"இண்டைக்குப் பாடம் உனக்கு ஓடாதோ?"
அசிரத்தையாகத் தலையைக் குலுக்கினான்.
"அப்ப ஏன் ஒரு மாதி¡¢யாய் இருக்கிறாய்?"
"......."
"காசு....கீசு....ஏதாவது வேணுமோ?"
சி¡¢த்தான் அவசரமாகக் கோப்பி கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கினான். இல்லை, பறித்தான்! அவனது ஆவலும் பரபரப்பும் அம்மாவை வியப்பிலாழ்த்தின. வாங்கும் போது அம்மாவின் கைகளை அவன் விரல்கள் தீண்டின. என்றுமில்லாத அழுத்தம் அவ்விரல்களில் இருந்தது. உள்ளங்கைகள் பிசுபிசுத்து வியர்த்திருந்தன.
"தங்கச்சி எங்கை அம்மா......?"
"ப்ச்...உங்கை தான் எங்கையாவது போயிருப்பாள்"
"......"
"ஏன்"
"சும்மா தான்"
"அவளைப் பார்த்துக் கொண்டு நில்லாமல் வெளிக்கிடு....நேரம் போகுது....."
ஏதோ ஒரு உறுதியுடன் விருட்டென எழுந்தான். விறைந்து நின்று கொண்டான். சிறு நேரம். ஒரு நொடி அம்மாவின் கண்களைக் கூர்ந்து பார்த்தான். அவளது கண்களுக்குள் எதையோ தேடினான் போலும்!