" ஆமா அண்ணி .. நீங்க அண்ணாகூட சண்டை போட்டுட்டு உங்க வீட்டுக்கு போயிருந்தா உங்க அம்மாவும் அப்பாவும் அப்படியே விட்டுருப்பாங்களா ?"
" ..."
"; தன்னிரக்கத்தில் அழாதிங்க அண்ணி .. மரணம் மூலமா பெற்றோர் பிரிஞ்ச உங்களுக்கே அது இன்னும் வலிக்குதுன்னா, இருந்தும் இல்லாமல் இருக்குற என் அண்ணாவுக்கு எப்படி இருக்கும் .. ?"
" என்ன சொல்ற விஷ்ணு ..? அத்தை மாமா ?"
" உயிரோடு தனித்தனி குடும்பத்தோடு இருக்காங்க .. நடந்தது சுருக்கமா சொல்லனும்னா இதுதான் அண்ணி .. என் அம்மாவும் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க .. எங்க அண்ணனுக்கு 8 வயசு இருக்கும் ..அப்போதான் நான் பிறந்த கைப்பிள்ளை .. கிட்ட தட்ட 9 வருஷ வாழ்க்கைக்கு பிறகு அவங்க ரெண்டு பேருக்குமே மனசு ஒத்து போகலைன்னு புரிஞ்சதாம் .. விவாகரத்து பண்ணிக்கிட்டாங்க .. என் அப்பாவும் சரி அம்மாவும் சரி எங்களை பத்தி நினைச்சு பார்க்கல .. எங்களை வளர்த்தது பாட்டி தாத்தா தான் .. முதலில் எங்களுக்கு எதுவும் புரியலை .. வளர வளரத்தான் எங்க மாமாவுக்கு நாங்க தாத்தா பாட்டியோடு இருக்குறது புடிக்கலன்னு தெரிய வந்தது .. ஆனாலும் என்ன பண்ண முடியும் அந்த இளவயசுல .. எங்க அண்ணா, தாத்தாவின் உதவியில் நல்லா படிச்சாங்க .. தனக்குன்னு ஒரு வேலை கிடைச்சதும் தாத்தாகிட்ட பேசி என்னை தனியா கூட்டிடு வந்துட்டாங்க .. அதுக்கு பிறகு அண்ணனும் தம்பியும் உழைப்பு மட்டும்தான் வாழ்வின் ஆதாரம்னு இருந்தோம் .. சந்தோஷமோ சோகமோ , வாழ்வோ தாழ்வோ அண்ணனுக்கு நான் எனக்கு அண்ணன் நு இருந்தோம் .. அண்ணாவின் இந்த வளர்ச்சி எல்லாமே அவரின் சொந்த உழைப்பு .. இரவுபகல் பாராத உழைப்பு .. ஸ்காலர்ஷிப் கிடைச்சு நான் மலேசியா வந்தேன் .. அண்ணாவும் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டாங்க .. பல வருஷம் பிறகு எங்க வீட்டுக்கு வந்த முதல் பெண் நீங்க .. அண்ணின்னா அம்மா மாதிரின்னு சொல்லுவாங்க .. நீங்க எனக்கு மட்டும் இல்ல அண்ணி .. அண்ணனுக்கும் நீங்க தான் அம்மா " என்றான் தீர்க்கமாய் .. அந்த ஒரு வார்த்தையே அவளுக்கு போதுமானதாய் இருந்தது .. முதல் தடவையாய் அவனின் நிலையை யோசித்து பார்த்தாள் .. புரியாத பலவிஷயங்கள் அப்போதுதான் புரிந்தது .. அன்றும் கூட அவளேதான் அந்த அறையை விட்டு போனாளே தவிர அவனாய் அனுப்பவில்லை .. ஒருவேளை அவனுக்குமே அதிக வேலை இருந்திருக்கலாம் .. நாம்தான் அவசரபட்டுவிட்டோம் .. புரிந்துகொண்டாள் தன் தவறை .. ஏற்றிவிட்டான் விஷ்ணு தெளிவு என்ற சுடரை அவளது மனதினுள் .. இனி என்ன மாற்றங்கள் தான் !!!
ஒரு நாளில் நிகழ்ந்துவிடவில்லை .. இருவரிடையே உருவான பிரிவின் தூரத்தை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்தாள் மயூரி .. தன் பொருட்களை மீண்டும் அவன் அறைக்குள் கொண்டு வந்தாள் .. அவன் அவளை திட்டுவதற்கு முன்னே தன்னைத்தானே அவன்முன்பு திட்டினாள் .. பொறுமை சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டாள் .. அனுதினமும் அவளின் காதலை வெளிப்படுத்தினாள் .. இரவு வணக்கம் சொல்கிறேன் , காலை வணக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று அடிக்கடி அவனை முத்தமிட்டு தன் அன்பை காட்டினாள் ...
அப்போதுதான் அந்த நற்செய்தியும் உறுதியானது .. அவர்கள் வீட்டில் மழலையின் சிரிப்பு கூடிய சீக்கிரம் வரவிருக்கிறது .. விஷ்வாவிற்கு தந்தை என்ற அங்கிகாரத்தை தரபோகிறாள் மயூரி .. அப்படித்தான் ஒரு நாள் அவர்களது அறையில் ஏதோ யோசனையில் படுத்திருந்தான் விஷ்வா .. அவன் அருகில் அமர்ந்து தலை கோதினாள் மயூரி .. அதற்கு மேல் போருக்க மாட்டாமல் அவள் மடி சாய்ந்து அழுதான் விஷ்வா ..
" ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் .... விஷ்வா .. என்ன இது சின்ன பிள்ளை மாதிரி "
" சின்ன பிள்ளைதான் மயூரி நான் .. சின்ன பிள்ளை மாதிரிதான் நானும் .... உன் அன்பில் நான் குழந்தை மாதிரி மாறிக்கிட்டு இருக்கேன் .. ஏன் என் மேல இவ்ளோ பாசத்தை காட்டுற நீ? நான் உன் மேல எவ்வளவு கோபத்தை காட்டினாலும் ஏன் இப்படி தாய் மாதிரி இருக்க ?"
" ஏன்னா நான் இல்லறத்தின் அர்த்தத்தை புரிஞ்சுக்கிட்டேன் மாமா "
" ..."
" நாம கல்யாணம் பண்ணிகிட்டப்போ எனக்குள்ள ஆசை, அன்பு, காதல் வேகம்தான் தான் இருந்தது ..... கல்யாணத்தை நான் அடுத்தகட்டமாக பார்த்தேன்..அதில் ஸ்வாரச்யங்களைதான் தேடினேன் .. எனக்கு புடிச்ச மாதிரி நான் இருந்தேனே தவிர என் குணங்கள் உங்களை எப்படி பாதிக்கிதுன்னு யோசிக்கலா .. அன்னைக்கு நான் விளையாட்டு தனத்தை குறைச்சு இருக்கலாம் .... ஆனா அது அப்போ புரியலை.... கல்யாணம் என்பது ஒரு நுணுக்கமான உறவு ..வாழ்வின் ஆதாராம் அது குடும்பத்தின் அஸ்திவாரமும் கூட . ... இங்கு யாரு ஜெயிக்கிறா யாரு தோற்றது நு முக்கியம் இல்ல .. எவ்வளவு பொறுமையாய் இருக்கிறோமோ, அவ்ளோ அழகாய் நம்ம வாழ்க்கை மாறும்னு இப்போதான் புரிஞ்சுகிட்டேன் .... " என்று சொல்லி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள் ..
" என்மேலயும் தப்பு இருக்கு டா.. நான் உன்கிட்ட என்னை பத்தி முழுசா சொல்லி இருக்கணும் .. ஆனா நான் ஆபீசிற்கு சீக்கிரமா போனதும் லேட்டா வந்ததும் நிச்சயம் உன்னை அவாய்ட் பண்ண இல்லை .. ஆனா அன்னைக்கு நீ அப்படி பேசினதும் உடைந்சுபோயிட்டேன் .. எங்க உன்னை திட்டி நீ இந்த வீட்டை விட்டே போயிடுவியோன்னு பயந்துதான் வாய் திறக்காமல் இருந்தேன் .. உனக்கு நான் தண்ணி அடிச்சா பிடிக்காதுன்னு தெரியும் .. அதான் தண்ணி அடிக்கிற மாதிரி காட்டிகிட்டேன் .. ஆனா நான் குடிக்கல டா . குடிக்கிற மாதிரி நடிச்சேன் .. "
" தெரியும் "
" எப்படி "
" அவ்ளோ தண்ணி அடிக்கிற என் அருமை புருஷன் அவரின் தம்பி வந்ததும் எதுவும் பண்ணலை ..அதனால உங்க கிட்ட எந்த நடுக்கமும் இல்லை .. அதுவும் இல்லாமல் உங்களுக்கு இந்த பழக்கமும் பிடிக்காதுன்னு தெரியும் " என்று மயக்கும்படி சிரித்தாள் ..
" எங்கடி வெச்சிருந்த இங்க மோகன சிரிப்பை .. "
" இங்கத்தான் .. பட் உங்க கோபம் பார்த்ததும் மறைஞ்சிடுச்சு " என்றவளின் குரல் உள்ளே போனது "
" மன்னிச்சுருடா .. உன்கிட்ட பேசிடனும்னு நினைப்பேன் .. ஆனா ஈகோ .. ப்ளஸ் சொல்ல முடியாத வலி "
" எனக்கு புரியுது மாமா .. இனியும் மனிப்பு கேட்க வேணாம் .. எல்லாத்தையும் மறந்திடலாம் .. ஒரு குடும்பம்னா எப்படி இருக்கணும்னு நான் உணர்ந்திட்டேன் .. இந்த மூணு மாசம் நமக்கு பரிட்சை காலம்னு நெனச்சுகலாம் .. நம்ம குடும்பம் தான் முழுமை இல்லாமல் போச்சு .. நம்ம பாப்பாவுக்கு நாம நல்ல குடும்பத்தை கொடுப்போம் " என்று அழகாய் வெட்கப்பட்டாள் மயூரி ..
" மயூ நிஜம்மாவா ? "
" ஆமாங்க .... மூணு மாசம் மூணு வாரம் .. "
" ஏன் டா சொல்லல .. ? இந்த மாதிரி நேரத்துல உன்னை சந்தோசம் வெச்சிக்கணும்ல ஆனா நானோ "
" அடடே என் செல்ல புருஷா, ஏன் சொல்லலைன்னா ஐ லவ் யு மாமா ..அதான் சொல்லல .. நாம சண்டை போடலாம் , சேரலாம் ..அதுக்கு காரணம் நாமாகத்தான் இருக்கணும் .. நம்ம குழந்தை நாம சேர்வதற்கு காரணம் இருக்கலாம் .. அனால் குழந்தை மட்டுமே ஒரு காரணமா அமைஞ்சிட கூடாது "
" ஐ லவ் யு மயூ "
" ஐ லவ் யு டூ விஷ்வா "
அப்போது அவனது செல்போன் சிணுங்கியது ..
" ஹெலோ விஷ்ணு "
" அண்ணா நான் சிங்கப்பூர் போயிகிட்டு இருக்கேன் "
" என்னடா சொல்லவே இல்லை ? "
" அடடே .... ரெண்டு தடவை கதவு தட்டினேன் .. உங்களுக்குத்தான் கேட்கல .. நானும் எவ்வளவு நாள்தான் பிரம்மச்சாரியா இருக்குறது .. அதான் என் ஜோடியை வலைவீசி தேட போறேன் "
" என்னடா .. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் .. உன்னோடவும் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நெனச்சேனே "
" ஹா ஹா தராளமா ஸ்பென்ட் பண்ணுங்க யாரு வேணாம்னு சொன்னா ? நான் ககீழதான் இருக்கேன் .. சும்மாதான் அள்ளிவிட்டேன் .. நானே சொந்தமா ரசமலாய் செஞ்சு வச்சிருக்கேன் .. யாரு முதலில் வருவிங்களோ அவங்களுக்குதான் ஸ்வீட் "
" அப்போ நான் என் குலப் ஜாமுனை தூக்கிகிட்டு கீழே வரேன் " என்று சிரித்து போனை வைத்தவன், தன் மனைவியை அணைத்து முத்தமழை பொழிந்து சொன்னதுபோல அவளை பூமாலையாய் கையிலேந்திக்கொண்டு வந்தான் .. அதை தூரத்தில் இருந்து பார்த்த விஷ்ணு ஆனந்தத்தில் கண்கலங்கினான் ..
குடும்பம் எனப்படுவது உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து உருவாகுவது அல்ல .. பிணைப்பும் அன்பாலும் சேர்க்கப்படும் உறவுகளே உண்மையான குடும்ப சூழலை உருவாக்கும் என்பதற்கு இம்மூவரும் மற்றும் வரபோகும் குட்டி பாப்பாவும் உதாரணம் ஆகட்டும் .. நன்றி
This is entry #35 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.