(Reading time: 29 - 58 minutes)
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்

அவன் எந்த ஊ¡¢ல் குண்டு வெடிக்கவைத்துப் பழகுறானோ? அம்மா பிற ஊர்களை அதிகம் அறியாள். இந்தச் சிறு குடிசைவீடும்....முருகன் கோயிலும்.....புழுதி பறக்கின்ற ஒழுங்கைகளும் ....பனங்கூடல்களும் ...திடல்களும் ...மாடுகளும் ...கோழிகளும் தான் அம்மாவின் உலகம். அவளது பிள்ளைகளே அவளீட்டிய ஈடற்ற செல்வம்.

   

2

   

இன்று அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. ஒவ்வொரு சத்தத்திற்கும் சீலனின் நினைவு அம்மாவுக்குள் கனதியாக ஏறிற்று.

   

குலம்கூட நாலைந்து நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. இன்றாவது அவன் வருவான் என அம்மா மிகவும் ஆசைப்பட்டாள்.

   

இவன் என்ன பிள்ளை? வீட்டுக்கு வருவதே குறைவு வந்தவுடன் விழுந்து படுக்கிறான்.

   

"அம்மா...பசிக்கிது" என ஒரு வார்த்தை!

   

ம் ஹ¤ம்.

   

பசி என ஒரு பிள்ளை கேட்டாலே தாயின் வயிறு நிறைந்துவிடுமே. இதுகூடப் பு¡¢யாது. ஒரு காட்டுப்பிறவி.

   

எங்கேதான் இவன் சாப்பிடுகிறானோ?

   

இன்று குலம் கட்டாயம் வருவான் என எண்ணினாள் அம்மா. தூங்காமல் விழித்திருந்தாள். திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தாள்.

   

இன்று மங்கிய நிலவு வெளிச்சம் இருக்கிறது. சந்திரனின் முகம் ஒரு அழகிய பெண்ணின் நெற்றி போலத் தொ¢கிறது. வெள்ளை மேகங்கள் வேகமாக வானில் தி¡¢வதை அம்மா பார்த்துக்கொண்டிருத்தாள். பூவரசயிலைகள் மங்கின நிலவொளியில் பளபளத்துத் தொ¢கின்றன.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.