எல்லாம் மீராவிற்கு நம்பிக்கை இல்லை என்பதும் அவர்கள் அறிந்த விஷயம் தான். இப்போது ஏன் இந்த மாற்றம் என்று கேட்டால் என்ன சொல்வது? அவர்களிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ள முடியாது, பதில் சொல்லாமல் மழுப்புவதும் கஷ்டம்.
என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தவளின் கண்களில் பட்ட கடிகாரத்தில் காட்டிய நேரம் அவளை திகைப்படைய செய்தது. நேரம் நள்ளிரவு பன்னிரண்டு மணி. கிட்டத்தட்ட ஆறு மணி நேரமாக எதையும் செய்யாமல் இப்படியே அமர்ந்திருக்கிறாள். தலை வலித்தது! அப்போது தான் பசியும் தெரிந்தது. மதியமும் அவள் எதையும் சாப்பிடவில்லை. இரவு உணவிற்கு எதையும் சமைக்கவில்லை என்பதும் உரைத்தது. குளிர் சாதன பெட்டியை திறந்து பார்த்தவள் அங்கு உடனே உண்ண உகுந்ததாய் எதுவும் இல்லை என்று புரிந்துக் கொண்டாள். நல்லவேளையாக பால் இருந்தது. எப்போதும் போல் ஃபிளேக்ஸ் செய்யலாம்!
சாப்பிட்டு முடித்து, தூங்கலாம் என்று படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை. மனதில் பாரம் அழுத்தியது. இன்று என்றில்லாமல் சில நாட்களாகவே இப்படி தான். இது தான் பிரச்சனை என்றால் அதற்கு ஏதேனும் தீர்வு யோசிக்கலாம். இது என்ன ஏது என்று புரியாத புதிராக அல்லவா இருக்கிறது. யாரிடமேனும் ஒரு அரை மணி நேரம் மனதில் உள்ளதை கொட்டி தீர்த்தால் பரவாயில்லை என்று தோன்றியது. யாரிடம் பேசுவது? தெரியாமல் கண்களை மூடி தூங்க முயன்றாள். அவளுடைய மனதில் இருப்பதை புலம்ப இந்த உலகில் ஒரு ஜீவன் கூடவா இல்லை?
விடிகாலை மூன்று மணிக்கு பின் எப்போதோ அவள் தூங்கி போயிருக்க வேண்டும். சத்தமாக ஒலித்த அழைப்பு மணியில் அதிர்ந்து கண் விழித்தாள் மீரா. அவளை தேடி யார் அதுவும் இந்த நேரத்தில்? மீண்டும் அழைப்பு மணி ஓசை கேட்கவே அவசரமாக எழுந்து முகத்தை கழுவி துடைத்து விட்டு சென்று கதவை திறந்தாள். போஸ்ட்மேன் போல் இருந்த ஒருவன் புன்னகையோடு, கையில் இருந்த பரிசு பெட்டியை கொடுத்து விட்டு, அவளிடம் கையெழுத்து வாங்கி விட்டு சென்றான். அவளுக்கு யார் பரிசு அனுப்பி இருப்பது?
கதவை மூடி விட்டு அவசரமாக பிரித்து பார்த்தவள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தாள். அழகிய சிவப்பு ரோஜாவுடன், காதலர் தின வாழ்த்து அட்டை ஒன்றும் ஏதோ பரிசும் இருந்தது. காதலர் தினமா அது எப்போது? இன்று என்ன தேதி? வாழ்த்து அட்டையில் தெரிந்த விவேக்கின்