(Reading time: 29 - 58 minutes)
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்

சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்

  

"குலம்!....மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே"

   

குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு வலிக்குமா, இல்லையா? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவி மாதி¡¢ இருக்கிறான்!

   

அம்மா திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தவாறே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

   

"கொஞ்சம் வைக்கல் இழுத்துப் போடன் அப்பன்....மாடுகள் கத்துதெல்லவே!......"

   

குலம் நெற்றியில் முழங்கைகளை அழுந்தப் போட்டவாறு, கால்களை ஆட்டியவாறு படுத்துக் கிடந்தான். அம்மா இவனையே பார்த்துக் கொண்டிருந்தான். மார்பில் உரோமங்கள் படர்கிற வயது. முரட்டுதனமான உடல்பாகு. குரல்கூடக் கட்டைக்குரல் இவனுடைய அப்பா மாதி¡¢. நெற்றியில் தூக்கிப் போட்டிருந்த கைகளைப் பார்த்தாள். நரம்புகள் புடைத்துக்கொண்டு விம்மித் தொ¢ந்தன. உள்ளங்ககைகள் முதலையின் முதுகு மாதி¡¢ காய்த்துப் போயிருந்தன. விரல்கள் ஒயிலும் கிறீஸ¤ம் படிந்து பழுப்புநிறமாகத் தொ¢ந்தன. நகக் கண்களில் கறுப்பாக ஒயில் அழுக்குப் படிந்திருந்தது.

   

"குலம்!....கொஞ்சம் வைக்கல்.....

   

அவசரமாகப் பாய்ந்து இடை வெட்டியவாறு மகன் சிடுசிடுத்தான்.

   

"நீயே இழுத்துப்போடேன்...எனக்கு ஒரே அலுப்பு"

   

அம்மா சற்றே வேதனையின் சாயல் படியச் சி¡¢த்தாள்.

   

சீலன் இருந்தால் இப்படியா எல்லாம் இருக்கும்? அம்மா சொல்லாமலே வேலை செய்து கொடுப்பான். மாடுகளுக்கு வேளாவேலைக்கு வைக்கோல் இழுத்துப் போடுவான். தண்ணீர் கொண்டு போய் வைப்பான் கோழிகளைக் கவனித்துக் கூடுகளில் அடைப்பான். சமயத்துக்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.