கடவுளே! அம்மாவுக்கு கொஞ்சம் பலமளிக்கமாட்டாயோ?
அம்மா எதுவோ கேட்க உன்னினாள். அர்த்தம் குலைந்த பலகீனமான ஒரு முனகல் மட்டுமே வந்தது.
அம்மா அசைய முயற்சித்தாள். பெரும் பிரயாசையுடன் கால்களைப் பெயர்ந்தாள். உடல் முழுவதும் மரண வேதனை போலும் நோவெடுத்தது. ஓரடி எடுத்து வைத்தாள். 'மொளக்'கென ஏதோ சுளுக்கிக் கொண்டது. அம்மா பிருஷ்டம் அடிபட மல்லாந்து விழுந்தாள்.
அவர்கள் அம்மாவைத் தூக்கினர். ஓலைப்பாயை வி¡¢த்தனர். தலையணைகளைப் போட்டனர். பாயில் அம்மாவை மெல்லச் சா¢த்தனர்.
ஊருக்குள் எப்படித்தான் விஷயம் பரவிற்றோ?
அவசர அவசரமாக மண்ணெண்ணெய் விளக்குகள் மீண்டும் ஏற்றப்பட்டன. ஒவ்வொருவராக ஊர்ப் பெண்கள் அம்மாவின் வீட்டு முற்றத்தில் கூடத்தொடங்கினர்.
"கையிலையே வெடிச்சிடுத்தாம்..." ஒருத்தி பீதி கவ்விய குரலில் மற்றவளிடம் குசுகுசுத்ததை, அம்மா கனவிற் கேட்பதைப் போலக் கேட்டாள்.
குலத்தைத் திரும்பிப் பார்த்தாள். அரை மயக்கத்தில் கிடந்தான். சொட்டு சொட்டாக கருஞ்சிவப்பு இரத்தம் தலையணையில் சிந்திக் கொண்டிருந்தது.
முத்து முத்தாக சூடான கண்ணீர் அம்மாவின் கன்னங்களை நனைத்தபடி சிந்தத் தொடங்கிற்று.
3
முதுகுப் பிடிப்புடன் ஒரு முதியபெண். அவள் வெகுவேகமாகக் கிழவியாகிக் கொண்டிருந்தாள். ஊ¡¢ல் ஒருவருடனும் அவள் இப்போ பேசிச் சி¡¢ப்பதில்லை.