(Reading time: 29 - 58 minutes)
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்

   

"கடவுளே"....எவளெவள் பெத்த பிள்ளையளோ,...இப்பிடி வாய்க்கு வயித்துக்கில்லாமல்...."

   

குண்டு ஒன்று பிசிறடித்த சத்தத்துடன் வெடிக்கின்றது. கேட்டுப் பழக்கமில்லாத வித்தியாசமான வெடிப்பு. மிகவும் வெறுக்கத்தக்க, அருவருப்பான சத்தம் அரை குறையில் பிரசவமான ஒரு உயிரற்ற முண்டத்தைப் போல.

   

அம்மாவுக்கு உடல் 'பட்'டென வியர்த்தது. ஏதோ கெட்ட விஷயம் நடந்தேறியதாக உள்ளுணர்வு சொல்லிற்று.

   

எழுந்து மேசையை நோக்கிப் போனாள். நடுங்கும் கரங்களால் விளக்கைத் தூண்டினாள். இறங்கி முற்றத்துக்கு வந்தாள். சேலையை இழுத்துப் போத்திக்கொண்டு குண்டுச் சத்தம் வந்த திசையில் பார்த்தாள். நாய் அம்மாவின் காலடியில் நின்றது. வாலைக் கால்களுக்கிடையில் நேராகத்தொங்கப் போட்டபடி செவிகளை வானோக்கி உயர்த்தி எதையோ உற்றுக் கேட்டது. மெல்ல உறுமிற்று. பிறகு வேதனையான குரலில் ஊளையிட்டது. வீட்டைச் சுற்றிச்சுற்றி வேகமாக ஓடியது. அம்மாவின் காலடியில் நிற்பதும்...பிறகு ஓடுவதும்...கெட்ட சேதியன்றை அம்மாவுக்கு உணர்த்த அது துடித்ததும் போலும்!

   

செங்கா¡¢ப் பசு மீண்டும் கதறியது. சிள்வண்டின் பிலாக்கண ஓசை மிகைபடக் கேட்கலாயிற்று. குரக்கன் பிட்டுவாசனை எங்கும் நீக்கமற நிறைந்தது.

   

அம்மா சோர்ந்துபோய், துடிக்கும் நெஞ்சுடன் முற்றத்தில் உட்கார்ந்தாள். நெஞ்சு மிக வரண்டு விட்டது. தொண்டைக் குழிக்குள் கனமான வஸ்து ஒன்று அடைத்துவிட்டது போலத் திமிறித்திமிறி மூச்சுவிட்டாள்.

   

சீலனை நினைத்து நினைத்து ஏங்கினாள். குலம் இன்றாவது வருவான் என்ற நம்பிக்கையும் பொய்த்தது. இரவும் பகலும் முற்றி அம்மாவைச் சுற்றிக் கனமாகப் படிந்தது, துன்பம் தரும் குரலில் ஏதோ சொல்லிற்று.

   

சற்றுத் தூரே போகும் ரோட்டில் ஒரு வாகனம் விரைந்து போகும் சத்தம். ஆபத்தான 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.