முன் தோன்றியது....
கண்களில் நீர் எட்டி பார்த்தது. இல்லை அழுவது கோழைத்தனம் என எங்கேயோ படித்த நினைவு வந்தது. ஒருவேளை இது போல் நிறைய புத்தகங்கள் படித்தது தான் அவளின் பிரச்சனையோ? ச்சே... ஏன் இப்படி எதை எதையோ சிந்திக்கிறோம்? வேறு என்ன செய்யலாம் என அவள் யோசிக்கும் போதே, கணினியில் யாரோ அவளை உரையாடலுக்கு (chat) அழைப்பது தெரிந்தது. அவ்வப்போது மீராவிடம் பேசும் தோழி. நல்ல வேளை இவளாவது வந்தாளே என மீராவின் மனம் மகிழ்ந்தது.
ஒரு ஐந்து நிமிடங்கள் எல்லாம் இயல்பாக தான் சென்றது. திடீரென,
"ஏன் இப்படி அவரை விட்டு வந்து தனியாக இருக்கிறாய் மீரா?" என்ற கேள்வி கணினி திரையில் தோன்றியது.
இருக்கும் மனநிலையில் இவளிடமாவது எல்லாவற்றையும் சொல்லி விடலாமா என்று மீரா யோசிக்கும் போதே,
"பாவம் அவர் தனியாக எப்படி சாப்பாடெல்லாம் சாமாளிப்பார்?? உடம்புக்கு எதாவதுன்னா கூட பார்த்துக்க ஆளில்லை தானே,” என்ற அடுத்த மெசேஜ் வந்து சேர்ந்தது!
இரண்டாவது முறையாக கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.
சில வினாடிகள் முன் சொல்ல நினைத்ததை விடுத்து அப்போதைக்கு எதையோ சொல்லி சமாளித்தாள் மீரா. சற்று நேரத்தில் எதையோ சொல்லி கணினியை மூடி வைத்தாள் .
மனதின் பாரம் இன்னமும் அதிகமாகி இருந்தது. இது ஏன் எல்லாமே இப்போது இப்படி நடக்கிறது? ஒருவேளை நேரம் சரி இல்லையோ? விவேக்கின் அம்மாவை அழைத்து பேசலாமா என்று ஒரு வினாடி நினைத்தவள், மனதை மாற்றிக் கொண்டாள். அவர்கள் இந்த ஜோசியம், ஜாதகம், நேரம், நட்சத்திரம்,ராசி பலன் இதன் மேல் எல்லாம் பெரும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள், கேட்டால் உடனேயே அவளின் பலன்களை சொல்வார்கள். ஆனால் அதில்