(Reading time: 21 - 41 minutes)

 

" வி .... விஷ்வா .....விஷ்வா ........ எழுந்திரு ... இன்னைக்கு மீட்டிங் இருக்குல "

" ம்ம்....ம்ம்ம்ம்............. மணி என்ன மயூ ??? "

" ஏழாச்சு "

" ஓ  காட் " பதறியடித்து எழுந்தான் ... " குட் மோர்னிங் " என்றான் புன்னகையுடன் ... அவனின் புன்னகையே அவளுக்கு போதுமானதாய் இருந்தது . ( எல்லாம் நல்லாதானே போயிகிட்டு இருக்குன்னு தானே நினைக்கிறிங்க ? இருங்க ...)

அவன் கிளம்புவதற்குள், அவனுக்காக டிபன் செய்து, அவனது சூட்கேஸ் அனைத்தையும் தயார் படுத்தி தந்தாள் மயூரி ..

" இந்தா விஷ்வா "

" ஓ  தேங்க்ஸ் " என்று இரண்டடி வைத்தவன் மீண்டும் திரும்பி வந்து, " டைவர்ஸ் ஆன  பிறகு, எக்ஸ் ஹஸ்பன் கு யாரும் இவ்ளோ பணிவிடை செய்ய மாட்டாங்க மயூரி .. அதுக்காக உனக்கொரு ஸ்பெஷல் தேங்க்ஸ் " என்று அவள் மனதை நெருப்பை அள்ளி கொட்டிவிட்டு சென்றான் ..

" ஐயோ " என்று தலையில் கைவைத்து கொண்டு அமர்ந்துவிட்டாள்  மயூரி .. " ஏதோ ஒரு நாள் வாய் துடுக்கில் விவாகரத்து பத்தி பேசிட்டேன் .. அதுக்காக ஏன் இப்படி என்னை தினம் தினம் கொல்லுற விஷ்வா ? என்னை கஷ்டப்படுத்தி உனக்கு மட்டும் என்னதான் கிடைச்சது .. அப்பபோ நல்ல பேசுற, சிரிச்சி வைக்கிற, மனசை மயிலறகால வருடிட்டு ஏன் அங்கேயே சூடு வைக்கிற ? உன்னைவிட நான் சின்ன பொண்ணு தானே ... ஏதோ முட்டாள்தனமா யோசிக்காமல் பேசிட்டேன்.. அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ? பிரிச்சும் வைக்காமல் சேர்ந்தும் வாழாமல் ஏண்டா என்னை கொல்லுற நீ ? " என்று வாய் விட்டு அழுதாள் .. தொலைகாட்சியில் அவளுக்காகவே பாடல் ஒலித்தது ..

கண்ணீரை துடைத்துக் கொண்டு பூஜை அறைக்கு சென்றாள்  .. அவளின் இஷ்ட தெய்வம், அந்த மாயக்கண்ணன் ... கை கூப்பி அவனிடம் மன்றாடினாள் ..

" கிருஷ்ணா, ஏதோ தெரியாத்தனமா தப்பா பேசிட்டேன் .. என் தப்பை நான் உணர்ந்திட்டேன் ,.. எங்களை சேர்த்து வச்சிடு .. வேற எதுவும் உன்கிட்ட நான் கேட்கல .. என்னால விஷ்வா இல்லாமல் இருக்க முடியலை .. இல்லைன்னா என்னை கொன்னுடு கிருஷ்ணா " என்று அழுதாள் .. அவள் கண்ணீருக்கு பதில் அளிப்பதற்காகவே அங்கு வந்தான், அவர்கள் வீட்டு செல்ல கிருஷ்ணன் , விஷ்ணு ... விஷ்வாவின் அன்பு தம்பி ....

" ண்ணி .............!!!!!!!" என்று குரல் கொடுத்துகொண்டே வந்தான் ... கண்ணீரை துடைத்துவிட்டு அங்கு வந்தாள்  மயூரி ..

" விஷ்ணு ????"

" எஸ் .... விஷ்ணுவேதான் "

"...."

" ஹெலோ ஷாக் ஆகுரதுக்கும் அளவு இருக்குமா.. இப்படியா வான்னு ஒரு வார்த்தை சொல்லாமல் லுக் விடுவிங்க ??"

" ஹ ஹ ... வா விஷ்ணு .. உன்னை பார்த்ததும் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன் .. நீ மலேசியாவில் இருந்து வர்ற நு சொல்லவே இல்லையே "

" ஹ்ம்ம் என் சைகாலஜி  கோர்ஸ் முடிஞ்சிடுச்சு .. இருக்குற பைத்தியத்துக்கும் வைத்தியம் பார்த்தாச்சு அதான் நம்ம வீட்டு  பைத்தியத்தை பார்க்கலாம்னு வந்துட்டேன் "

" நம்ம வீட்டு பைத்தியமா ? யாரு ??"

" எல்லாம் உங்க கணவர் தான் "

" டேய் "

" ஹா ஹா ....கூல் .... ஆனா விஷ்வா பழைய மாதிரி இல்லையே .. விடியோ காலில் அவன் முகத்தை பார்க்க முடில .. ஏன் இப்படி தேவதாஸ் மாதிரி தாடி வளர்திகிட்டு இருக்கான் ?"

" அதெல்லாம் சும்மாதான் .. நீ இப்போதானே வந்தே? வா குளிச்சிட்டு அண்ணி சமைக்கிறதை சுட சுட சாப்பிடு .. நான் அவருக்கு சொல்லிட்டு சமையல் வேலையை பார்க்குறேன்"  என்று நகர்ந்தாள் ... ஏதோ சரி இல்லையே என்று சந்தேகமாய் பார்த்துக்கொண்டே சென்றவன் வேண்டுமென்றே எதையோ தேடுவதைப்போல அவள் போனில் பேசுவதை கவனித்தான் ..

" ஹெலோ "- விஷ்வா

" நா ..... நா..... நான்தான் "

" ம்ம்ம் தெரியுது சொல்லு என்ன விஷயம் "

" விஷ்ணு வீட்டுக்கு வந்திருக்காரு .. "

" ஹே நிஜம்மாவா எப்போ ??"

" இப்போதான் ... "

" சாப்பிட்டானா ??"

" இதோ ..இனிதான் "

" சரி நான் சீக்கிரம் மீட்டிங் முடிச்சிட்டு வரேன் "

" சரி ..வச்சிடுறேன் "

" ஒரு கணவன் மனைவி இப்படியா பேசிக்குவாங்க ? அண்ணி குரலில் ஜீவனே இல்லையே ?? கண்டுபிடிக்கிறேன் " என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டான் விஷ்ணு ..

ரண்டு நாட்கள் கடந்திருந்தது .. பொதுப்படையான பேச்சினை தவிர மயூரியும், விஷ்வாவும் ஒருவருக்கொருவர் சரியாக பேசி கொள்வதில்லை என்பதை கவனித்தான் விஷ்ணு .. இந்த இரண்டு நாட்கள் மயூரி விஷ்வாவின் அறையில் இருந்தாலும் அவளின் பொருட்கள் அடுத்த அறையில் இருப்பதையும் குறித்து கொண்டான் .

மூன்றாவது நாள், விஷ்வா ஆபீசிற்கு சென்ற பிறகு பேச்சை தொடங்கினான் விஷ்ணு .

" அண்ணி "

" ம்ம்ம்ம்ம்? "

" உங்களுக்கு பாஸ்போர்ட் ரெடி பண்ணியாச்சா ? "

" பாஸ்போர்ட்டா எதுக்கு ?? "

" என்ன அண்ணி இபப்டி கேட்குறிங்க ? நாம சிங்கப்பூர்  போக போறோம் "

" சிங்கப்பூரா ? "

" ஆமா .... அண்ணா சொல்லலியா ?? அண்ணனுக்கு புது பிசினஸ் அங்க ஸ்டார்ட் பண்ண போறாங்க .. எனக்கும் அங்க இருக்குற கிளினிகல் சைக்காலஜிஸ்ட் ஆ ஜாய்ன் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்கு ... நாம இன்னும் ஒரு வாரத்தில் போறோம் "

" விஷ்வா என்னிடம் சொல்லவில்லையே ??? நான் அவனிடம் எப்படி கேட்பேன் .... நீதானே சிங்களா இருக்குறது தான் பெட்டர்னு சொன்ன ? இப்போ தனியா இரு ..அப்படின்னு விஷ்வா சொன்னா நான் என்ன செய்வேன் ?" என்று மருகினாள் மனதிற்குள் ..

" என்னாச்சு அண்ணி ?"

" உங்கண்ணா முடிவே பண்ணிட்டாரா விஷ்ணு ?? என்னை வெறுத்திட்டார்  தானே ?? அவ்ளோ பெரிய தப்பா பண்ணேன் நான் .. என்னை விட்டுடு போக முடிவு பண்ணிட்டாரா ?? அவருக்காக தானே நான் உயிரோடு இருக்கணும்னு  சொன்னாரு .. ? இப்போ அவரே என்னை விட்டு போக போறாரு ...இனி எதற்கு இந்த உயிர் நான் சாகுறேன் "

" அவசரப்படாதிங்க அண்ணி .. நான் பொய் சொன்னேன் "

" ????"

" நான் என்ன பண்ணுவேன் அண்ணி .. இந்த ரெண்டு நாளில் உங்க கிட்டயும் அண்ணாகிட்டயும்   நான் மறைமுகமாகவோ நேராகவோ கேட்டாச்சு .. நானும் இந்த வீட்டு மனுஷன் தானே ? என்னை மதிச்சு ஒரு வார்த்தை சொன்னிங்களா ? வீட்டுல இருக்குற சூழல் சரி இல்லைன்னு தெரியாத அளவுக்கா முட்டாள் நான் ??"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.