இரவு நேரங்களில் அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கும் மரநாய்கள் கோழிகளைக் குழறக் குழற தொண்டையில் திருகியபடி இழுத்துப்போகும். உயிரை வாட்டும் அத்தீனமான ஓலம் மெல்ல மெல்லத் தேய்ந்து தூரே போய் மறையும்.
அம்மா இப்போ குண்டுச் சத்தங்களைச் சட்டை செய்வதில்லை. அவள் துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் பழக்கப்பட்டவள்.
குலத்தினதும் சீலனினதும் ஜாதகங்களைத் தூக்கிக்கொண்டு பெயர் பெற்ற சாத்தி¡¢மார்களைத் தேடிப் போகிறாள்.
சீலன் புனர்பூச நட்சத்திரம்! ராமன் கூடப் புனர்பூச நட்சத்திரம் தான்!!
அவனும் காடுகளில் வசிக்க நேர்ந்தது! கடலைக் கிடக்க நேர்ந்தது! அதர்மர்களுடன் நெடூகலும் போ¡¢ட்டுக் கொள்ள நேர்ந்தது.
வெல்ல முடியாது என்ற இறுமாப்பில் தென்னிலங்கையில் மமதை கொண்டிருந்தவர்களை அவனும் வென்றான்!
சாபத்தால் பீடிக்கப்பட்டவர்களுக்கு அவனும் விமோசனமளித்தான்!
அவனும் பேதங்களைக் கடந்தவன், குரங்கும் வேடனும் அவனது தோழர்கள்!
ஓ! ஆயினும் ராமன் போ¢ல் அன்பு கொண்டவர்கள் அவன் பா¢வால் துன்புற நேர்ந்தது.
தசரதன்!...கோசலை!...சீதை!
குலம் அத்த நட்சத்திரம். அத்தம் அதமம் என்றார்கள் சாத்தி¡¢மார்.
அவன் ராஜத்துரோகமான கா¡¢யங்களில ஈடுபடுவான் என்றும்......