(Reading time: 9 - 18 minutes)

தாயுமானவன் - மது

ன் பேர் பாரதி. பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல

என்னோட பிரண்ட்ஸ் என்கிட்டே கேட்பாங்க," ஏண்டி..பாரதின்னு பேர் வச்சிருக்கிறதால இப்படி எப்போ பார்த்தாலும் பெண் சுதந்திரம், புரட்சின்னு இருக்கியா இல்லை நீ இப்படித் தான்னு பிறக்கும் போதே உன் அம்மா அப்பாவுக்குத் தெரிஞ்சு போய் இந்தப் பேர வச்சிட்டாங்களா"

"பிறக்கும் போதே இல்ல..அம்மாவோட வயித்துக்குள இருக்கும் போதே என்னோட டிவின் பிரதரை சரியா வளர விடாம அவன் சத்தையும் சேர்த்து உரிஞ்சிட்டு கொழு கொழுன்னு பிறந்தேனாம்..அவன் சர்வைவ் பண்ண முடியாம அவன் லைபையும் என்கிட்டே குடுத்துட்டான்" கொஞ்சம் சலிப்பாக சொல்வேன்.

"அட பாவமே!! நீ என்ன பண்ணுவ அதுக்கு" என தோழிகள் கேட்க

என் அப்பத்தா (அப்பாவின் அம்மா - பாட்டியை  இப்படி அழைப்பர்) சொல்லும் குலந் தழைக்க இருந்த வாரிசை நான் தான் முழுங்கிட்டேன்னு.. நான் என் வாயை ஆஆஆ ன்னு திறந்து காட்டுவேன் நல்லா பார்த்துக்கோ என் வாய்குள்ள இல்லைன்னு சொல்லுவேன். விறகுக் கட்டையால அடிக்க துரத்திட்டு வரும்" என்று ஹஹ்ஹஹா வென  சிரிப்பேன்.

அது என்னவோ சின்ன வயசில் இருந்தே யாராவது, "நீ பொட்டபுள்ள இதெல்லாம் உனக்கு எதுக்கு", " இது பசங்க ஆட்டம். பொம்பள புள்ளைக விளையாட்ட போய் ஆடு" இப்படி சொல்லி நீ பொண்ணு என்ற முத்திரை குத்தினாலே எனக்கு கோபம் பொத்துக்கிட்டு வரும்.

இதெல்லாம் ஆம்புளைங்க செய்யற வேலைன்னு எதை சொன்னாலும் முத ஆளா போய் அதை முடிச்சிட்டு தான் மறுவேலை. நடை உடை பாவனை எல்லாத்திலும் பசங்க மாதிரி தான் .

என் அம்மம்மா "ஏழு கழுத வயசாச்சு, தாவணி வேணாம் அந்த சுடிதார தான் போட்டு ஒரு பூவையும் நெத்தில ஒரு சாந்தையும் வச்சா தான் என்ன . எப்போ பாரு பசங்க போடற ஜீன்ஸ் பேண்ட்டு காலர் சட்டைய போட்டுக்கிட்டு" என்று புலம்பிகிட்டு இருக்கும்.

அம்மாவும் டாடியும்  பெண் அப்படின்றது பெருமையான ஒன்று. தன்னம்பிக்கையோடு தைரியமா இருக்கணும்னு தான் சொல்லி வளர்த்தாங்க. எனக்கு எப்போவுமே முழு சுதந்திரம் குடுத்தாங்க. கொஞ்சம் நிறையாவே செல்லமும் கொடுத்துட்டாங்க.

படிப்பில் கெட்டி. பேச்சுப் போட்டி கவிதை இதிலும் டாப் . ஸ்கூல் காலேஜ்ல கோ எட் தான். அப்போ என்ன பார்த்தாலே பசங்க ஒதுங்கிருவாங்க. கீர்த்து  தான் சொல்லுவா உனக்கு டெர்ரர்ன்னு இந்த பயலுக பேர் வச்சிருக்காகன்னு.

ப்படித் தான் இருந்தேன்.. ஊர்ல எந்த பையன் எந்த பொண்ண டீஸ் பண்ணாலும் வரிஞ்சு கட்டிக்கிட்டு போய் வக்காலத்து வாங்குவேன்.

"உன்ன கட்டிக்க போறவன் பாவம்டி" இப்படி யாரவது சொல்லிட்டா அவங்க காலி. "எவனுக்கோ அடிமையா வாழ்நாள் பூரா வாழ்வதா நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்ல" இது தான் என் வாழ்க்கையின் குறிக்கோளா இருந்துச்சு.

ஆண்கள் என்றாலே ராட்ஷசனுங்க என் அப்பாவை தவிர. இது தான் கொஞ்ச நாள் முந்தி வரை நான் வச்சிருந்த கான்செப்ட்.

காலேஜ் முடிச்சு காம்பசில் செலக்ட் ஆகி 3 மாசம்  டிரைனிங்க்கு   அப்போது நான் ஜெய்பூர் போயிருந்தேன்.

"நாங்க வேணும்னா வந்து விட்டுட்டு வரோமே" அம்மா கேட்க," நான் என்ன பச்ச குழந்தையா. எல்லாம் ஆபீஸ்லேயே தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. டிரைன் ஏத்தி விட வேணும்னா வாங்க" என்று கெத்தாக சொன்னேன்.

40 மணி நேரம் டிரைன் பயணம். நமக்கு தான் இருக்கவே இருக்கு புக்ஸ்.

ரு வழியா ஜெய்பூர் ஸ்டேஷன் போனா அங்க ஒருத்தனுக்கும் இங்கிலீஷ் புரியல. நாம பேசற குச் குச் ஹோதா ஹை, ஹம் ஆப்கே ஹை கோன் ஹிந்தியாவது புரியும்னு பார்த்த ஹும் ஹும். கடைசியில சைகை பாஷை தான் கை குடுத்துச்சு.

எப்படியோ போர்டர் வச்சு டாக்ஸி பிடிச்சு கம்பனி கெஸ்ட் ஹவுஸ் போனா அங்க ஒருத்தரும் நம்ம ஊர் புள்ளைங்களே இல்ல. அங்க இருந்த பெரிய வீட்டில் நாங்க மொத்தம் 5 பேரு. நானும் இன்னொரு பொண்ணும். மத்த மூணு பேரும் பசங்க.

குளிர் காலம் வேற. என் கூட இருந்த பொண்ணு பூஜா ஸ்வட்டர் ஜாக்கெட் எல்லாம் வச்சிருக்கியானு கேட்டா. நான் என்னவோ அவ செவ்வாய் கிரகத்துக்குப் போறதுக்கு ஆஸ்ட்ரோநாட் சூட்  கேட்டதைப் போல லுக் விட்டேன்.

மார்கழி மாசம் கூட போர்வை போர்த்திக்கமா தான் படுப்பேன். எனக்கு குளிர்னா பிடிக்கும்ன்னு அவகிட்ட  சொன்னேன்.

அவளும் ஓகே யார்னு விட்டுட்டா. குளிர் சிலு சிலுன்னு நல்லா தான் இருந்துச்சு. டிரைனிங்க்ல நான் தான் நல்லா பர்பர்ம் பண்ணி பாராட்டு வாங்கினேன். அந்த மூணு பசங்கள்ள அனுஜ் ன்னு ஒரு பையன் இருந்தான்.

என்கிட்டே புரியாததை சொல்லித் தர முடியுமான்னு கேட்டான். எனக்கோ பெருமை. அவன்கிட்ட என் கெத்த எனக்கு கொடுத்த முதல்ல கொஞ்சம் காமிச்சு அப்புறம் சொல்லிக் குடுத்தேன். எப்போ பாரு பேச்சு குடுத்துட்டே இருப்பான். அழகான பொண்ணுங்கள பார்த்துட்டா போதுமே. உடனே வந்திருவானுக டவுட்டுன்னு . நானும் முறைப்பாவே இருப்பேன். அது நம்ம கூட பொறந்த குணமாச்சே.

தீபாவளிக்கு நாலு  நாள் முன்னாடி எனக்கு லேசா காய்ச்சல் ஆரம்பிச்சுது. பயங்கர குளிர் நடுக்கம். அப்புறம் ஜாஸ்தி ஆகிருச்சு. பூஜா தீபாவளி லீவுக்கு அவ ஊருக்குப் போயிட்டா. வடக்குல 5 நாள் தீபாவளி கொண்டாடுவாங்க. கம்பனில லீவு விட்டுடாங்க

மத்த எல்லோரும் போய்டாங்க. அனுஜ் மட்டும் கிளம்பிட்டு இருந்தான். நான் மட்டும் தான் 5 நாள் அங்க தனியா இருக்கணும். எங்க ஹவுஸ் கீப்பரும் லீவு போட்டுட்டார்.

அனுஜ் போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போக என் ரூமுக்கு வந்தான். நான் சுருண்டு போர்வை போத்திக்கிட்டு நடுங்கிட்டு இருக்கிறதைப் பார்த்து கிட்ட வந்து நெத்திய தொட்டுப் பார்த்தான். பயங்கர சூடு.

எனக்கு அரை குறையா தான் எல்லாம் நினைப்பு இருந்துச்சு. அவன் போய் ஒரு டாக்சி பிடிச்சிட்டு வந்து என்னை கை தாங்களா டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனான். அவர் கடுமையான வைரஸ் காய்ச்சல்ன்னு சொல்லி ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார். நல்லா ரெஸ்ட் எடுக்கணும். நல்லா சாப்பிடனும்னு சொன்னார்.

நான் தான் கிட்டத்தட்ட ஒரு மாசமா சப்பாத்தி பிடிக்காம சரியா சாப்பிடவே இல்லையே. அதான் ரொம்ப வீக்கா போயிட்டேன்.

கெஸ்ட் ஹவுஸ் வந்ததும் என்னை படுக்க வச்சு என் வீட்டுக்கு சொல்ல நம்பர் கேட்டான். நான் வீட்டுக்கு சொன்னா பயந்திருவாக. எங்க பெரியப்பாரு பொண்ணுக்கு வேற தலை தீபாவளின்னு எல்லோரும் கொண்டாடறாங்க. தாங்க்ஸ் அனுஜ் நீ ஊருக்கு போ ஐ வில் மனேஜ்ன்னு சொன்னவ தான் பிரட் கொஞ்சம் சாப்பிட்டது எல்லாம் வெளி வந்திருச்சு.

அப்படியே மயக்கமா வர படுத்துட்டேன். அனுஜ் எல்லாத்தையும் கிளீன் செய்து அவங்க வீட்ல தான் தீபாவளிக்கு வரலைன்னு சொல்லி எனக்குப் பணிவிடை செஞ்சிட்டு இருந்தான்.

"ஏதாவது சாப்பிடு மாத்திரை போட்டுக்கணும்" அவன் கெஞ்ச," பிரட்டுது. ரசஞ்ச்சோறு இருந்தா நல்லா இருக்கும்" ன்னு  சொன்னேன் 

எப்படியோ நெட்டில் தேடி பிடிச்சு ரசமும் சோறும் பொங்கிக் கொடுத்தான். அவன் ரஜாய் எனக்குப் போர்த்தி விட்டு என் ரூம் கதவை தாழ் போடாமல் ஹாலிலே தூங்கினான்.

 

41 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.