பு¡¢யாத பேதையான மகள் சோம்பல் முறியடித்தபடி எழுந்து வந்தாள். முற்றத்தில் நாடியில் கையூன்றி உறைந்து போய்விட்ட அம்மாவைப், பு¡¢யாத பார்வையால் அளந்தாள். அம்மாவின் ஜீவன் எங்கே ஓடி ஓளிந்துவிட்டது. சிறு காற்றுக்கூட அம்மாவின் பலகீனமாக தேகத்தைப் பூமியில் புரட்டி விடும்.
மெல்ல எழுந்து திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்தாள். யாராவது ஒரு வேலையற்ற பெண் அம்மாவைத்தேடி வரமாட்டாளா? கேவும் குரலில் அவளிடம் தன் துன்பங்களைக் கொட்டி அம்மா ஒரு பாட்டம் அழுது ஓயமாட்டாளா?
ஒருவரும் வரவில்லை. பதிலாக மகள் பள்ளிக்கூடம் போக வேண்டியிருந்தது. மாடுகளை அவிழ்த்து மேய்ச்சலுக்குத் துரத்த வேண்டியிருந்தது. கோழிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
அம்மா யந்திரகதியில், அவற்றைச் செய்தாள். மூளை வேலை செய்து மரத்துப் போயிற்று. கண்கள் காந்தின. அம்மாவுக்கு உட்காய்ச்சல் கண்டுவிட்டது. நெருப்புக் காற்றுப்போல உஷ்ணமான மூச்சுக்கள் உதடுகளைப் பொசுக்கின. காரணமற்று சில தப்படிகள் நடப்பதும்...பிறகு நெடுநேரம் ஒரேயிடத்தில் உட்கார்வதும்...தூரே அர்த்தமற்றுப் பார்வை பதித்து பெருமூச்சுக்கள் எறிவதும்...
சூ¡¢யன் யாருக்கும் பி¡¢வு சொல்லாமல் மறைந்து போனது. இருளுடன் போ¡¢ட்டு தோற்றுப்போய் அழுது வடிகிறது நிலவு. காற்று சோர்வாக நடந்து போய்க் கொண்டிருந்தது. அம்மாவால் இவற்றைக் கவனிக்க முடியவில்லை.
சீலன் என்ன ஆனான்?
குலம் ஏன் நாலைந்து நாட்களாக வரவில்லை?
அம்மா மனதில் கேள்விகள் மாறிமாறி எழுந்தன; ஒன்றை ஒன்று துரத்தின.
தொடர்ந்து மூன்று நாட்களாகக் குண்டுச் சத்தங்கள் கேட்கவில்லை அச்சமூட்டும் பேரமைதி