(Reading time: 29 - 58 minutes)
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்

அம்மாவே ஒவ்வொன்றாக இழுத்து வந்து கட்டைகளில் கட்ட வேண்டியிருந்தது.

   

கோழிகள் பூவரச மரங்களில் குடிபுகப்பழகின. அம்மா கற்களை எடுத்து வீசுவாள். "சூ" என விரட்டுவாள். நிசப்தமான முன்னிரவு அவற்றின் கொக்கா¢ப்புகளாலும், சிறகடிப்புக்களாலும் நிம்மதி இழந்து தவிக்கும்.

   

அம்மாவே தனியாக, அவற்றின் கூடுகளில் அடைக்கவேண்டி இருந்தது.

   

புகை படிந்துபோய் மங்கிய ஒளி சிந்தும் ஒரு சிறு விளக்கு. மேஜையின் மீது சீலனின் புத்தகங்கள். ஒரு சைக்கிள். மெளனமாகி விட்ட ஒரு ரேடியோ. அருகிலே மகள் அமர்ந்திருப்பாள். அழகிய சிறு மொட்டு. வயதுக்கு மீறிய குருட்டு யோசனைகள், கொட்டக் கொட்ட விழித்தபடி தனிமையில் உட்கார்ந்திருப்பாள். பாவம்!

   

அந்த அருமையான மாலைநேரத் தேநீர் அம்மாவுக்குப் பிறகு கிடைக்கவேயில்லை.

   

அம்மா வரவர மெலிந்தாள். கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் தோன்றின. நடை வரவத் தளர்ந்தாள். முன்புபோல உற்சாகமாக வேலைசெய்ய முடியவில்லை. அம்மா வயோதிபத்தை நோக்கி மெல்ல மெல்ல போய்க்கொண்டிருந்தாள்.

   

இரவு நேரங்களில் நித்திரையின்றி வாடுவாள். புரண்டு புரண்டு படுப்பாள். அலுத்துப்போய் எழுந்து உட்கார்வாள். ஏதோ ஏதோ விபா£த எண்ணங்கள் தோன்ற பெருமூச்சுகள் விடுவாள்.

   

குலத்தைப் பற்றியும் அம்மாவுக்கு வரவர ஒன்றும் பு¡¢யவில்லை. எப்போதாவது மூன்று நான்கு நாட்களுக்கொருமுறை வருவான். அம்மா அரைத்தூக்கத்தில் அவஸ்தையுடன் புரளும்போது கனவேகத்தில் வந்த ஒரு வாகனம் வாசலில் நின்று ஒருதரம் உறுமி ஓயும். குலம் 'திமுதிமு'வென உள்ளே வருவான், அம்மாவுடன் ஒரு வார்த்தைகூடப் பேசாமலே...அம்மா முகத்தைச் சா¢யாக ஏறிட்டுக் கூடப் பார்க்காமலே...கைகளில் பணத்தைத் திணிப்பான். சேட்டைக் கழற்றிக் கண்ட இடத்தில் எறிவான். ஓலைப்பாயை வி¡¢த்து, தலையணைகூட இன்றிப் படுப்பான். வலிய கரங்களை நெற்றியின் மீது அழுந்தப் போட்டபடி....கால்களை ஆட்டியபடி...மயிரரும்பும் மார்புகளும் விம்மித் தணிய ஒரு நொடியில் தூங்கிப் போவான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.