(Reading time: 21 - 41 minutes)

 

" விஷ்ணு !!!"

" என்ன ஆச்சு ..? இப்போதாச்சும் சொல்லுங்க "

" ரொம்ப சின்ன சண்டை விஷ்ணு .. உங்க அண்ணா ஏன் இவ்ளோ கோபபட்டாருன்னு  தெரில "

" நீங்க முதலில் நடந்ததை சொல்லுங்க "

" அன்னைக்கு ஒரு நாள் நானும் உங்க அண்ணாவும் ஒரு டிவி ஷோவ்  பார்த்துகிட்டு இருந்தோம் .. அதுல திருமணத்திற்கு பிறகு பெண்ணின் சுதந்திரம் பத்தியும் விவாகரத்து பத்தியும் பேசிகிட்டு இருந்தாங்க .. விவாகரத்து பத்தி பேச்சு வந்ததும் உங்க அண்ணா டிவியை ஆப் பண்ணிட்டாரு .. அப்போ ....... " ( எல்லாரும் மேல பாருங்க .. ப்ளாஷ்  பேக் )

" ன்னாச்சு விஷ்வா .,... ஏன் டிவி ஆப் பண்ணிட்ட ?"

" புடிக்கல ... "

" இவ்ளோ நேரம் பார்த்துகிட்டு தானே இருந்தோம் "

" இப்போ பார்க்க புடிக்கல ... உனக்கு வேணும்னா பாரு மயூ நான் கொஞ்ச நேரம் நம்ம தோட்டத்துல நடந்துட்டு வரேன் ... "

" இரு இரு நானும் வரேன் "

இருவரும் ஒன்றாய் தோட்டத்தில் நடந்தனர் .... சட்டென சிரித்தாள் மயூரி

" என்ன சிரிப்பு டா ?"

" அந்த பொண்ணுங்க சொன்னது உண்மைதான் "

" எந்த பொண்ணுங்க ? "

" அதான் டிவியில "

" பச்ச் .... அதுகென்ன இப்போ ?"

" ஆமா கல்யாணம் ஆனா பெண்ணுக்குன்னு  ஒரு சுதந்திரம் இருக்காதுன்னு சொன்னாங்களே "

" எந்த விதத்தில் இப்போ அது உண்மையாச்சு ??"

" ஆமா .. உனக்கு  பிடிக்கலன்னதும் டிவியை ஆப் பண்ணிட்டியே  .. நான் உன்  மனைவியாச்சே அதுனால உனக்கு  பிடிக்கலனதும் நானும் உன்  பின்னாடியே நாய்குட்டி மாதிரி வந்துட்டேன் பாரு  " என்றாள்  துடுக்காய் ..

" இதெல்லாம் அநியாயம் ... நான்தான் உனக்கு வேணும்னா பாருன்னு சொல்லிட்டேனே "

" நீ இப்படி முகத்தை திருப்பிகிட்டு இருக்கும்போது நான் எப்படி ரசிச்சு பார்க்க முடியும் ? இந்த விஷயத்துல தனியா இருக்குற பொண்ணுங்க எவ்ளோ லக்கி ... இப்படி இவங்க மனசு கஷ்டப்படுதே அவங்க மனசு கஷ்டப்படுதே நு பீல் பண்ணாமல் இருப்பாங்க ":

" ஹ்ம்ம் உறவுகளுக்காக விட்டு கொடுத்து வாழ்வதிலும் சுகம் இருக்கு ...."

" இப்படி பேசி பேசி தான் ஆண்கள் பெண்களை அடிமை படுத்துறிங்க  " என்று சிரித்தாள் ... அவளின் சிரிப்புக்கு எதிர்மாறாய் அவன் கொதித்து கொண்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை ..

" இப்போ என்ன சொல்ல வர ...? பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்திட்டா எல்லாம் சந்தோஷமும் கிடைச்சிடுமா ?? ஒரு பிரிவிலோ அல்லது விவாகரத்திலோ தான் உங்க சந்தோசம் இருக்கா ?" கோபமாய் கேட்டான் அவன் .. ஏதோ துள்ளலான மனநிலையில் இருந்தவளோ

" ஆமான்னு சொன்னா விவாகரத்தை கொடுத்திடுவியா   ? " என்று கேட்டு உதடு பிதுக்கினாள் ..... விஷ்வா கடந்து வந்த அந்த பழைய நினைவுகள் அவன் கண்முன்னே நின்றது ... வந்த கோபம் அனைத்தையும் ஒன்று திரட்டி

" ச்ச்சி  போ " என்று அவளை தள்ளி விட்டு அங்கிருந்து சென்றான் ... அவன் தள்ளியதில் தடுமாறினாள்  மயூரி .. கீழே விழாமல்  சிரமபட்டு நிமிர்ந்தவளுக்கு அவன் மீது கோபமாய் வந்தது .. அன்று முழுவதும் அவனிடம் அவளாய்  பேசவில்லை .. அவனும் அவளை கண்டுகொள்ளவில்லை ... இப்படியே மூன்று நாட்கள் கடந்தது .. அவள் எழுமுன்பே ஆபீசிற்கு செல்பவன் இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்பினான் ..

" இது பாரு விஷ்வா .. இது உன் வீடு . உன் மனைவி என்பதால்தான் நான் இங்க இருக்கேன் .. நீ ஒன்னும் என்னை தவிர்க்கனும்னு ஆபீஸ் கு ஓட வேண்டாம் .. நான் இங்கயே இருந்தாலும் உன் கண்ணில் பட மாட்டேன் " என்று சொல்லிவிடு தனது பொருட்களை அடுத்த அறைக்கு மாற்றி வைத்தாள்  மயூரி .. அவளின் கோபமும் ஆயாசமும் குறையவே இல்லை ...அதற்கு தகுந்தாற்போல அவனும் இவளை தடுக்காமல் போகவும்  தான்  செய்வதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தாள்  மயூரி ..

எல்லாம் ஒரு வாரத்திற்கு தான் .. நாட்கள் செல்ல செல்ல அவளின் கோபம் மறைந்தே விட்டது .. ஒன்றும் இல்லத விஷயத்திற்கு இப்படி பேசிவிட்டோமே என்று உணர்ந்தாள் .. அதை அவனிடமே  சொல்லி மன்னிப்பும் கேட்டாள் .... அவனோ

" என்னால உனக்கு விவாகரத்து தர முடியாது " 

சட்டென முகம் மலர்ந்தாள்  மயூரி ..

" அதே மாதிரி மன்னிப்பும் தர முடியாது .. விவாகரத்து ஆனவங்களின் சுதந்திரத்தை பத்தி சொன்னல  நீ .. அதை வாழ்ந்து காட்டு ... இனி இதே வீட்டில் நீ உன் இஸ்டத்துக்கு இருக்கலாம் .. என்னை பொருத்தவரை இனி நமக்குள்ள ஒண்ணுமில்லை " என்றான்.... அன்றிலிருந்து அவளிடமிருந்து ஒதுங்கியே  நின்றான் .. என்றாவது அவளின் சோர்ந்த முகம் பார்த்து கொஞ்சம் இறங்கி வருவான், மறுநிமிடமே ஏதாவது  திட்டிவிடுவான் ..

" தான் நடந்துச்சு விஷ்வா ... என்மேல தப்பு இருக்கு .. ஆனா இவ்ளோ கோபபடுனுமா  விஷ்ணு ???"

பதில் பேசாமல் அழுதான் விஷ்ணு ..

" விஷ்ணு ???"

" எனக்கு தெரியும் அண்ணி .. எங்கண்ணன் ஏன் அழுதார்னு ... ஆனா இதில் முழு தப்பும் உங்க மேலன்னு சொல்ல மாட்டேன் .. "

" ..."

" எங்க சின்ன வயசு கதை தெரிஞ்சிருந்தா உங்களுக்கு அண்ணாவின் கோபம் புரிஞ்சிருக்கும் .. யாரு கண்டா ? ஒருவேளை அந்த ஷோவே நீங்க பார்த்து இருக்க மாட்டிங்க .. நீங்க ரெண்டு பெரும் காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிங்க நெனச்சேன் .. ஆனா எங்க வாழ்க்கையை பத்தி கூட அண்ணா இதுவரை சொன்னதில்லையா ??"

" என்ன விஷ்ணு "

" சொல்றேன் .... எங்க அம்மா அப்பா விவாகரத்து பண்ணவங்க அண்ணி "

" ..."

" இந்த காலத்துல விவாகரத்து என்பது சாக்லட் சாப்டுற மாதிரி இருக்கு .. அப்படி இருந்துமே விவாகரத்து பன்னவங்களை நாம எப்படி பார்க்கிறோம் ??? இப்போவே இப்படின்னா ஒரு 25 வருஷம்  முன்னாடி ??? ஒரு விவாகரத்து பின்னாடி கணவன் மனைவியை விட அவங்களுடைய குழந்தைகள் தான் பாதிக்க படுறாங்க .. பிரியுறது இரண்டு மனசு இல்ல அண்ணி ..பிரியறது  ஒரு குடும்பம் .. ஒவ்வொரு மனுஷனின் குணத்திற்கு பின்னாடி ஒரு குடும்பத்தின் வளர்ப்பு இருக்கு, ஒரு குடும்பத்தின் பிரதிபலிப்புதான் நம்ம கேரக்டர் ... தப்பா எடுத்துகாதிங்க .. ஒருவேளை நீங்களும்  ஒரு பெரிய குடும்பத்தில் இருந்திருந்தா, பேச்சில் இருக்க வேண்டிய தன்மை, விட்டு கொடுக்குறது , சமாதனம் ஆகுறது இதை எல்லாம் நல்லா தெரிஞ்சு வெச்சு இருப்பிங்கன்னு தோணுது .. உங்க சண்டைக்கு காரணம் அண்ணா தான் நான் இல்லைன்னு சொல்லல .. ஆனா சண்டை வந்தா அதை உடனே சரி பண்ணனும்னு உங்களுக்கும் தோனலையே .. சண்டையை ஒருநாள் , ரெண்டு நாள்ன்னு இழுத்துக்கிட்டே தானே போனிங்க .. ஒருவேளை உங்க அம்மா உயிரோடு இருந்திருந்தா இதை உங்களுக்கு அறிவுரைய சொல்லி இருப்பாங்க "

" விஷ்ணு .. "

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.