(Reading time: 33 - 66 minutes)

 

வாரங்கள் கடந்தன. மலரால் இயல்பு நிலைக்கு வர இயலாமல் தவித்தாள்."எத்தனை நாளைக்குமா இப்படியே இருப்ப.கார்த்திக்கோட படிப்பு நின்ற கூடாது. இருக்கிற பணத்த வச்சு தையல் வேலை ஆரம்பி. உனக்கு நல்லா தெரிஞ்ச தொழில் தானே. பெரிய முதலிடு எதுவும் தேவைபடாது. உனக்கு தான் கதிரேசன் ஏற்கனவே தையில் மிஷன் வாங்கி குடுத்து இருக்கானே." என்று எடுத்து கூறினாள் லக்ஷ்மி. இந்த வார்த்தைகள் மலரின் செவிகளை எட்டினாலும் மனதையும்,மூளையையும் எட்ட மறுத்தது. இரவு முழுவதும் மலரின் மனம் லக்ஷ்மி அம்மா சொன்னதையே அசை போட்டு கொண்டு இருந்தது. இனி வரும் நாட்கள் முழுவதும் என் மகனிற்காக நான் வாழ வேண்டும் என்னும் முடிவு எடுத்தாள் மலர். பொழுது விடிந்தது நாளின் துவக்கம் ஆரம்பித்தப்போதே மலரும் தன் மகனின் வாழ்விற்கான புதிய துவக்கத்திற்கு தயார் ஆனாள். தன்னுடைய தூரத்து சொந்தம் ஆகிய தன் அண்ணன் பாஸ்கர்க்கு போன் அடித்தாள். "பாஸ்கர் அண்ணா.நான் தான் மலர் பேசுறேன்.உங்களுக்கு திருப்பூர்ல தெரிஞ்ச கடை இருக்குல.அவுங்ககிட்ட சொல்லி கொஞ்சம் காட்டன் துணி ரோல் கம்மி விலையில வாங்கி தரமுடியுமா?.ஒரு முதலிடுக்காக தான் அண்ணா. சின்ன குழந்தைங்க டிரஸ்,தலையணை உரை,டேபிள் க்ளோத்னு தச்சு வித்து என் மகனை நல்ல நிலைக்கு கொண்டு வர உதவி செய்யுங்க அண்ணா"என்று சிறிதும் இடைவேளி விடமால் பேசினாள். மலரின் பேச்சில் நம்பிக்கையும்,தெளிவும்,தன் மகனுக்காக வாழவேண்டும் என்ற தூண்டுதலும் தெரிந்தது.இதை எல்லாம் புரிந்து கொண்ட பாஸ்கர்" "மலர்,நீ கேட்டு இல்லேனா சொல்ல போறேன்.ஏன் இவ்ளோ விவரங்கள்.கவலைபடாத அடுத்த வாரம் நான் திருப்பூர் தான் போறேன். நேர்ல போய் பேசி கம்மி விலையில உனக்கு தேவையான எல்லா துணி ரோல்களும் வாங்கி அனுப்பிடுறேன் "என்று பாசமான குரலில் கூறினான்."ரொம்ப நன்றி அண்ணா.இந்த ஒரு வாட்டி மட்டும் நீங்க விலை கொறச்சு வாங்கி தந்தா போதும்.அடுத்த மாசத்துல இருந்து வியாபாரத்துல வர காசுல இருந்து நானே வாங்கிக்கிறேன்"என்று நம்பிக்கையுடன் கூறினாள்.இதை கேட்ட பாஸ்கர் சிறிதாக புன்னகைத்து கொண்டே"இப்பவே வியாபாரம் பேச அரம்பிச்சிட்டியே மலர்.உன் இஷ்டம் போலவே செய். ஆனா முதல் டிரஸ் என் பொண்ணுக்கு தச்சுக்கொடு அதுவே போதும்"என்று கூறினான்."கண்டிப்பா அண்ணா.உங்க மகளுக்கு இல்லாததா."என்றாள்.

கார்த்திக்கும் பள்ளி செல்ல ஆரம்பித்தான்.நீண்ட நாட்களுக்கு பின் சென்றதால் அவனுக்கு பாடங்கள் எதுவும் பிடிப்படவில்லை. மனமும் என்றும் வீட்டின் சூழலையே அசை போட்டுக்கொண்டு இருந்தது. கார்த்திக்கின் நிலலையை ராகுல் நன்கு கவனித்து கொண்டே இருந்தான். ராகுல் கார்த்திக் வகுப்பில் படிக்கிறான்.ஒரு பெரிய தொழில் அதிபரின் மகன். ஆனால் பணக்கார வீட்டின் மகன் என்ற எண்ணம் சிறிதும் அவன் பேச்சிலோ, அடுத்தவரிடம் பழகும் விதத்திலோ தெரியாது. லஞ்ச் டைமில் கார்த்திக் அமைதியாக ஒரு மரத்தின் அடியில் உடகாந்து இருந்த போது ராகுல் அவன் அருகில் சென்று கார்த்திக் வா என்னோடு சேர்ந்து சாப்பிடு" என்றான். "இல்ல பரவால .நீ சாப்பிடு .எனக்கு பசிக்கலை" என்றான் கார்த்திக்.."நானும் உன்னை கவனிச்சிட்டு தான் இருக்கேன் கார்த்திக். இப்படியே எத்தனை நாள் இருக்க போற.இனி எல்லாமே உங்க அம்மா தான். அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நீ வாழனும். உங்க அப்பா இறந்த போது எத்தனை பேரு அவர் ஆபீஸ்ல இருந்து பொலம்புனாங்க பார்த்தில்ல எப்போதும் நாம இருக்கிற போது எப்படி பேசுறாங்கனு முக்கியம் இல்ல. நாம மறஞ்சதுக்கு அப்புறமும் நம்மல எல்லாரும் எந்த அளவுக்கு ஞாபகம் வச்சு இருகாங்கன்றதும் முக்கியம். உங்க அப்பாவோட ஆசை உன்னை டாக்டர் ஆக்கணும்ன்றதுன்னு கேள்விப்பட்டேன். அவரோட ஆசைய நிறைவேத்து. உங்க அப்பா மாதிரி எத்தனயோ பேற நீ காப்பாத்துனா .உன்னை மாதிரி இருக்கிற நிறைய பசங்களுக்கு அவுங்க அப்பாவை திருப்பி குடுக்கிற சந்தர்ப்பம் உன் கையில் இருக்கும்.அதுவே உங்க அப்பாவுக்கு சந்தோஷத்தையும்,உங்க அம்மாவிற்கு பெருமையையும்,உன்னை சுற்றி இருப்பவர்களுக்கு மன நிம்மதியும் தரும் டா.எழுந்து வா ! ஒரு புதிய உலகம் உன்னை எதிர் பாத்துட்டு இருக்கு "என்று நம்பிக்கை தரும் சொற்களை பக்குவமாய் கார்த்திக்கிற்கு உரைதான்..இதை எல்லாம் கேட்ட கார்த்திக்கின் மனம் நீரோடை போல் தெளிவு பெற்றது."ஹம் சரிடா "என்று கூறி சாப்பிட ஆரம்பித்தார்கள்.

ன்றில் இருந்து இருவரும் ஒட்டி பிறந்த ரெட்டை பிறவிகள் போல சுற்றி திரிந்தனர். மலரும் தன் தையல் வேலையை ஆரம்பிக்க தொடங்கினாள். அவள் முதல் முதலாக தைத்த அழகிய ரோஸ் நிற கவுனை எடுத்து கொண்டு தன் பாஸ்கர் அண்ணனிடம் சென்றாள்."அண்ணா நீங்க கேட்ட மாதரியே இந்தாங்க உங்க செல்ல மகள் காயத்திரிக்கு கவுன்". "சொன்ன வாக்கை மறக்காம கடை பிடிக்கிரியே மலர். இந்த ஒரு நல்ல குணம் போதும் கண்டிப்பா உன் வியாபாரம் நல்லா வரும்" என்று பெருமையுடன் கூறினான் பாஸ்கர். கதிரேசன் ஆபீஸ்ல இருந்து குடுத்த காசு ஒரு பகுதிய துணி வாங்க முதலிடாகவும்,தன் தையல் மிஷனை மோட்டார் இணைக்கவும்,கார்த்திக்கு ஸ்கூல் பீஸ் கட்டவும் பயன் படுத்தியாச்சு. மீதம் உள்ள 22,௦௦௦  பேங்கிலையே போட்டு வைக்கலாம்னு நினைக்கும் போதுதான் மலருக்கு தன் மகன் தன் அப்பா இருக்கும் போது கேட்ட கோரிக்கை ஞாபகம் வந்தது. அவன் ஆசை குறையாகிவிட கூடாதுன்னு அவனுக்கு பிடிச்ச மாதிரியே சைக்கிள் 2௦௦௦ ரூபாய்க்கு வாங்கி குடுத்திடலாம்னு மலர் முடிவு செய்தாள். "மகனே நீ அசைப்பட்ட மாதிரியே உனக்கு பிடிச்ச சைக்கிள் வங்கிக்கோ. இது அப்பா உனக்காண்டி சேர்த்து வச்ச காசு தானே. அவர் இருந்திருந்தா இதானே செஞ்சு இருப்பாரு. "என்று சொல்லும் போது மனம் சிறிது சலனம் பட்டாலும் அது தன் மகனை பாதித்து விடுமோ என்று எண்ணி அதை வெளிக்காட்டாமல் நின்றாள் மலர்.

ட்டு புடவையை குடுத்திட்டு கூடவே பலாகட்டையை தூக்கிட்டு சுத்துற கதையா கார்த்திக்க்கு சைக்கிள் வாங்கி குடுத்திட்டு அவன் கூடவே போய் அவன் ரோடு கிராஸ் பண்ணிவிட்டு வரதும் ,அவன் பள்ளியில்யிருந்து திரும்பும் டைம்ல ரோடு கிட்ட போய் நின்னு கூட்டிட்டு வரதுமாக இருந்தாள் மலர். இது கார்த்திக்கு சுத்தமாக பிடிக்கலை. ஆனா தன் அம்மா வருத்தபட கூடாதுன்றதுக்காக மௌனம் சாதித்தான். மற்றவர்களுக்கு தான் கார்த்திக் மனம் திரையிடபட்டு இருக்கும், ஆனால் என்றும் ராகுலிற்கு அது கண்ணாடி பொருள் தான் என்பதால் அவன் சொல்லாமலே கார்த்திக் மனதை புரிந்து கொண்டான். அதனால் ராகுல் மலரிடம் வந்து"அம்மா.இனி நானும் கார்த்திக்கும் சேர்ந்தே பள்ளிக்கு போறோம். நீங்க தேவையில்லாம அழையாதீங்கமா" என்று சொன்னான். "நீ பைக்ல போறபா. என் மகனை நான் பைக்ல அனுப்ப பயமா இருக்கே "என்றால் மலர். மலரின் மனதையும் புரிந்து கொண்ட ராகுல் "சரி அம்மா.நான் மெதுவா கார்த்திக் கூடவே வண்டிய ஒடிட்டு போய் பத்திரமா ரோடு கிராஸ் பண்ண வச்சு கூட்டிட்டு போறேன். திரும்ப கூட்டிட்டு வந்து வீட்ல விட்டிட்டு போறேன். உங்களுக்கு இருக்கிற அதே அக்கரை எனக்கும் இருக்கு" என்று அன்பாய் கூறினான்."நீயும் என் மகன் மாதிரி தான் ராகுல்.நீ பத்திரமா என் மகனை கூட்டிட்டு போயிடுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்னை நம்பி எங்கனாலும் என் மகனை அனுப்புவேன். சரி கார்த்திக் இனி நீ ராகுல் கூடையே போய்ட்டு அவனோடையே வந்திடு"என்றாள்.இதை கேட்டதும் கார்த்திக் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

லரும் தன்னுடைய தொழிலில் மெதுவாக முன்னேற ஆரம்பித்தாள். தெருவில் துணி விற்ற காலங்கள் மறைந்து ஒரு சிறிய துணிக்கடை திறக்கும் அளவிற்கு முன்னேறினாள். கார்த்திக்கும் ராகுலின் நட்பு கவசத்தில் எந்த கவலையும் இல்லாமல் படித்தான். கார்த்திக் என்ன உதவி கேட்டாலும் ராகுல் சிறிதும் யோசிக்காமல் செய்து கொடுப்பான். 10 ஆம் வகுப்பு தேர்வும் நெருங்கியது. ராகுல் எப்பொழுதும் கார்த்திக் வீட்டில் தான் படிப்பான். ராகுல் தொழில் அதிபர் மகன் என்பதால் கார்த்திக் அவன் வீட்டிற்கு செல்ல தயங்குவான். ராகுல் பல முறை அழைத்தும்,சண்டை போட்டும் கூட வரவேயில்லை. மலரும் தன் மகனை சற்றும் பிரிய யோசிப்பாள் என்பதால் ராகுலும் கார்த்திக் வீட்டிலேயே எல்லா தேர்வுக்கும் தங்கி படித்தான். தேர்வும் தொடங்கியது. ஒவ்வொரு தேர்வுக்கும் கார்த்திக் செல்லும் போது "மகனே இந்த 1 வருடும் முழுதும் கஷ்டப்பட்டு படித்ததை நீ வெளிக்காட்டும் நேரம் இதுதான் பா..நல்ல மார்க் எடுத்து 1 ஸ்ட் குரூப்ல சேந்து அப்பா ஆசைய நிறைவேத்து.ராகுல் நீ நல்லா பண்ணிடுவபா. கவலை படாம தைரியமா போங்க "என்று இருவரையும் ஆசிர்வதித்து அனுப்புவாள். எல்லா தேர்வும் முடிந்து 2 மாதங்களுக்கு பின் முடிவுகள் வரும் நாளும் நெரிங்கியது.

லரின் கனவுகள் நிறைவேருமா என்ற ஏக்கம,பயம் கலந்து இருந்தது. "கவலைபடாத மலர்.கார்த்திக் நல்ல மார்க் எடுப்பான் "என்று தேட்றினாள் லக்ஷ்மி அம்மா."ராகுல் தன் மதிப்பெண் பார்ப்பதிற்கு பதிலாக கார்த்திக் நம்பரை தேடினான், கார்த்திக்கும் ராகுல் நம்பரை தேடினான். இருவரும் முதல் வகுப்பில் பாஸ் ஆகிவிட்டார்கள். கார்த்திக் மலரிடம் ஓடி வந்து "அம்மா நான் 1ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டேன். ராகுலும் தான் அம்மா" என்று சந்தோஷம் பொங்க கட்டி அணைத்து முத்தமிட்டான். மலரும் அவனை முத்தமிட்ட பிறகு ஆனந்த கண்ணீர் பொங்க அவனை அழைத்து கொண்டு கதிரேசனின் போட்டோ முன் நிறுத்தி "ஏங்க உங்க பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்து இருக்கான். உங்க ஆசையை கண்டிப்பா நிறைவேத்திடுவான். உங்களுடைய ஆசிர்வாதம் என்றும் அவனுக்கு குடுங்க" என்று சொல்லி ஆசிர்வதித்தாள்.லக்ஷ்மி அம்மாவும் "உங்க அம்மா ரத்தம் சிந்தி உன்னை படிக்கச் வச்சது வீண் போகல கார்த்திக்.ரொம்ப சந்தோஷம்.இதே மாதிரி 12லையும் நல்ல மார்க் எடுத்து மெரிட்ல காலேஜ் சேந்திடுப்பா "என்று கூறினாள்.

நாட்கள் கடந்தன.மலரும் ராகுல் இருக்கும் நம்பிக்கையினால் தன் மகனை பற்றி கவலை படாமல் தன் வியாபாரத்தை பெருக்க வேண்டும்.அப்போது தான் அவனுடைய மெடிக்கல் சீட்டிற்கு காசு சேர்க்க முடியும் என்று நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்த்தாள்.அன்று ஒரு நாள் திடீர் என்று 2 நாட்களாக ராகுல் பள்ளிக்கு வரவில்லை.அவனுக்கு காய்ச்சல் மிக அதிகமாகி விட்டதாக அவன் வீட்டில் வேலை செய்யும் பெண் கார்த்திக்கிடம் சொன்னாள்.ராகுலை காணவேண்டும் என்ற ஏக்கம் கார்த்திக்கை அவனது வீட்டிற்கு இழுத்து சென்றது. மிக பிரமாண்டமாய் இருந்த வீட்டிற்கு காவலாக ஒரு செக்யூரிட்டியும்,நாயும் வாசலிலேயே நின்றனர். உள்ளே நுழைய நாம் தகுதி அற்றவன் என்று மனம் ஒரு புறம் உறுத்த,மற்றொரு புறம் நண்பனின் நிலையை பார்க்க எண்ணி தவித்தது. மிகுந்த குழப்பத்துடன் நின்று கொண்டு இருந்த கார்த்திக்கின் செவிகளை எட்டியது ஒரு மெல்லிய பெண்ணின் குரல்."ஏன் வெளியவே நிக்குரிங்க. உள்ள வாங்க. அண்ணா ஓட பிரண்ட் கார்த்திக் தானே.!"என்றது அந்த குரல். கார்த்திக்கின் மனம் ஒரு இரண்டு நிமிடங்கள் 'நாட் ரீச்சபில்' ஆகிவிடத்து. ஏன் என்றால் அது தன் கட்டுப்பாட்டை இழந்து, நண்பனின் தங்கை என்பதையும் மறந்து அவளின் கண்களில் சிக்கி சரண் அடைந்து விட்டதே! கார்த்திக்கின் இதயத்தை சிறை பிடித்த கண்கள் ராகுலின் தங்கை கீர்த்தனாவின் கண்களே. கீர்த்தனா 8 ஆம் வகுப்பு கான்வென்ட் பள்ளியில் படித்து கொண்டு இருக்கிறாள்.அவள் எந்த கஷ்டமும் அறியாமல், நினைத்தவற்றை தான் ஆசை படும் முன்னரே அவள் கைகளில் கிடைக்கும் வரம் பெற்றவள். "இத்தனை வருடங்கள் நாம் வாழ்வில் ஒரு பெரிய சந்தோஷத்தையே இழந்து விட்டதாய் சிந்தித்து கொண்டே கார்த்திக் ராகுலின் அறைக்குள் சென்றான்.தன் தோழனின் உடல் நிலையை விசாரிக்காமல் சில நிமிடங்களுக்கு உணர்ச்சியற்று உறைந்து போய் உட்கார்ந்து இருந்தான்.ராகுல் இதையெல்லாம் கவனித்து விட்டு தன் நண்பனை இந்த உலகிற்கு மீண்டும் கொண்டு வருவதற்காக "டேய் கார்த்திக்" என்று உரக்க கத்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.