(Reading time: 33 - 66 minutes)

மகனே! – நிவேதா

This is entry #34 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

திகாலை 6 மணி, மலர் எனும் பெண் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பிரசவ வழியில் துடித்து கொண்டு இருந்தாள். மலருடைய கணவன் கதிரேசன் என்ன செய்வது என தெரியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான். குழந்தையின் தலை திரும்பி உள்ளதால் சுக  பிரசவம் ஆவது கஷ்டம் என நர்ஸ் சொன்னதை கேட்ட கதிரேசனிர்க்கு மேலும் பதற்றம் அதிகம் ஆனது. டாக்டர் கயல்விழி, பிரசவ வார்டில் நுழைந்து 10 நிமிடத்தில் குழந்தையின் 'வீச்' என்னும் அழுகை சத்தம் கேட்டது. அதை கேட்டும் கதிரேசனின் மனம் மலரின் நிலையை யூகித்து கொண்டு இருந்தது. சற்று நேரத்தில் டாக்டர் கயல்விழி வெளியே வந்து கதிரேசனிடம் "சுக பிரசவத்தில் உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளான். தாயும்,சேயும் நலம்" என்று கூறினாள்.

ன்னுடைய வாரிசையும்,மனைவியையும் காண ஆவலுடன் அறையின் உள்ளே நுழைந்தான். மலர் தன் கணவனை கண்டதும் ஆனந்த கண்ணீர் சிந்தினாள். 10 மாதங்களாக சுமந்த தன் குழந்தையை வெற்றிகரமாக இந்த உலகிற்கு அறிமுகம் செய்த சந்தோஷம் மலரின் கண்களில் தெரிந்ததை கதிரேசன் புரிந்து கொண்டான். கதிரேசன் தன் ஆண் வாரிசை தூக்கி முத்த மிட்டான். மலர் தன் குழந்தையை கையில் ஏந்தி "மகனே!என்னை விட்டு என்றும் பிரியாமல் நீ இருப்பாயா?"என்று கேட்டு முத்தமிட்டாள். இந்த காட்சியை கண்ட கதிரேசன் "உன் மகன் என்றும் பிரியமாட்டான் மலர்" என்று கூறி ஆறுதல்படுத்தினான். சுக பிரசவம் என்பதால் ஒரே வாரத்தில் மலரும், குழந்தையும் வீட்டிற்கு வந்து விட்டனர். கதிரேசன்,மலர் இருவருக்குமே தாய்,தந்தை இல்லாததால் அவர்கள் பக்கத்து வீட்டு லக்ஷ்மி அம்மா தான் இவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றாள். மலரும் அவளை தன் அம்மாவாக எண்ணினாள்.

திரேசன் அரசு அலுவலகத்தில் கணக்கு பார்ப்பவன். காலை 9 மணி அளவில் அலுவலகத்திற்கு சென்றால் மாலை வீடு திரும்ப 6 மணி ஆகி விடும். மலரே வீட்டு வேலையையும், குழந்தையையும் பார்த்து கொள்ளவேண்டிய நிலை. சொந்தம் என்று யாரும் இல்லாததால் தங்களுக்கு எல்லாமும் ஆக விளங்கும் லக்ஷ்மி அம்மா விடம் சென்று "அம்மா,என் மகனிற்கு ஒரு பெயர் வையுங்கள் "என்றாள் மலர்."எனக்கு குழந்தை பிறந்தால் கார்த்திக்னு வைக்கணும்னு இருந்தேன். அது கடைசி வரைக்கும் நடக்கலை. என் பேரனுக்கு அதே பெயரே வைச்சிருவோம்னு குழந்தையின் காதில் 3 முறை 'கார்த்திக்'"என்று கூப்பிட்டாள். ஊரில் உள்ள எல்லோருக்கும் அவன் கார்த்திக் ஆக இருந்தாலும் மலர் அவனை எப்போதும் "மகனே!" என்று தான் கூப்பிடுவாள். தன்னுடைய வருமானம் வீடு வாடகைக்கும்,அரிசி,பருப்பு வாங்குவதேற்கே பத்தாமல் இருந்ததால் தினமும் 2 மணி நேரம் ஓவர்டைம் பார்க்க ஆரம்பித்தான் கதிரேசன். அதனால் மலர் உடனும்,கார்த்திக் உடனும் அதிக நேரம் செலவழிக்கமுடியவில்லை. மலரும் எப்பொழுதும் மகனே,மகனே என்று தன் குழந்தையை கொஞ்சி கொண்டே இருப்பாள்.

Magane

ரு நாள் இரவு குழந்தையின் சத்தம் ஊரையே எழுப்பியது.லக்ஷ்மி குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு "மலர்,என்னமா ஆச்சு ?ஏன் குழந்தை இவ்ளோ நேரமா அழறான்?கொஞ்சம் கதவ திரமா" என்றாள். கண்களில் கண்ணீர் பொங்க கதவை திறந்த மலர் "என்னனே தெரியலைமா, ரொம்ப நேரமா அழறான். பால் குடுத்தாலும் குடிக்க மாட்டேன்றான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு மா" என்றாள். "ஒன்னும் இருக்காது.குடல் விரியும் போது குழந்தைக்கு வயிறு வழிச்சு இருக்கும் அதான் சொல்ல தெரியாம அழுது இருப்பான். அந்த வுட்வர்ட்ஸ கொஞ்சம் எடுப்பா கதிரேசா.." என்றாள். லக்ஷ்மி. அதை குடித்து 10 நிமிடத்தில் கார்த்திக் உறங்கிவிட்டான். "இதுக்கு போய் அழறதா மலர்.உனக்கு ஒரு பையன் இருக்கான். ஆனா நீ இன்னும் குழந்த மாதிரி தான் இருக்க. ஒன்னும் கவலப்படாம ரெண்டு பேரும் தூங்குங்க" என்று ஆறுதல் படுத்திவிட்டு லக்ஷ்மி சென்றாள்.

மாதங்கள் நகர்ந்தன,கார்த்திக் தவள ஆரம்பித்தான்.கார்த்திக் தவழும் போது எல்லாம் மலர் அவனை தூக்கி வைத்து கொள்வாள்.இதை கண்ட லக்ஷ்மி "ஏன் மலர்,அவனை தவழவே விட மாற்ற.குழந்தை விளையாடிட்டு போறான் விடு "என்றாள்.அதற்கு மலர் "அவன் தவழ்ந்தா மூட்டு தேஞ்சு கருத்திடும் மா"என்று சிறிய புன்னகையுடன் கூறினாள்.மலரின் கவனம் முழுவதும் தன் மகனின் மீதே இருந்ததால் கதிரசனின் ஆரோக்கியத்தை கவனிக்க மறந்தாள்..கதிரேசனும் மலரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. கார்த்திக்கின் செயல்கள் அனைத்தையும் லக்ஷ்மியிடம் தினமும் கூறி பூரிப்பு அடைவாள். வருடங்கள் நகர்ந்தன கார்த்திக் பள்ளி செல்லும் காலமும் வந்தது. மலர்க்கு தன் மகனிடம் இருந்து ஏற்படும் முதல் பிரிவு..முதலில் கார்த்திக்காலும் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை. தினமும் காலை பள்ளியில் கொண்டு அவனை விடுவாள் ,மதியம் உணவை சூடாக சமைத்து கொண்டு போய் ஊட்டி விடுவாள்,மாலையில் அவனை அழைத்து வரும்போது "மகனே! இன்னைக்கு என்னலாம் பண்ண?"என்று மலர் விசாரித்து கொண்டே வருவாள்..வீட்டிற்கு வந்ததும் "மகனே!உனக்கு பிடிச்ச வாழைக்காய் பஜ்ஜி போற்றுகேன்.சாப்பிட்டுவிட்டு வீட்டு பாடம் படிக்கலாம்"என்று கூரினாள்.

கதிரேசன் வீட்டிற்குள் நுழைந்ததும்"கார்த்திக் எங்க மலர்?அழாம ஸ்கூல் போய்ட்டு வரானா?".என்று கேட்டான்."இப்போ தாங்க தூங்கினான்.அவன் சந்தோஷமா தாங்க போய்ட்டு வரான்.எனக்கு தான் அவனை பிரிஞ்சு இருக்க கஷ்டமா இருக்கு "என்று சொல்லும்போதே மலரின் கண்களில் இருந்து கண்ணீர் பொங்கியது.மலரின் தனிமையை போக்க வேண்டும் என்று எண்ணிய கதிரேசன் "மலர் நீ தான் காலேஜ் படிக்கும்போது தையல்கிளாஸ் போனியே,பொழுது போக்காய் காலையில் மட்டும் தைக்க ஆரம்பி"என்று புத்திசாளித்தனமாக கூறினான். மலரும் வீட்டுக்கு தேவையான ஸ்க்ரீன் கிளாத்,தலையணை உரை தைப்பது என தினமும் தையலுக்கு 2 மணி நேரம் ஒதுக்க ஆரம்பித்தாள்.

ருடங்கள் ஓட ஆரம்பித்தன கார்த்திக் 8 ஆம் வகுப்பு வந்துவிட்டான்,மலரும் சுடிதார்,ஜாக்கெட்,ஸ்கிர்ட் என குறைந்த கூலியில் தைத்து தர ஆரம்பித்தாள். கதிரேசனுக்கும் ப்ரோமோஷன் கிடைத்ததால் அவனுக்கு வேலை பளு அதிகமானது.ஒரு நாள் மாலை பள்ளியில் இருந்து மலரும்,கார்த்திக்கும் நடந்து வந்து கொண்டு இருந்தனர்.அப்போது கார்த்திக்கின் முகம் வாடி இருந்தது.இதை கவனித்த மலர் "மகனே!என்னப்பா ஆச்சு? ஸ்கூல்ல வாத்தியார் திட்டினாரா?திட்டுர அளவுக்கு என் மகன் தப்பு பண்ண மாட்டானே!.மகனே எதுநாளும் சொல்லுப்பா" என்றாள். "என் கிளாஸ் பசங்களாம் ஸ்கூல்க்கு சைக்கில்ல வராங்க,நான் மட்டும் தான் இப்படி அம்மா கூட நடந்து போய்ட்டு இருக்கேனு"கடுப்பா பதில் சொன்னான்."ஏன் மகனே!அம்மா கூட வர பிடிக்கலையா?"என்று ஏக்கத்துடன் வினவினாள் மலர்."நான் இன்னும் என்ன சின்ன பையனா, எல்லாரும் என்ன 'அம்மா பிள்ளை'னு கிண்டல் பண்றாங்க.எனக்கு வெக்கமா இருக்கு. இனி நான் சைக்கில்ல தான் போவேன்" என்று திடமாக கூறினான் கார்த்திக். "அப்பா வந்ததும் நீயே கேளு.அவர் ஒத்துகிட்டா நீ வாங்கிகோ"என்று சமாதானம் படுத்தினாள் மலர்.

திரேசன் அவளுக்கு சாதகமாக தான் எப்போதும் இருப்பான் என்று நம்பிக்கை கொண்டிருந்தாள்.அந்த நம்பிக்கை சிறிது நேரம் கூட நீளவில்லை."ட்ரிங்,ட்ரிங்,ட்ரிங்,ட்ரிங்"என்று தொலைபேசி மணி ஒலித்தது.தொலைபேசியை எடுத்த மலர் "ஆமா,நான் தான் பேசுறேன்.ஹம்.."அதை தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு மௌனம்.அவள் கண்களில் இருந்து கண்ணீர் நிறமற்ற அருவியை போல கொட்டியது .இதை கண்ட கார்த்திக் ஒன்றும் புரியாமல் லக்ஷ்மி அம்மாவை அழைத்து வர சென்றான்."மலர் என்ன மா ஆச்சு?சொல்லு மா.ஏன் இப்படி அழுற."என்று கேட்டாள். லக்ஷ்மி அம்மாவை கட்டி கொண்டு "என் உயிர் மூச்சு என்னை தனியாக விட்டு போயிடுச்சுமா " என்று கதற ஆரம்பித்தாள். தங்கள் செவிகளை நம்ப முடியாமல் கார்த்திக்கும் லக்ஷ்மி அம்மாவும் ஒரு நிமிடம் நிசப்தமாக விழித்தனர். "என்ன மா சொல்றீங்க.எனக்கு பயமா இருக்குமா "என்று கார்த்திகின் கதறல் வீட்டினுள் எதிர் ஒலித்தது. "யாரும்மா பேசுனா ஃபோன்ல" என்று உறைந்து போய் இருந்த மலரை லக்ஷ்மி அம்மா உலுக்கினாள். "அவர் ஆபீஸ்ல இருந்து பேசுனாங்க. அவர் நெஞ்சு அடைப்பால் வேலை செஞ்சிட்டு இருக்கும்போதே இறந்துவிட்டார்னு சொன்னாங்க" என்று சொன்னபடியே கதற ஆரம்பித்தாள். இதை கண்டு கார்த்திக்கும் இடிந்து போய் ஒரு ஓரத்தில் உட்கார்ந்தான். நடக்கும் நிகழ்வுகள் புரியாமல் லக்ஷ்மி அம்மா திகைத்து நின்றாள்.

டுத்த சில நிமிடங்களில் அனைவரின் மனதிலும் மரணமாய் ஒலித்தது ஆம்புலன்ஸின் சைரன் சத்தம். வீட்டு வாசலில் நின்ற அம்புலன்சை சுற்றி தெருவே கூடியது.கதிரேசனின் சடலத்தை கண்ட மலரின் முகம் வெளிரி போனது. கார்த்திக் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உயிர் இருந்தும் சடலம் போல் நின்றான்.லக்ஷ்மிக்கு யாருக்கு தைரியம் சொல்வதென தெரியாமல் மௌனமாய் இருந்தாள்.பொழுது விடிந்தது.காலை 9 மணி அடித்ததும் "என்னங்க,9 மணி ஆச்சு.எப்போதும் ஆபீஸ் போய்ட்டு எனக்கு நீங்க பேசுவீங்களே எழுந்திரிங்க. ஏங்க ஃபோன் பேசுங்க "என்று பிதற்ற ஆரம்பித்தாள் மலர்.இதை கண்ட அனைவரும் மலரின் நிலையை கண்டு வருந்தினர். "அம்மா,என்னமா ஓலருரிங்க. அப்பா நம்மகிட்டலாம் இனி பேசமாட்டாறு"என்று கார்த்திக் மலரை அமைதிப்படுத்தினான். "மகனே! அப்பா நம்மல விட்டு போய்டாரு. நீ எப்போதும் என் கூடவே இருப்பியாப்பா" என்று கார்த்திகின் கன்னத்தை தழுவிய படி புலம்ப ஆரம்பித்தாள். "அம்மா நான் எப்போதும் உங்க கூடையே தான் மா இருப்பேன் அழாதீங்க" என்று கார்த்திக் ஆறுதல் படுத்தினான்.லக்ஷ்மி அம்மாவும் "உன் மகன் என் நிலையிலும் உன்னை பிரிய மாட்டான்.கவலை படாத மலர் "என்று தன் தோழில் சாய வைத்து தேற்றினாள்.

மாலை நேரம் நெரிங்கியது.மலருக்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் அனைத்தும் நடக்க ஆரம்பித்தன.ஆனால் மலரின் மனம் முழுவதும் தன் கதிரேசனின் நினைவுகளையே கண்ணுக்கு முன்னே ஒட்டி கொண்டு இருந்தது.தன் கதிரேசனை கடைசியாக ஒரு முறை தொட்டு தழுவினாள்.கதிரவன் மறையும் பொழுதில் மலர் எவ்வாறு துவண்டு உதிருமோ அதை போலவே கதிரேசனின் உடல் பிரியும் நேரத்தில் மலரின் மனமும் துவண்டு உதிர ஆரம்பித்தது.கார்த்திக் மனதில் இந்த உலகமே இருளாக தெரிந்தது.வேல்வி தீயின் சுடருடன் சேர்ந்து கார்த்திகின் கனவுகளும் சாம்பல் ஆனது.ஒரு வாரம் கடந்தது.அன்று ஒரு மாலை பொழுதில் "டிங் டிங்"என்று வீட்டின் கால்லிங் பெல் ஒலித்தது."யாரு அது"என்று தன் வறண்டு போன குரலில் கேட்டுகொண்டே கதவை திறந்தாள்.கதிரேசனின் ஆபீஸ் அதிகாரியும்,அவர் அசிஸ்டன்ட்டும் நின்று கொண்டு இருந்தனர். "வாங்க சார்!உள்ள வாங்க" என்று அழைத்து அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள். "சொல்லுங்க சார் ,என்ன விஷயமா என்ன பார்க்க வந்து இருக்கீங்க? "என்று கேட்டாள் மலர். "உன் கணவன் உன்னையும் உன் மகனையும் கைவிட்டு போலமா. உங்களுக்கு அவர் ஆபீஸ்ல ஓவர் டைம் பார்த்து அக்கௌன்ட்ல சேர்த்து வைத்த காசு ஒரு லட்சம் இருக்கு, அதை குடுத்திட்டு போலாமேனு தான் வந்தோம்.இந்தாமா இதை வச்சுகோ. உன் மகனுடைய படிப்புக்கு ரொம்பவே உதவியா இருக்கும்." என்று மேனேஜர் கூறினார். இதை கேட்கும் போதே மலரின் கண்களில் கண்ணீர் தழும்ப ஆரம்பித்தது. "அழாதமா, இந்த பணத்தை வச்சு எதாச்சும் உனக்கு தெரிஞ்ச தொழில் பண்ணு. கதிரேசனுக்கு தன் மகனை டாக்டர் ஆக்கணும்னு ஆசை. தம்பி கார்த்திக் நல்லா படிச்சு உங்க அப்பா ஆசையை நிறைவேத்துபா "என்று சொல்லி விட்டு மேனேஜரும் அவரது அசிஸ்டன்டும் சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.