(Reading time: 29 - 58 minutes)
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்

ஊறிப்போன ஒரு துணிப் பந்து!

   

ஐயோ! இந்த அம்மாவின் முரட்டுக் குழந்தைக்கு என்ன வாயிற்று?

   

அம்மா அலற நினைத்தாள், முடியவில்லை. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

   

அம்மா அசைய நினைத்தாள், முடியவில்லை பாதங்களை யாரோ ஆணியால் தரையுடன் சேர்த்து அறைந்ததுமாதி¡¢.

   

அவர்கள் ஓலைப்பாயை வி¡¢த்தனர். தலையணைகளைப் போட்டனர். குலம் பொறுக்க முடியாமல் முனகியபடி சா¢ந்தான். முகம் மிக வெளிறியிருந்தது. உதடுகள் காய்ந்து தோலு¡¢ந்திருந்தன. மிகவும் தாகமாக இருந்தான். நாவால் உதடுகளை நீவினான்.

   

"அம்மா....."

   

தீனக்குரல் அம்மாவை அழைக்கிறது, அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

   

அவர்கள் கிட்ட வந்தனர். தலையைக் குனிந்தபடி அம்மாவைச் சூழ நின்றனர். ஒருவன் அம்மாவைத் தொட்டசைத்தான் அம்ம இமைக்க மறுக்கும் விழிகளால் அவர்களைப் பார்த்தாள்.

   

அவர்களை அம்மா அடையாளங் கண்டாள்! நடு நிசிகளில் ...யாருமற்ற வெளிகளில்....தி¡¢கின்ற புதல்வர்கள்!!

   

ஓ! குலமுமா இந்த அப்பாவி அம்மாவை இவ்வளவு காலமும் ஏமாற்றித் தி¡¢ந்தான்?

   

"கோப்பி வச்சுக்குடுங்கோ...."

   

அம்மாவின் தோள்களைக் குலுக்கியபடி ஒருவன் சொன்னான்.

   

அவளுடைய முரட்டு மகன், பு¡¢யமுடியாத புதல்வன் கையைக் காவு கொடுத்து வந்திருக்கிறான்! தாகத்தால் தவிக்கிறான்!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.