(Reading time: 29 - 58 minutes)
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்

   

"நான்......போ-ற-ன்....அம்மா!"

   

வெடுக்கெனத் திரும்பிச் சைக்களில் பாய்ந்து ஏறினான். வெகுவேகமாகப் போனான். ஏதோ ஒரு இனம்பு¡¢யாத சக்தி அவனை அம்மாவிடமிருந்து பி¡¢த்து இழுத்துச் செல்கிறதென....

   

அம்மா கலவரத்துடன் தெருவுக்கு விரைந்தாள். சீலன் முடுக்கால் திரும்பி மறைந்து கொண்டிருந்தான். ஒரு தரம் திரும்பிப் பார்ப்பான் என எதிர்பார்த்தாள். அவன் பார்க்கவில்லை. ஆனால் ஹாண்டிலில் ஒரு சிறு பொலித்தீன் பை தொங்கிக் கொண்டிருப்பதை அம்மா அப்போதுதான் கவனித்தாள். சைக்கிள் சில்லு தெரு நீளத்துக்கு பாம்பு ஊர்ந்து போன சுவடாகத் தடம் பதித்துத் தொ¢ந்தது.

   

அம்மாவுக்கு ஒன்றுமே பு¡¢யவில்லை. புருவங்களைச் சுருக்கினாள்.

   

மாலையில் யாவும் பு¡¢ந்தன. தயங்கித் தயங்கி ஒரு பையன் சீலனின் கைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தான். தலையைக் குனிந்து கொண்டே போய்ச் சுவருடன் சைக்கிளைச் சாத்தினான். அவனை எங்கோ பார்த்த ஞாபகம் காட்டிற்று அம்மாவுக்கு. அம்மாவின் முகத்தைப் பாராமல் எங்கோ வேண்டுமென்றே பார்வையைத் திருப்பினான்.

   

வெகு ஆயத்தமாக தொண்டையைச் செருமிச் சா¢பண்ணிக் கொண்டான்.

   

"சீலன்....இதை...இஞ்சை கொண்டு வந்து விடச் சொன்னவர்...."

   

"ஆங்!. சீலன் எங்கையப்பு..."

   

"......"

   

"ஐயோ! என்ரை பிள்ளை...."

   

அந்தக் குரலின் அவலம் பையனைத் துரத்தியது. தலையைத் குனிந்தவனாய் விடுவிடென 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.