(Reading time: 29 - 58 minutes)
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்

   

அம்மா மட்டும் தனித்திருந்தாள். விளக்கில் சிம்னி புகை படிந்திருந்தது. மகள் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். மாடுகள் மூச்சு விடும் சத்தத்தை, கோழிகள் குறுகுறுப்பதை, நாய் மூச்சுவாங்க அங்கும் இங்கும் ஓடுவதை, நிலத்தைப் பிராண்டுவதை...அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள்.

   

சிள்வண்டு ஒன்று கி¡£ச்சென குரலெடுத்து அலற ஆரம்பித்தது. நாய் காரணமற்றுப் பலமுறை குரைத்தது. நிலவைக் கண்டு அது குரைப்பதாக எண்ணினாள்.

   

செங்கா¡¢ப்பசு வேதனையான குரலில் கதறியது "எதுவோ அதைத் துன்புறுத்துவதாகத் தோன்றியது. அம்மாவால் எழுந்து பின்புறம் போக முடியவில்லை. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

   

நடுநிசியின் மணத்தையும், உருவத்தையும் சத்தத்தையும் அம்மா உன்னிப்பாக கவனித்தாள். எங்கோ புல்லாந்தி மலர்ந்திருக்க வேண்டும். குரக்கன் பிட்டு வாசனை மூக்கைக் கமறச் செய்கிறது. புடையன் பாம்பு இரையெடுக்கின்ற போதும் இதே வாசனை! வேலி சரசரத்தது. உடலெங்கும் கபடான அழகுமிக்க முத்திரைகளைப் போர்த்தியபடி கொடிய விஷமுடைய புடையன் பாம்பு வழுவி வழுவி வேலிக்குள் வருகிறதோ?....அம்மாவுக்கு ஒரே பயம்!

   

குலம் எப்போது வருவான்? அவன் கட்டாயம் வரவேண்டும் என அம்மா முருகனை அடிக்கடி வேண்டினாள்.

   

அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. நிலமும், காற்றும் வானும் அதிர்கின்றன. அடிவயிறு குலுங்குகிறது.

   

சிறுவயதில், இருளைக் கண்டு பயந்து அம்மாக்கள் பக்கத்திலேயே ஒட்டியபடி படுத்திருந்த புதல்வர்கள் யாருமற்ற வயல்வெளிகளிலே, பிசாசுகளும் உலவத் தயங்கும் நடுநிசி வேளைகளிலே இவ்வாறு தி¡¢ய எப்படிப் பழகினர்? இந்தப் பயங்கர சத்தங்களை எவ்வாறு தாங்கிக் கொள்கின்றனர்? இந்த ஆபத்துக்களை எவ்வாறு சி¡¢ப்புடன் ஏற்றுக் கொள்கின்றனர்? இவ்வாறு வேகத்தையும் வெஞ்சினத்தையும் அவர்களின் மனங்களில் விதைத்தது யார்?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.