(Reading time: 13 - 25 minutes)

டுத்த பக்கத்தில்

" தேவதை ஒன்று பெண்ணுருவில் வந்ததோ இன்று... நான் புடவை கட்டும் நாட்களில் நீ சொல்லும் வாக்கியம் இது.... அழகாய் இருக்கிறாய் ரொம்ப... நீ புடவை கட்டினால் நாள் முழுக்க உன்னை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்ற தவிப்பு  என்னுள் உருவாகிறதுடி" ... -- என்னை ரசித்தது நீ தான்.. உன்னை ரசிக்க விட்டதும் நான் தான்.. நான் பேசி பழகின முதல் ஆண்மகன் நீ என்பதில் எனக்குள் பெருமை என்கிற மத்தாப்பு ஒளிர்கிறது கோடி கோடியாய் ..

நீ தழுவிய இந்த உடலும், உன் முத்தத்தைப் பெற்ற என் இதழும் , நீ வாழ்ந்து கொண்டிருக்கும் என் இதயமும் வேறொருவருக்கு சொந்தமாவதா ? அதை தாங்க என்னால் இயலுமா ?.. ஐயோ அதை நினைக்க கூடஎனக்கு வலிக்கிறதே கண்ணா.. அதற்கு உயிருடன் என்னை நானே கொள்ளியிட்டிடுவேனே...

மாட்டேன்.. சாக மாட்டேன்... இறந்து போனால்... உயிரற்ற உடல் கூடு கொண்டு உன்னை நினைக்க முடியாது... அழ முடியாது... உனக்காக உருகி கரைந்து உடல் இளைக்க முடியாது... உன்னை எண்ணி எண்ணியேஎனது நாட்களை கடத்த முடியாது... உயிருள்ள வரை உன்னை மட்டுமே நினைத்து உன்னை மட்டுமே என்னவனாக ஏற்று வாழ்வேன் இம்மண்ணில் "...

அடுத்தடுத்த பக்கங்களிலும்   அவன் மீதான அவள் காதலை வரிசையாக அழகாக  சொல்லியிருந்தாள் அந்த டைரியின் கடைசி சில பக்கங்களுக்கு முன்பு வரை..... 

துவரை பொறுமையாக படித்தவன் அதற்கு மேலும் முடியாது போகவே, டைரியை தூக்கி கட்டிலின் மேல் வீசி எறிந்தான்... கண்களில் கண்ணீர் மல்க கதறி அழுதான்....

குட்டிமா... சாரி டா... நீ வருத்தப்படுவன்னு எனக்கு தெரியும்... ஆனா இப்படி உருகி இருப்பன்னு எனக்கு தெரியாம போச்சேடா... படிக்கும்போது அழகா இருந்ததாலோ என்னவோ எனக்கு அவளை பிடிச்சிருந்துச்சுடா... அவளுக்காக எது செய்யவும் தயாரா இருந்தேன் டா.. ஆனா அது  வெறும் இனக்கவர்ச்சி என்று பின்னர் தான் புரிந்ததுடா... உங்கிட்ட பழகினது பொழுபோக்குக்காக இல்லடா...  உன்னை தொட்டது என் மனசுல இருந்து தான் டா... ஆனா உன் வாழ்க்கையை பாழடிக்க நான் விரும்பலடா.. இன்னொருத்திய காதலிக்கிறேன்னு சொன்ன பிறகும் உன்னை கட்டிபிடிச்சேன்.. நீ மறுப்பே சொல்லல...அப்போதான்டி... உணர்ந்தேன்... நான் உனக்கு பொருத்தமில்லை என்று.. அதனால தாண்டி... உன்கிட்ட இருந்து விலகி போனேன்.. உனக்கென்று ஒரு வாழ்கையை அமைச்சுக்க சொன்னேன்... உன்ன காதலிக்கிறதால தான்டி உன்ன விட்டு தூரமா ஒதுங்கி போனேன்...  ஐ மிஸ் யு டி.. செல்லம்... என்கிட்டே வந்துடு டி... நீ  வேற ஒரு வாழ்க்கை அமைச்சுக்கலைனா நீ இன்னும் என்ன விரும்புறேணு  தானடி அர்த்தம்..இல்லடி.. இனி உன்ன விட்டு ஒரு நொடி கூட பிரிய மாட்டேன்டி... இப்போவே உன்கிட்ட வரேன்டி...

அவசரம் அவசரமாக ஆனந்தியின்  எண்ணிற்கு தொடர்பு கொண்டான்..

“அக்கா நான் உடனே என் குட்டிமாவ பாக்கணும்.. அவ எங்க இருக்கிறா ? சொல்லுங்க அக்கா..”

“டைரி படிச்சியா ? முழுவதுமாய் படிச்சியா...”

“ஆமாக்கா”

“இல்லை... நீ முழுசா படிக்கலை... அப்படி நீ படிச்சிருந்தா உனக்கே அவ இருக்குற இடம் தெரிஞ்சிடும்... உனக்காக தான் அவ காத்துகிட்டிருக்கிறா ....” என்று போனை துண்டித்து விட்டாள்...

வீசி எறிந்த டைரியை தேடி எடுத்து கடைசி சில பக்கங்களை படிக்க ஆரம்பித்தான்...

நான் உன்னை காதலித்தேன்... இன்றும் காதலிக்கிறேன்.. நீ என்னை விரும்பவில்லை.. ஏனெனில் உன் நெஞ்சமதில் நானில்லையே.... இன்னொருத்தி இருக்கின்றாளே..  என்னவனே.. படிக்கும் காலத்தில் நான்உனக்கு தோழியாக மட்டுமே இருந்தேன்... அப்பொழுதே நீ அவளை நேசித்தாய்.. ஆனால் அவள் உன்னை நிராகரித்தாள்... இன்றும் உன் மனதில் அவள் தான் இருக்கின்றாள்... இது தெரிந்தும் நான் உன்னை காதலித்தேன்.. உன்னிடம் தெரியப் படுத்தினேன்...  நீ என் காதலை நிராகரித்தாய்.. என்னை ஒதுக்கினாய்.. விரட்டினாய்.. உன்னிடம் பேச தடை விதித்தாய்.. ஆயிரம் ஊசிகள் என் இதயத்தில் குத்தி கிழித்து  காயம் செய்ததை நீ அறிந்திருக்க மாட்டாய் தான்... என் மனதில் நீ இருந்ததாலே அன்று உன் அணைப்பினில் நான் அடங்கினேன்... உன் நெஞ்சில் முகம் புதைத்தேன்..  உன் இதழொற்றுதலையும் நடுக்கத்துடன்பெற்றுகொண்டேன்... உன் மனதில் நான் இல்லாமலா நீ இவ்வாறு செய்தாய்...? இந்த கேள்வி இன்றும் என் உயிரை கொத்தி தின்கிறது... அந்த சம்பவத்திற்கு பிறகே உன் விலகல் நான் முழுமையாய் உணர்ந்தேன்..ஏனென்று கேட்டதற்கு மௌனம் சாதித்தாய்... உன்னை விடுத்து வேறொருவரை மணக்க சொன்னாய்... என்னால் அது முடியுமா ? எனக்கு என் இந்த மரண தண்டனை தருகின்றாய்.. இதற்கு நீயே என்னை கொன்று புதைத்திருக்கலாமே..  என்னை அன்னையாய் உனக்கு பிடித்தது... தோழியாய் பிடித்தது... ஆனால் காதலியாக மட்டும் உன்னால் என்னை ஏற்றுகொள்ள முடியாது போனது என் விதியன்றி வேறென்ன நான் சொல்ல ?..  மீராவின் கண்ணன் மீராவிடமே... அதுபோல்... என்னவன் நீ என்னிடமே ... உன் நினைவுகள் மட்டுமே நான் இன்று வரை உயிர் வாழ காரணம்.. நான் வாழும் வரை என்னுள் நீ இருப்பாய்...

உன்னை நினைத்தே இறுதி வரை வாழ ஆசைப்பட்டேன்.. ஆனால் கடவுள் எனக்கு அந்த பாக்கியம் தரவில்லை... உன்னை நினைத்தே சாலையில்  சென்றேன், குறுக்கே வந்த லாரியில் அடிபட்டு தூக்கி வீசி எரியபட்டேன்.. மருத்துவமனையில் பல மாதங்கள் தங்கி இருந்தேன்... கோமாவில் இருந்ததாக சொன்னார்கள்.. ஆனந்தி என்னுடனே இருந்தாள்.. ஒரு நாள் சுயநினைவு அடைந்த பொழுது இந்த டைரியில் இப்போது நீ படித்து கொண்டிருக்கும் வரிகளை.. உனக்காக உன்னிடம் சேர்பிப்பதற்காக எழுதினேன்...

மன்னவா  பூ மாலையோடு என்னை பார்க்கவா.. உன் இதயத்தின் ஒரு ஓரத்தில் நான் இருந்தால்...

காதலியாக நான் உன்னுள் இருப்பேனா என்று அறியேன்.. குறைந்தபட்சம் மூன்றாவது மனுஷியாக  நானிருந்தாலும் நீ என்னை பார்க்க வரலாம்...

உன் வரவுக்காக நான் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்...

வருவாயா என் ..............

ஆழப்பேரலையில் அடித்து செல்லப்பட்ட தாக்கத்துடன் நின்றிருந்தான் அவன்... என்  கண்மணி விபத்தில் சிக்கினாளா ?... எப்படியெல்லாம் துடித்திருப்பாள்.. எல்லாம் என்னால் அல்லவா.. இனி காலம் முழுவதும்அவளை என் மார்போடு அணைத்துக்கொண்டு  வாழுவேன்... அவள் கண்ணில் ஒரு சொட்டு நீர் கூட இனி வர விடாது காப்பேன்... என்று பலவாறு சிந்தித்துக்கொண்டு டைரியில் அவள் குறிப்பிட முகவரிக்குவந்தான்...

பூக்களின் நறுமணம் காற்றில் தவழ்ந்து வந்து அவன் நாசியை எட்டியது.. நந்தவனம் தோற்றுப்போகும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் நறுமண பூக்கள் பல வண்ணங்களில் பூத்து குலுங்கியது..

அதன் காவலாளி வந்து நீங்க என்றான் ?

“நான் அனுஷிஹான் ..”

“நீங்க தானா அது..  உள்ளே போங்க... அம்மா உங்களுக்காக தான் காத்துட்டு இருக்குறாங்க..”

சிறு தலை அசைவுடன் அங்கிருந்து அகன்றவன் சிறிய அளவில் அழகான ஒரு வீடு தோட்டத்தின் மத்தியில் அமைந்திருப்பதை கண்டான்.. அதன் உள்ளே சென்று பார்த்தான் பல வகைகளில் அவனது உருவப்படம் வரைந்து மாட்டப்பட்டிருந்தது.. அதை ரசித்துகொண்டே,

“குட்டிமா குட்டிமா நான் வந்துட்டேன் டா....  சீக்கிரம் வா டா.. எங்க டா இருக்கிற... ?.. இப்போ நீ வரல.. நான் உன்ன தேடி வந்துடுவேன்டி.. என்ன வந்துடவா ? “

“நீ அங்கே போக கூடாது...” என்ற குரல் கேடு திரும்பி பார்த்தான்..

ஆனந்தி நின்றிருந்தாள் ...

“அக்கா... ஏன் நான் போக கூடாது ?... அவள் என்னவள் அக்கா...”

“இத நீ சொல்லணும் அதை கேட்டு சந்தோசப்படணும் என்று தான் அவளும் காத்துட்டுஇருந்தா...” என்றவள் கண்கள் கலங்கி இருந்தன..

“சரி நீ என்கூட வா..” என்று அவனை அழைத்துச்  சென்றவள் அங்கிருந்த திசையில் கை காட்டினாள்... அதன் அருகே சென்றவன்... முகம் பல்வேறு உணர்சிகளை காட்டியது.. மண்டியிட்டு முகம் பொத்தி அழுதான்...அங்கே அவனின் காதலி சிரித்து கொண்டிருந்தாள் மலர் வளையமிட்ட கல்லறையில்...

“நினைவு திரும்பிய கொஞ்ச நாட்களிலேயே அவள் இறந்துவிட்டாள்.. அவளின் பிரிவு துயரம் தாங்காது அவளை பெற்றவர்களும் போய் சேர்ந்துவிட்டார்கள்.. அவளின் கடைசி ஆசை ஒன்று இருக்கிறது... இதோ கடிதம்.. இதை.. படித்துப்பார்... புரியும்”  என்றாள் ஆனந்தி..

எங்கே என் மலர்மாலை... கொண்டுவந்தாயா கண்ணா?.. உன் கையால் நான் சூடபோகும் மாலையிலே என் ஆத்மா சாந்திபெரும்...  ஆம் அது என்னை பொருத்தவரை மணமாலை.. என்று அதில் எழுத்துக்கள் பொரிக்கப்படிருந்தன...

அந்த கடிதத்தின் பின்பக்கத்தில் நீ சந்தோசமாக வாழ வேண்டும்.. ஆதலாலே என் ஆயுளும் சேர்த்து உனக்கு தந்திருக்கிறேன்... ஒருவேளை.. உன் மனதில் நான் இருந்தால்... எனக்கு அழிவே இல்லையே... ஆம் நீ உள்ளவரை நான் உன்னுடன் வாழ்ந்துகொண்டே இருப்பேனே... அனால் அவ்வாறு நான் உன்னுள் வாழ வேண்டுமெனில் நீ ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. அதுவும் உனக்கு பிடித்த பெண்ணைமணமுடிக்க வேண்டும்.. இது என் இறுதி ஆசை... இப்படிக்கு உன்னை நெஞ்சிலே நிறைத்த உன் அனு...

கையில் இருந்த மாலையை அவளின் கல்லறையில் வைத்தவன் அதன் மேலே தலை வைத்து படுத்துக் கொண்டான்... ஏனோ அவனுக்கு அவள் மடியில் படுத்த ஒரு திருப்தி... அவள் அவனை தென்றலாய் தலை கோதி விட்டாள் ... அவனை இதயக் கூட்டினில் வைத்து பூஜித்தவள்... இன்று அவனின் நெஞ்சமதில் நிறைந்துவிட்டாள் காதலியாக......

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.