(Reading time: 9 - 18 minutes)

முழுசா மூணு நாளாச்சு எனக்கு ஜுரம் குறைய. தீபாவளி முடிந்து அடுத்த நாள் கோவர்த்தன் பூஜா ன்னு சொன்னான் அனுஜ் . ஒரே வீட்டில் தனிமையில் ஜுரத்தின் மயக்கத்தில் நான் அவனோடு மூன்று நாட்கள் இருந்திருக்கிறேன். இவனும் ஆண் தான். அதுவும் முன்னாடி அவன பத்தி தப்பா நினச்சுட்டேன்.

"உனக்கு உன் டாடின்னா ரொம்ப பிடிக்குமா" அவன் கேட்டான்.

"ஆமா! ஏன்? " நான் கேட்டேன்

"இல்லை மூணு நாளா என் கையப் பிடிச்சிட்டு டாடி டாடின்னு சொல்லிட்டு இருந்த" என்றான்.

"நீயும் உன் தம்பியும் பொறந்த போது எனக்கு ரொம்ப பலவீனமா ஆகிருச்சு. உன் அப்பத்தா வேற உன்ன கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருக்கும். பசி ஆறுர நேரம் தவிர உன் டாடி மடியிலே தான் கிடந்த" என்பாள் அம்மா.

அவராவது என்னைப் பெற்ற தந்தை. ரத்த பந்தம். இவன் யார். எனக்கும் இவனுக்கும் என்ன சொந்தம். எந்த ஜென்மத்து பந்தம். வீட்டிற்குப் போய் குடும்பத்தோட பண்டிகை கொண்டாடாம ஒரு தப்பான பார்வை இல்லாம எனக்கு சேவகம் செஞ்சுகிட்டு இங்கன பலி கிடந்த இவனை என்னனு சொல்றது. தாயுமானவன்னு சொல்லனும்னு என் மனசாட்சி சொல்லிச்சு.

"என்ன உன் மகளா ஏத்துப்பியா" அவன்கிட்ட கேட்டேன்.

ஒரு வயசுப் பொண்ணு தன் வயசுப் பையன்கிட்ட இப்படிக் கேட்டது யாருக்குமே வித்தியாசமா தான் தெரியும் 

"நீ ஜுரத்தில்  டாடி டாடி ன்னு என் கைய பிடிச்சிட்டு இருந்த போதே எனக்கும் நாலு வயசு குட்டி பொண்ணா தான் தெரிஞ்ச" என்று என்னை அணைத்துக் கொண்டான்.

இன்றைக்கும்  பாரதி அதே தன்னம்பிக்கையுடன் தைரியத்துடன் பெண் விடுதலை, புரட்சி ன்னு  பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனா ஆண்களை எதிரிகளாக பார்க்கும் மனப்பான்மை போய்  அவங்களும்  சக மனிதர்கள் என்ற பக்குவம் வந்திருக்கிறது.

இன்றைக்கும் ஊர்ல எந்த பொண்ணுக்கும் ஒரு தீங்கு வந்தா முதல் ஆளா போய் நிப்பேன் தான். ஒட்டுமொத்த ஆண்களும் ராட்சஸ்ர்கள் என்ற எண்ணம் மறைந்து தவறு செய்பவர்களை தண்டிச்சு நல்ல மனசு உள்ள ஆண்களை  கூட்டு  சேர்த்துகிட்டு  பெண்ணியம் பேசுகிறேன்.

பெண்ணியம்னா ஆண்களோடு மல்லுக்கு நின்னு சரிசமமா நீயா நானான்னு போட்டிப் போடறது இல்ல. நம்ம சுய அடையாளத்தைத் தொலைக்காம பொறுமையா அனுசரணையா கைக் கோர்த்து நடப்பது தான்னு தெரிஞ்சுகிட்டேன்

பின்னுரை:                

து என் டாடி கர்சீப்  குடு" என 3 வயது அஞ்சலி என்கிட்டே இருந்து கர்சீப் பிடுங்கினாள்.

"நீ வரதுக்கு முன்னே இருந்தே நான் தான் உன் டாடிக்குப் பொண்ணு. போ தர மாட்டேன்" என வம்பு செய்து கொண்டிருந்தேன்.

அஞ்சலி அனுஜின் மகள். ஒற்றைப் பெண்ணாய் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த எனக்குப் போட்டியா வந்தவள். என் நெற்றிக் குங்குமம் கண்ணில்  விழுந்துட்டே இருந்தத பார்த்து அனுஜ் அவன் கர்சீப் கொடுத்து கண்ணுல படமா பார்த்துக்கோன்னு கொடுத்திருந்தான் . அதைத் தான் இந்த வாண்டு இப்போ பிடிங்கிக் கொண்டு இருக்கு.

அஞ்சலி "ஓ" என அழ  எல்லோரும் வந்துட்டாங்கய்யா பஞ்சாயத்து பண்ண.

"கல்யாணப் பொண்ணா லட்சணமா இருக்கியா. பச்சைப் புள்ளையோட சண்டை போட்டுக்கிட்டு. உங்கள நினச்சா தான் மாப்பிள்ளை எனக்கு பாவமா இருக்கு" என என் அம்மா என்னை அதட்ட , "நீ எனக்கு அம்மாவா இல்ல உன் மருமவனுக்கு அம்மாவா! இரு உன்ன கவனிச்சிக்கிறேன்" என மைண்ட் வாய்ஸ் குடுத்துட்டு இருந்தவள் சட்டென அமைதி ஆகிட்டேன்.

"குட்டிமா  அஞ்சலி பாப்பாகிட்ட கர்சீப் குடுத்திருங்க. என்னோட கர்சீப் வச்சுக்கோங்க" என வெள்ளை கலர்ல ப்ளூ எம்பிராய்டரி போட்ட கர்சீப் குடுத்தார் என் கழுத்தில் கொஞ்ச நேரத்திற்கு முன் தாலி கட்டி என்னோட புருஷனா ஆனவர்.

அதில் பாரதி ன்னு எம்பிராய்டரி செய்திருந்தது. அஞ்சலி பாப்பாகிட்ட கர்சீப் கொடுத்துவிட்டு என் கையில் இருந்ததையே ஆச்சரியமா பார்த்துக் கிட்டு இருந்தேன். லேசா கண் கலங்க என் கையில் இருந்த கைக்குட்டையால என் கண்ணைத் துடைச்சு," உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி. என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா" அவரு பாட சுற்றுப்புறம் மறந்து அவர் மார்பில் சாஞ்சுட்டேன்.

இதோ இன்னொரு தாயுமானவன்.

41 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.