நோயாளியை யாரோ சிலர் அவசர அவசரமாகச் சுமந்துகொணடு காப்பாற்ற ஓடிக் கொண்டிருப்பதாக....
எங்கோ ஏதோ பிசகு நடந்துவிட்டது.
கோழிஒன்று பா¢தாபமாகக் குழறுகிறது. மரநாய் பிடித்திருக்க வேண்டும். தீனமான அந்தச் சத்தம் மெல்ல மெல்லத் தேய்ந்து தேய்ந்து தூரே போய், மறைகிறது. நாள் துரத்திக் கொண்டு ஓடிப்போய் இயலாமையுடன் திரும்பி வருகிறது.
விழிகள் திறந்தபடியே இருக்க அம்மா கனவு கண்டாள்.
வயல் வெளியில் அம்மா நிற்கிறாள், சூ¡¢யன் பயங்கரமாகக் காய்ச்சுகிறான். மழையும் பெய்கிறது. வெம்மையாக அம்மா உடலைப் பொசுக்கிற்று மழைநீர். அம்மா ஓடுகிறாள், ஒழைத்து இழைத்து ஊருக்குள் நுழைகிறாள். ஒழுங்கைகளில் வெள்ளம் பாய்கிறது ஒரு சிவப்பு நூல்போல இரத்த ஓடை ஒன்று வெள்ளத்தில் கலக்கிறது. அம்மா அதன்வழி போனாள். வெகுதூரம்...வெ-கு-தூ-ர-ம்...கடையில் வந்து சேர்ந்தாள். வீட்டு வாசலில் சீலன் தலையைக் கவிழ்ந்தபடி இருக்கிறான். கண்களிலிருந்து இரத்தம் தாரை தாரையாகக் கொட்டுகிறது; மழைநீ¡¢ல் கலக்கிறது. வீடெங்கும் இரத்தம். நாய் இரத்தத்தை நக்கி நக்கிக் குடிக்கிறது.
கனவில் இரத்தத்தைக் காண்பது கூடாதே! அம்மா வீ¡¢ட நினைத்தாள். இயலாமல் போயிற்று.
குலம் அன்று வரவேயில்லை. அம்மா முழு இரவும் தூங்காமல் விழித்திருந்தாள். அந்தக் கொடிய இரவின் ஒவ்வொரு வினாடியையும் வேதனையுடன் அனுபவித்தாள்.
கிழக்கு வானிலே விடிவெள்ளி காலித்தது. சந்திரனை அது மேற்கு நோக்கி விரட்டிற்று. காகங்கள் துன்பம் நிரம்பிய குரலில், விடிந்து கொண்டிருப்பதைப் பூமிக்குச் சொல்லின. கோழிகள் சிறகடித்துக் கொக்கா¢த்தன, கூவின. முதல் நாள் இரவில் பறிபோன தங்களது தோழனுக்காக அவை அஞ்சலி செலுத்தின. மாடுகள் மடிநிறையப் பால் சுரந்து கனக்கின்ற வேதனைதாளாமல் கன்றுகளை அழைத்தன. செத்த வீட்டுக்கு தலையைக் குனிந்து கொண்டுவரும் ஒருவனைப் போல, சூ¡¢யன் மெல்ல மெல்ல உதயமாகினான்.