(Reading time: 29 - 58 minutes)
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்

வாய்க்குள் ஏதோ முனகிக்கொள்பவனாய் தலையை அடிக்கடிகுலுக்கினான். இரவுநேரங்களில் நித்திரையைத் தொலைத்து விட்டான். புரண்டு புரண்டு படுக்கின்ற அரவங்கள் கேட்டன. காலை நேரங்களில் அவன் சைக்கிளைத் துடைப்பதில்லை. ரேடியோவை மீட்டுவதில்லை. ஆம்! ரேடியோவை அவன் மீட்டுவதாகத் தான் அம்மா இவ்வளவு காலமும் எண்ணினாள். ரேடியோவில் இருந்து அவனது இனிய சா¡£ரமே மிதந்து வருகிறது போல...உலகின் இனிய வஸ்துகள் யாவும் அவனுக்காகவே படைக்கப்பட்டிருப்பதென....அவன் தொட்டதெல்லாம் துலங்கும் என....அவனுக்காக எங்கோ ஒரு அ¡¢ய நங்கை வளர்ந்து வருகிறாள் என...அவர்கள் அம்மாவுக்கு அழகிய, மதலை குதம்பும் பேரக் குழந்தைகளைப் பெற்றுத் தருவார்கள் என....

   

சீலனோ எனில், சில நாட்களாக ஏனோ தானோ என மாறிவிட்டான். பா£ட்சை எழுதப் போனான். மற்றப் பையன்களிடம் காணப்பட்ட ஆர்வமோ பரபரப்போ அவனிடம் காணப்படவில்லை. அம்மா அவனை ஏதும் கேட்கவில்லை. அவளது இனிய குழந்தையைத் தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை. எங்காவது காதல், கீதல்...என்று ஏதாவது?....அவனாகவே சொல்லட்டும் என விட்டு விட்டாள்.

   

"நேரமாகுதெல்லே மேனே...."

   

சா¢யாகச் சாப்பிடத்தானும் இல்லை. சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான், வழமை போல் ஒரே தாவலில் ஏறிப் பறந்து விடவில்லை.

   

மிக நிதானமாக ஏறி உட்கார்ந்தான். காற்றை அளப்பவனைப்போல் சுற்றிலும் பார்வை ஓட்டினான்.

   

"போயிட்டு வாறன் அம்மா....."

   

"வடிவாக் கடவுளை நேர்ந்து கொண்டு போ...."

   

பிறகும் ஏன் நிற்கிறான்......

   

"நேரமாகுதெல்லே...."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.