(Reading time: 33 - 66 minutes)

 

ல்யாண நாளும் குறிச்சாச்சு,வேலைஎல்லாத்தையும் ராகுல் வீட்டாரே பார்த்துகொண்டனர். மலர் தன் அண்ணன் பாஸ்கரையும்,கடையில வேலை பார்பவர்களை மட்டுமே திருமணத்திற்கு அழைத்தாள்.திருமணத்திற்கு முன்னரே கார்த்திக்கும்,கீர்த்தனாவும் போனில் பேச ஆரம்பித்தனர்.தன் மகனை பிறர் சொந்தமாக ஏற்பதற்கு இதையே ஒத்திகையாக மலர் எடுத்துகொண்டாள். கதிரேசன் மறைவுக்கு பின் இன்று தான் மலர் தனிமையை மீண்டும் உணர்ந்தாள்.கல்யாணமும் நன்றாக நடந்து முடிந்தது. சந்தோஷத்தின் உச்சியில் இருந்து கார்த்திக் அன்று தான் சிறிது கீழே இறங்கினான். ஒரே வாரத்தில் கார்த்திக்கும்,கீர்த்தனாவும் புறப்படும் ஏற்பாடுகள் அனைத்தும் வேகமாக நடந்து கொண்டு இருந்தது.கார்த்திக் இந்த உலகையும் மறந்தான் ,இந்நாள் வரை உலகமாய் இருந்த தன் தாயையும் மறந்து தன் மாமியார் வீட்லேயே இருந்தான்.மலரின் சுவாசம் முழுதாக பரிக்கபடும் நாள் வந்தது."அம்மா இங்க இருக்கிற டெல்லிக்கு தானே போறேன் வருத்தபடாதீங்க. ராகுல் இங்க தானே இருக்கான்.அவன் என்னை விட உங்களை நல்லா பார்த்துப்பான், நான் உங்களிடம் டெய்லி போன்ல பேசுறேன்."என்று கார்த்திக் வெறும் வார்த்தைகளை உரைத்தான். தன் மனதில் உள்ளதை வெளி காட்டாமல் "உன் சந்தோஷம் தான் மகனே என் சந்தோசம்.பத்திரமா போய்ட்டு வா."என்றாள் மலர்.மலரின் வார்த்தைகளில் உயிரோட்டம் இருந்தாலும் தன் மகன் பிறிந்து செல்வதை கண்டு அவள் மனம் சிதைந்துப்போனது. கார்த்திக்கின் பிரிவு மலரை ஒரு தனிமை சிறையில் அடைத்தது. ராகுல் அவ்வபோது வந்து ஆறுதல் படுத்தினாலும் அவள் மனம் திறக்கவேயில்லை.தினமும் பேசுவது குறைந்து ஞாயிற்றுகிழமை ஒரு சில நிமிடங்கள் பேசுவான்.கீர்த்தனா வேலையாக இருப்பதாக சொல்லி சமாளிப்பான்..கார்த்திக் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வருவான். கீர்த்தனா கார்த்திக் வீட்டில் சௌகரியம்யில்லை என்று தன் தந்தை வீட்டிலையே இருந்துகொள்வாள்.

வ்வொரு ஞாயிற்றுகிழமையும் மலர் தன் மகனின் அழைப்புகாக கார்த்திக் வாங்கி குடுத்த செல் போனையே பார்த்துகொண்டு இருப்பாள்.அன்று ஒரு ஞாயிற்றுகிழமை சமையல் அறையில் சமைத்து கொண்டு இருந்தாள் மலர்.போன் அடித்ததும் வேகமாக ஓடி வந்து எடுத்தாள்.

"சின்ன தாய் அவள் தந்த ராசாவே....

முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே..."

இந்த பாட்டை காலர் டுயின் ஆக வைக்க ஆசை பட்டாள் எண் ஒன்றை அழுத்தவும்" என்று கூறிய கம்ப்யூட்டர் குரல் மலருக்கு ஏமாற்றத்தை தந்தது. வருடங்கள் கடந்தன.கார்த்திக்கிற்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது.அவளுக்கு 'பிரியா" என்று பெயர் சூட்டினர்.முதல் பிறந்தநாளிற்கு ஒரு பார்ட்டியே நடைப்பெற்றது. முதலில் குழந்தைக்கு குலதெய்வம் கோவிலில் மொட்டை போடணும் என்ற மலரின் ஆசை புதைக்கப்பட்டது."அம்மா பார்ட்டி அன்னைக்கு பிரியா மொட்டை போட்டு இருந்தால் அழகா இருக்க மாட்டா.  எல்லாரும் கிண்டல் செய்வாங்க.பொறுமையா அடிச்சுகலாம் விடுங்க "என்று மலரின் ஆசையை உதாசீன படுத்தினான்.

ருடங்கள் ஓடியது.கார்த்திக் ஊருக்கு வருவதும் குறைந்தது.ராகுலின் திருமணத்திற்கு வந்த போதும் மலருடன் பேச நேரம் இல்லை.மகன் தான் பேசல பேத்திய வாச்சும் போய் பார்த்துவிட்டு வருவோம்னு ஒரு நாள் ராகுலை அழைத்து "டெல்லி போக எவ்ளோ நேரம்பா ஆகும்.பஸ் டிக்கெட் கொஞ்சம் போட்டு தாப்பா. என் ராஜாத்தி பிரியாவை பார்க்கனும் போல இருக்கு" என்று ஏக்கத்துடன் மலர் கூறினாள். "அம்மா பஸ்லலாம் போனா 2 நாளைக்கு மேல ஆகும்.ரயில்ல போனா ஒரே நாள்ல போகிடலாம்.வேணும்னா நான் உங்களுக்கு பிளேன் டிக்கெட் போட்டு தரேன்மா "என்று ஆலோசனை தந்தான். மலரின் மனம் "என் மகனுக்கே அக்கறை இல்லை அம்மாவுக்கு டிக்கெட் போட்டு கூப்பிடணும்னு ஆனா அவன் கூடையே வளர்ந்த இந்த பிள்ளைக்கு அக்கறை இருக்கே "என்று மனசுகுள்ளேயே பிதற்றினாள். மலரின் மனதை புரிந்துகொண்ட ராகுல் அமைதியாக சென்றுவிட்டான். ராகுலும் பலமுறை கார்த்திக்கிடம் தன் அம்மாவை மறந்திடாமல் கவனிக்க சொல்லுவான்.ஆனால் கார்த்திக் ஒவ்வொரு முறையும் வேலை ஜாஸ்தி,டைம் இல்ல,அலுப்பா இருக்கு,கீர்த்தனாவின் ஆபீஸ் விழாவுக்கு போறேன்,ஹோஸ்பிட்டல்ல முக்கியமான ஆபரேஷன் என்று ஆயிரம் காரணங்கள் சொல்லி தட்டி கொண்டே இருப்பான்.மலரும் நாட்கள் நகர நகர தனிமையில் வாடி உதிர ஆரம்பித்தாள். அவள் அண்ணன் பாஸ்கரும்,ராகுலும் அவ்வபோது வந்து பார்த்து சென்று கொண்டு தான் இருந்தனர்.

ரு கட்டத்தில் அவள் நிலை மிக மோசமானது. மலரின் நிலலையை கேள்வி பட்டு கார்த்திக் "கீர்த்தனா அம்மாவுக்கு ரொம்ப உடம்பு முடியலைன்னு எங்க பாஸ்கர் மாமா போன் பண்ணாங்க.வா போயிட்டு வந்திருவோம் கெளம்பு" என்று பதற்றத்துடன் கூறினான். "கார்த்திக் இன்னைக்கா சான்ஸ்யில்ல. நாளைக்கு நம்ம பிரியா ஓட ஸ்கூல் டே. அவள் டான்ஸ் பண்ண போறாள். அதுலாம் உங்களுக்கு ஞாபகமே இருக்காதே. அம்மா அம்மானு குதிக்காதீங்க" என்று அதட்டினாள் கீர்த்தனா. கார்த்திக்கின் கண்கள் கோவத்திலும்,தன் தாயை காணவேண்டும் என்ற ஏக்கத்திலும் கண்ணீராக பொங்கியது."ஏங்க!நான் போ வேணாம்னு சொல்லலையே.ரெண்டு நாள் கழிச்சு போலாம்.இவள் ஸ்கூல் டேக்கு நம்ம போலனா பிள்ளை ஏங்கிடுவாங்க பாவம்"என்று கார்த்திக் தலை முடியை கோதியப்படி அமைதி படுத்தினாள்.அன்று இரவு முழுவதும் கார்த்திக் தன் தாய் தனக்காக எத்தனை விஷயங்களை விட்டு கொடுத்து இருக்கிறாள் என்று நினைத்து கொண்டே இருந்தான். காலையில் எழுந்ததும் மீண்டும் ஒரு முறை கீர்த்தனாவிடம் ஊருக்கு போக கேட்டு பார்ப்போம் என்று அவளிடம் செல்வதற்குள் பிரியா ஓடி வந்து "டாடி என் ஸ்கூல் பஹ்ன்க்ஷன்க்கு வரீங்க தானே. அம்மா நீங்க வரமாடீங்கனு சொல்றாங்க" என்று சோகமாக கேட்டாள். "அப்படில்லாம் ஒன்னும் இல்ல செல்லம்.நான் கண்டிப்பா உன் ஸ்கூல்க்கு வருவேன்.அப்புறம் நம்ம எல்லாரும் ஊருக்கு பாட்டி பார்க்க போலாம்,சரியா "என்று சமாதனம் படுத்தினான்.

விழா சிறப்பாக முடிந்தது.வீட்டிற்கு திரும்பிய போது ராகுல் வாசலில் நிற்பதை பார்த்த பிரியா""ஹை மாமா" என்று பாசமாக ஓடி சென்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.ராகுல் கார்த்திக்கை அழைத்து "டேய் அம்மாவுக்கு ரொம்ப முடியல.நீ பன்றது சரியில்லை.மொதல கெளம்பு."என்று கோவமாக கூறினான்."இல்லடா கீர்த்தனா தான்."என்று சொல்லி முடிப்பதற்குள் "ஆமா அண்ணா.நான் தான் பிரியா விழாவிற்கு போனும், நாளைக்கு புறப்படலாம்னு சொன்னேன்"என்று கீர்த்தனா முடித்தாள்.ராகுல் கோவத்துடன் "எல்லாரும் கெளம்புங்க.இப்பவே போலாம்."என்று அழைத்து சென்றான்.தன் வீட்டு வாசலில் பல பேர் கூடி இருந்ததை கண்டதும் கார்த்திக்கின் மனம் ரணமாய் கொதித்தது.உள்ளே செல்லும்போதே "கார்த்திக் வந்திட்டான் கார்த்திக் வந்திட்டான் என்று  அனைவரும் கூச்சல் இட்டனர்.பாஸ்கர் கார்த்திக்கிடம் வந்து "நேத்து ராத்திரிலயிருந்து இலுத்திட்டு இருக்குபா. இந்த பாலை அம்மாவுக்கு ஊத்து"என்று சொன்னார். "வேணாம் மாமா.நான் ஒரு டாக்டர்.பால் ஊத்துனா கண்டிப்பா உயிர் போயிடும்னு எனக்கு தெரியும்.நானே என் அம்மாவை கொலை செய்ய விரும்பல.நான் இதுவரைக்கும் எங்க அம்மாவுக்கு குடுத்த கஷ்டமெல்லாம் போதும் மாமா "என்று சொல்லி கண்ணீருடன் மலரின் அருகில் உட்கார்ந்தான்."அம்மா கார்த்திக் வந்து இருக்கேன் மா. பாருங்க மா "என்று மலரின் கைகளை பிடித்து தன் கண்களில் உற்றியபடி விசும்ப ஆரம்பித்தான்."மகனே!" என்று மலர் மனதில் அழைத்தது வெளியே யாருக்கும் கேட்டகவில்லை.தன் மகனின் அழுகையை தாங்க இயலாமல் அவள் உயிர் இந்த பூமியை விட்டு பிறிந்து தன் அன்பிற்குரிய கதிரேசனை அடைந்தது....................................

நாம் எந்த நிலையில் இருந்தாலும்,எத்தகைய உயிரத்தை அடைந்தாலும் அதற்கு ஆணி வேறாய் இருப்பது நம் தாய் தந்தையே..நாமும் ஒரு நாள் அந்த நிலலையை அடையும் பொழுது தான் அவர்களின் வேதனை,ஏக்கம்,ஆசை அனைத்தும் புரிகிறது.திருமணத்திற்கு பின்பு நாம் நம் வாழ்க்கை துணையை மட்டும் காதலிக்காமல் இதுவரை நம்மை காதலித்து கொண்டு இருந்த உறவுகளையும் தொடர்ந்து காதலிக்கலாமே!..இன்று நாம் வழற்கும் நம் குழந்தைகள் பல ஆயிரம் செலவு செய்து 'கிரஷில்'விடும் நிலை வராது.அதை விட பலமடங்கு பாசத்துடனும் ,அக்கறையுடனும்,பல கதைகளை சொல்லியும்,மரியாதை,தெய்வ நம்பிக்கை இவைகளை உணர்த்தியும்  வளர்க்க நம் பெற்றோர்களை விட சிறந்தவர்கள் தேவைப்படாது.இந்த புத்தாண்டில் அவர்களின் ஆசையும் ,ஆலோசனைகளையும் பெற்று அவர்களையும் சந்தோஷம் அடைய செய்து நாமும் சந்தோஷமாக வாழலாமே!. 

This is entry #34 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.