ஒரு அழகிய சிறுமொட்டு. பு¡¢யாத பேதை. வாடிக்கொண்டிருக்கும் பூமரம். அவளது வயதுக்கு மீறின குருட்டு யோசனைகள். கவலைகள், ஏக்கங்கள். தாயின் வேலையில் பாதிக்குமேல் இதன் பிஞ்சுத் தோள்களில் பலவந்தமாக இறக்கி வைக்கப்பட்டது. பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை. போகும் நாட்களிலும் பிந்தித்தான் போகும். ஒரு அழுக்கு யூனிபோமுடன், கலைந்த கேசத்துடன், வாடிய முகத்துடன். கண்களில் பிந்திவிட்டதில் கலவரமும் பயமும் தெறிக்க, மார்பில் புத்தகக் கட்டுக்களை அணைத்தபடி, புழுதி பறக்கும் ஒழுங்கைகள் வழியே ஓட்டமும் நடையுமாக விரையும்.
ஒரு முரட்டு இளைஞன். மணிக்கட்டுக்குக் கீழே அவனது ஒரு கரத்தைத் துணித்து விட்டார்கள். அவனிடம் அடிக்கடி அவன் தோழர்கள் வருகின்றனர். அவன் ஒரு அருமையான மெக்கானிக் மிகவும் மூளைசாலி. அவசியமானவன். ஒற்றைக் கையால் கடுமையாக உழைக்கக்கூடிய அசகாய சூரன். நாலைந்து நாட்களுக்கொரு முறை நடுநிசி நேரம் வீட்டுக்கு வருவான். அவன் முகத்தில் காணப்படும் கடுமையும். எதோ ஒரு வெறியும் காண்போரைப் பிரமிக்கச் செய்யும். அவன் ஒரு முசுடு. அதிகம் பேசமாட்டான். வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவுக்குப் பணம் கொடுப்பான். உடனே ஓலைப்பாயை வி¡¢த்தபடி தலையனைகூட இன்றித் தூங்கிப்போவான்.
வீடு மிகவும் பழையது. ஒரு சிறு குடிசை கூரை மிகவும் உக்கிப் போய்விட்டது. முற்றத்தில் எங்கணும் பூவரசமிலைகள் சருகாக குப்பையாகச் சேர்ந்திருக்கும்.
ஒரு நாய். அதைக் கவனிப்பா¡¢ல்லை. எலும்பெடுத்துத் தொ¢ய மெலிந்துவிட்டது. சொறி பிடித்துவிட்டது. காதுகளில் உண்ணிகள் படையாகப் பெருகிவிட்டன. வளவின் ஒரு மூலையில் மண்ணைத் தோண்டிவிட்டுச், சோம்பிப் படுத்திருக்கும். அது குரைப்பதோ, ஓடுவதோ கிடையாது, விரைவில் இறந்துவிடும்.
அடிக்கடி இந்த வீட்டுக்கு மாட்டுத் தரகர்கள் வருகின்றனர். கதறக் கதற ஒரு பசுவையோ, கன்றையோ இழுத்துப் போகின்றனர். கால்களைப் பரப்பிக் கொண்டு, போக மறுத்து அது கதறும். உதவிக்கு அம்மாவை அழைக்கும். தன் இனத்தை அழைக்கும். பா¢தாபமான குரலில் மாடுகள் எல்லாம் சேர்ந்து அழும்.