(Reading time: 33 - 66 minutes)

 

ருமேகங்களால் மூட பட்ட வானம் சட்டென்று தெளிவடைந்தது போல கார்த்திக் தான் இருக்கும் இடத்தையும்,அங்கு வந்த காரணத்தையும் உணர்ந்து "டேய் ராகுல்.இப்போ உடம்பு எப்படி இருக்கு?உன்னை பார்க்காம இருக்க முடியல அதான் வந்தேன். அம்மாவும் உன்னை விசாரிச்சாங்க" என்றான். "நீ என்ன பார்க்க வந்த மாதிரி தெரியலையே" என்று ஒரு புன்னகையுடன் ராகுல் தன் நண்பனை மறைமுகமாக சுட்டி காட்டினான். தன் உயிர் நண்பனின் தங்கை என்று உணராமல் மனதை அலைப்பாயவிட்டது நினைத்து அமைதி அடைந்தான். "சரி.கவலைபடாத கார்த்திக். நான் அடுத்த வாரம் வந்திடுவேன். அம்மாட்டையும் சொல்லிடு நான் வீட்டுக்கு அப்புறம் வரேன்னு" என்று ராகுல் கூறினான். கார்த்திக் வீடு திரும்பினாலும் அவனுடைய மனம் ராகுலின் வீட்டு வாசலில் இருந்து வீட்டினுள் அடைக்கப்பட்டது.

"கனே!என்னடா ஆச்சு?சரியா சாப்பிட மாற்ற,தூங்க மாற்ற. எதுனாலும் அம்மாக்கிட்ட சொல்லுபா" என்று குழம்பி இருந்த கார்த்திக்கை பார்த்து மலர் வினவினாள். மலரின் கேள்வி கார்த்திக்கின் காதை எட்டவேயில்லை. ஒரு வாரம் கடந்தது, ராகுல் பள்ளிக்கு திரும்பினான். "என்னடா கிளாஸ் டெஸ்ட்க்குலாம் சரியா படிக்கலையா?நீ இப்படி யார்ட்டையும் பேசாம இருந்து பார்த்ததே இல்லையே. வீட்டில ஏதாச்சும் பிரச்சனையா?சொல்லுடா " என்றான் ராகுல்.உயிர் தோழனா, தனக்கு  ஏற்பட்டிருக்கும் இந்த புதிய ஆசையா என்று புரியாமல் இதயத்தின் துடிப்பு அதிகரித்தது. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாமல் அவற்றை கண்ணீராக சிந்தினான் கார்த்திக். "டேய் நான் எதுவும் கேட்கல. நீயும் எதுவும் சொல்லவேணாம். மொதல ரிலாக்ஸ் ஆகு மீதி அப்புறம் பேசிப்போம் " என்று கார்த்திக்கை அமைதி படுத்தினான் ராகுல்.

ரு நாள் மலர் ராகுலை அழைத்து"என் மகனுக்கு என்னபா பிரச்சனை. உங்க வீட்டுக்கு போய்ட்டு வந்ததுல இருந்தே ஒரு மாதிரி இருக்கான்." என்று கேட்டாள். மலரின் கடைசி வரி ராகுல் மனதில் இருந்த கேள்விக்கு பதில் அளித்தது."அதுலாம் ஒன்னுமில்லைமா. எக்ஸாம் நெருங்கிவரதுனால அதே சிந்தனையா இருக்கான். நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க. நான் பார்த்துகிறேன்" என்று சமாதான படுத்தினான்."நான் வாழ்றதே என் மகனுக்காக தான்பா. அவன் நல்லா படிச்சு அவுங்க அப்பாவின் ஆசையை நிறைவேத்துனாதான் எனக்கு சந்தோசம்.எக்ஸாம் வேற நெருங்கி வந்திருச்சு. நீ தான் அவன பார்த்துக்கணும்."என்று பணிவாய் வேண்டினாள் மலர். கார்த்திக்கின் எதிர்காலம் முக்கியம்,அவனுடைய ஆசை நிறைவேர்வதும் முக்கியம் என்பதை உணர்த ராகுல் கார்த்திக்கை அழைத்து "உனக்கு என்ன பிரச்சனைனு நான் கேட்க மாட்டேன். ஏனா அது எனக்கே தெரியும். உன் ஆசை நிஜமாவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு உன் அப்பா,அம்மாவின் ஆசையை நீ நிறைவேற்றுவதும் முக்கியம்.நீ அதுக்கு முயற்சி எடுத்து பரிட்சை எழுது உன் ஆசை தன்னால நிறைவேறும் "என்றான் ராகுல். கார்த்திக் வார்த்தைகள் எதுவும் சொல்லாமல் இருந்தாலும் தன் மனதை படித்த தன் உயிர் தோழனை கட்டி தழுவி கொண்டான் கார்த்திக். அன்று முதல் தன் பிற ஆசைகளை ஒதுக்கிவிட்டு தன்  வாழ்க்கையின் குறிக்கோளை மட்டும் மனதில் வைத்து ஒரே சிந்தனையுடன் படிக்க ஆரம்பித்தான்.சில நேரங்கள் ராகுலின் வீட்டிற்கு செல்லும் நிலை வந்த போதும் அதை தவிர்த்தான். மலரும் தன் மகன் திரும்ப கிடைத்ததை கண்டு ஆனந்தம் அடைந்தாள். தேர்வும் முடிந்தது.ராகுலும்,கார்த்திக்கும் தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி எடுத்து பரிட்சை எழுதி இருந்தார்கள்.விடுமுறை தான் ராகுலிற்கும்,கார்த்திக்கிற்கும் ஏற்பட்ட முதல் இடைவேளை. ராகுல் தன் அப்பாவின் வேலையில் உதவி செய்ய தினமும் அவருடன் சென்றுவிடுவான். கார்த்திக் தன் அம்மாவிற்கு வேண்டிய அளவு துணி எல்லாம் திருப்பூரில்யிருந்து வாங்கி வர உதவி புரிந்தான்.தேர்வு மதிப்பெண்களும் வந்தது.கார்த்திக் 1192 மார்க்கும்,ராகுல் 1150 மார்க்கும் எடுத்தனர். மலருக்கு பேரின்பம். அவளின் மகிழ்ச்சியை வெளிபடுத்த வார்த்தைகளே கிடையாது. கதிரேசனின் மறைவின் போது மறைந்த அவள் புன்னகை இன்று தான் மீண்டும் உயிர்தெழுந்தது.ராகுல் தன் அப்பாவின் தொழிலை பிற்காலத்தில் தொடர வேண்டியதனால் சிவில் இன்ஜினியரிங் சேர்ந்தான். கார்த்திக் தன் அப்பாவின் ஆசை படி டாக்டர் படிப்பில் சேர்ந்தான். வருடங்கள் வேகமாக நகர்ந்தன.மலரும் உதிர ஆரம்பித்தாள். கார்த்திக்கும் ராகுல்லும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் மனதளவில் இணைந்தே இருந்தார்கள்.

ரு நாள் ராகுல் கார்த்திக்கை அழைத்து "டேய்!வரும் ஞாற்றுக்கிழமை எங்க அப்பாவிற்க்கு 50 வது பிறந்தநாள்.மிக ப்ரமாண்டமாய் எங்கள் வீட்டில் கொண்டாட இருக்கிறோம்.நீயும்,அம்மாவும் கண்டிப்பா வரணும்"என்று கூறினான். இத்தனை வருடங்களாக துறக்கப்பட்ட ஆசை மீண்டும் வெளியில் எட்டிப்பார்க்க வேண்டிய தருணம் நெருங்கியது. கார்த்திக் தன் தோழன் அவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை பாழாகிவிடுமோ என்று பயந்து விழாவிற்கு வர மறுத்தான். ஆனால் ராகுலின் வர்புறத்தலால் கார்த்திக்கும், மலரும் விழாவிற்கு வந்தனர். "என்னடா மகனே!வீட்டு வாசல இருந்து வீடு இவ்ளோ தூரம் தள்ளி இருக்கு"என்று சுத்தி இருக்கும் கூட்டத்தையும் அவர்களின் உடைகளையும் கண்ட வியப்பில் இருந்து மீளாமல் கார்த்திக்கை பார்த்து மலர் கேட்டாள். விழா முடியும் வரை தன் ஆசைகள் வெளிவராமல் கட்டுப்படுத்திவிட வேண்டும் என்று தன் மனதை பூட்டுவதற்குள் "மகனே!அந்த பிங்க் சாரி போட்டு தேவதை மாதிரி இருக்கிற பொண்னு ராகுலோட தங்கச்சியாபா "என்று கேட்டு அந்த பூட்டை உடைத்து எறிந்தாள் மலர். கார்த்திக் நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லாமல் "ம்ம்" என்று பதில் அளித்தான்.அவன் கண்கள் காணாவிட்டாலும் அவன் மனம் அந்த தேவதையை தேடி சிறகடித்து கொண்டு இருந்தது. விழா சிறப்பாக நடந்து முடிந்தது. உணவும் மிக ஆருமையாக இருந்தது.ஆனால் மலருக்கு தான் வட இந்திய முறை உணவு என்பதால் சிறிதும் பிடிக்கவில்லை."ராகுல் இப்போ சந்தோஷமாபா. நாங்க கெளம்புறோம் "என்று மலர் விடைப்பெற்றாள். "ரொம்ப சந்தோஷம்மா! டேய் கார்த்திக் நீ ஏன்டா ஒரு மாதிரி இருக்க.இனி எப்போவும் என்னை பார்க்கணும்  நினைச்சா வீட்டுக்கே நேராவா. நான் இங்க தான் இருப்பேன். இப்போ கெளம்பு" என்று பாசமாக தோழனின் தோழில் தட்டினான் ராகுல்."மனம் எங்கோ தொலைந்தது போல இருந்தாலும்.தன் நண்பனின் நட்பை கலங்கபடாமல் இந்த விழா முடிவடைந்தது எண்ணி பெருமூச்சு விட்டான் கார்த்திக்.

ந்த நிம்மதி நீள்வதற்கு முன் "அவரையும்,அவர் அம்மாவையும் கொஞ்ச நிக்க சொல்லுங்க அண்ணா" என்று கீர்த்தனாவின் மெல்லிய குரல் கார்த்திக்கின் இதயதை மயில் இறகைபோல் வருடியது."கார்த்திக் தயவு செஞ்சு நிமிர்ந்து பார்த்துடாத, உனக்கு நட்பு தான் முக்கியம் வேணாம் வேணாம் "என்று அலறும் கார்த்திக்கின் மனசாட்சியை வென்று அவனின் கண்கள் கீர்த்தனாவின் மை பூசிய கண்களை பார்த்தது. "இந்தாங்க ஸ்வீட்ஸ். வீட்டுக்கு எடுத்திட்டு போங்க"என்று சொன்ன கீர்த்தனாவின் குரல் கார்த்திக்கின் காதில் மறு ஒலிபரப்பு ஆகி கொண்டே இருந்தது. கார்த்திக்கின் நடவடிக்கையில் இருந்து மலரும்,ராகுலும் அவனுடைய ஆசையை புரிந்துக்கொண்டனர்.

ராகுல் கீர்த்தனாவிடம் சென்று "என் தோழன் கார்த்திக்க நீ விரும்புறேன்னு நினைக்கிறன். நான் மித்த அண்ணன் மாதிரி எதிர்ப்புலாம் தெருவிக்க மாட்டேன்,.உன் ஆசை இது தான்னா தாராளமா நான் இதுக்கு உன் பக்கம் இருக்கேன். என் நண்பனை பாசமா பார்த்துக்க வேண்டியது உன் கடமை என்றான்".இப்படி ஒரு அண்ணன் தனக்கு கிடைத்தது நினைத்து ராகுலை கட்டி அணைத்து கொண்டு ஆனந்த கண்ணீர் விடுத்தாள் கீர்த்தனா. அதே சமயம் மலர் "மகனே நீ ராகுலை உன் தோழனா மட்டும் நினைக்கிரியா இல்ல சொந்தமா ஆக்கவும் ஆசை படுறியா?" என்று கார்த்திக் உள்ளத்தை படித்தாள். கார்த்திக்கிற்கு தன் காதலை விட மலரின் பாசமும்,ராகுலின் நட்பும் பெரிதாய் விளங்கியது.அதனால்,"உங்களுக்கும்,ராகுலுக்கும் இதில் இஷ்டம்யிருந்தால் மட்டும் என் ஆசை நிறைவேறட்டும் .இல்லனா அது கனவாகவே இருந்திரட்டும் "என்றான் கார்த்திக். மலரும் தன் மகனின் ஆசை நிறைவேற வேண்டும் என்று எண்ணி ராகுல் தந்தையிடம் பேச சென்றாள். ராகுல் நெருங்கிய தோழனாக இருந்தாலும் அவன் அப்பா பெரிய தொழில் அதிபர். மலரோ ஒரு சின்ன துணி கடையின் முதலாளி இந்த தயக்கம் மலரின் மனதை நெருடியது. சிறு தயக்கத்துடன் ராகுலின் அப்பாவை சந்திக்க சென்றாள். மலர் பேச்சை துவங்குவதற்கு முன்னரே ராகுலின் அப்பா "நீங்க எதுக்கு வந்து இருக்கீங்கனு எனக்கு தெரியும்.ஏற்கனவே ராகுல் எல்லாதையும் எங்கக்கிட்ட சொல்லிட்டான்.நம்ம பிள்ளைங்க நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு. அவுங்க காதல் செஞ்சாலும் அதை நம்ம மூலியமா கொண்டு போனும்னு நினைச்சதே உங்க பையனோட உயர்ந்த குணத்தை காட்டிச்சு. நீங்க எதுவும் சங்கட பட வேண்டாம்.எங்களுக்கு முழு சம்மதம்" இதை கேட்ட மலர்க்கு நடப்பவையாவும் கனவாகவே தெரிந்தது.இவையாவும் கனவில்லை நிஜம் என்று தெளிந்த மலருக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது.

"ல்யாணத்துக்கு நல்ல நாள் பார்த்திடுவோம்.எங்க என் மகளை யாருக்கோ கட்டி வச்சு பிரிஞ்சிடுவேனோன்னு நெனச்சேன்.ஆனா கார்த்திக் என் பொண்னையும்,எனக்கு டெல்லில இருக்கிற மருத்துவமனையையும் நல்லா பார்த்துக்க போறான்னு நினைக்கிற போது சந்தோஷமா இருக்கு. இனி கார்த்திக் எங்க வீட்டு மாப்பிள்ளை "என்று ராகுலின் அப்பா சொன்ன வார்த்தைகள் மலரின் பூ போன்ற மனதை ரணமாய் பிளந்தது. தன் மகனை தத்து குடுப்பதா இல்லை அவனின் கனவை கலைபதா என்று தெரியாமல் குழப்பத்துடன் விடை பெற்று சென்றால் மலர்.மலரின் மனம் காயப்பட்டதை உணர்ந்த ராகுல் அவளை பின் தொடர்ந்தான். "அம்மா,உங்களுக்கு இது கஷ்டம் தான்.ஆனா என் அப்பா சம்மதிச்சதே பெரிய விஷயம்,நாங்க கார்த்திக்கை நல்லா பார்த்துப்போம். உங்க மகனை உங்கள்ட்டயிருந்து பிரிகலை. ஆனா கொஞ்சம் தூரத்துல இருக்கான் அவ்ளோ தான்" என்று ஆறுதல் அளிக்க முயற்சிதான்.

ன் கனவு நிஜமாக போகிறதா இல்லை சுக்கு நூறாக உடைய போகிறதா என்ற பதற்றத்துடன் மலரை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தான் கார்த்திக். மலரின் வாடிய முகத்தை கண்டு "அம்மா என்ன ஆச்சு.யாரும் ஏதுவும் சொல்லிடாங்களா?.விடுங்க மா நமக்கு குடுத்துவச்சது அவ்ளோ தான் என்று சொல்லும் போதே கார்த்திக் கண்கள் நிரம்பின.இதை கவனித்த மலர் தன் மனதை கல்லாக்கி கொண்டு "மகனே!அதுலாம் ஒன்னும் இல்ல.நான் சந்தோஷத்துல உறைஞ்சு போய் இருக்கேன்.கல்யாணத்திற்கு நல்ல நாள் பார்த்திடலாம்னு சொல்லிடாங்க.ஆனா....."என்று மலர் முழுதாய் சொல்லி முடிதற்கு முன்னரே கார்த்திக் குதிக்க ஆரம்பிச்சிட்டான். "ரொம்ப நன்றிமா.நான் போய் ராகுல பார்த்துட்டு வந்திடுறேன்" என்று சந்தோஷத்தின் உச்சியில் துள்ளியபடி சென்று விட்டான். தன் மகன் தன்னை முழுதாக பிரியும் காலம் வந்ததை கண்டு அழ ஆரம்பித்தாள்.கதிரேசனின் படம் அருகில் சென்று "நீங்க தான் என்கிட்ட சொல்லாமல் விட்டு போய்டீங்க. ஆனா இப்போ என் மகனை என்கிட்ட சொல்லிட்டே பிரிச்சு கூட்டிட்டு போரமாதிரி ஆகிடிச்சு"என்று அழ ஆரம்பித்தாள். தன் மகனின் ஆசைக்காக எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற தெளிவுடன் இயல்பு நிலைக்கு திரும்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.