இப்போ தூங்கிக் கொண்டிருக்கிறானே, அது மாதி¡¢! ஒரு காட்டுப் பிறவி"
* * *
இப்போ,
குண்டுச் சத்தங்கள் அடிக்கடி கேட்கின்றன. குண்டுச் சத்தங்களைக் கேட்டவுடன் அம்மா நடுங்குவாள். கண்கள் பீதியால் வி¡¢யும். அடிவயிறு குலுங்கும்.
'அவர்கள்' அடிக்கடி ஊர்களைச் சுற்றி வளைத்தனர். கன ரகவாகனங்களின் உறுமலைக் கேட்டவுடன் அம்மா பாதி உயிரற்றுப் போவாள். நீட்டிய துப்பாக்கிகளுடன் "மகன் எங்கே?" என உறுக்கியபடி அவர்கள் போகும் பாவனையில் பிள்ளைகளை அவர்கள் வளைத்துக் கூட்டிச் செல்லும்போது-அம்மா படும் சஞ்சலம் சொல்லி மாளாது.
"கடவுளே!...நான் சாக முதல் என்ரை பிள்ளையை ஒருக்கால் கண்ணிலை காட்டு..."
ஊ¡¢ல் தினமும் இரவுநேரங்களில் குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. அம்மாவின் காதுச் சவ்வுகள் கிழிந்து விடுமாற்போல் 'கிண்' என வலிக்கின்றன. நெஞ்சு நீரற்று வரண்டு போய் விடுகின்றது.
ஓ! இந்த இரவுகள் மிகவும் கொடியன.
அம்மாவுக்கு மிகவும் பா¢ச்சயமான அந்த வயல் வெளிகளிலே, பனங் கூடல்களுக்குள் தனித்துக் கிடக்கும் திடல்களிலே பொடியன்கள்' குண்டு வெடிக்கவைத்துப் பழகுகின்றார்கள் என ஊர்ப்பெண்கள் அம்மாவிடம் சொல்லினர்.
சீலனும் அவர்களுள் ஒருவனான இருக்கலாமோ? அம்மா பெரும் பீதியுடன் எண்ணினாள். ஆனால் சீலனைக் கண்டதாக ஒரு நாய் கூட அம்மாவிடம் சொல்லவில்லை.