(Reading time: 20 - 39 minutes)

பூங்காற்று...புயலானது... - தங்கமணி சுவாமினாதன்

ட்டென விழிப்பு வந்தது கவிதாவுக்கு.இப்போதெல்லாம் அலாரம் வைத்து எழுவதில்லை.சரியான

நேரத்திற்கு எழுந்து கொள்ள பழகி விட்டது.வலது கையை தலைமாட்டில் கொண்டு போய் துழாவ

கைபேசி தட்டுப்பட்டது.அதை எடுத்து உயிரூட்டி மணிபார்க்க நேரம் அதி காலை 5.10.பீங்க்..பீங்க்..

Poongatru puyalanathuஎன்று ஆரன் சப்தத்தை எழுப்பிக்கொண்டு பாக்கெட் பால்காரர் டூ வீலரை இறைச்சலோடு ஓட்டிச்

செல்லும் சப்தம்.

விசுக்கென்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள் கவிதா.பக்கத்தில் ஒருக்களித்துப்

படுத்து சன்னமான் குறட்டை ஒலியோடு நிம்மதியாகத் தூங்கும் கணவன் ப்ரகாஷ்.அகன்று படர்ந்த

முதுகு..பனியன் கூட போடாமல்..அவனைப் பார்க்கவே எரிச்சலாய் வந்தது கவிதாவுக்கு.என்ன

புருஷன் இவன்...இவன்லாம் ஒரு ஆம்பள....அப்பிடியே எதயாவது கைல எடுத்து தூங்கற அவன

ஓங்கி அடிக்கணும் போல இருந்தது கவிதாவுக்கு.இவனயா உருகி உருகி காதலிச்சோம்..இவனுக்

காகவா பெத்தவங்களையும்,பாசமான ஒரே தம்பியையும் விட்டுட்டு வீட்ட விட்டு வந்தோம்...பாவி

எப்பிடில்லாம் பேசி தன்ன மருகி மருகி காதலிச்சதா நடிச்சி ஏமாத்திருக்கான்.சே..தலையை உலுக்கு

உலுக்கி..காலங்கார்த்தால வேண்டாம்..இவனப்பத்திய நினைப்பு...என்று இடுப்பு வரை போர்த்தியி

ருந்த போர்வையை தள்ளிவிட்டு  கட்டிலை விட்டு கீழே இறங்கினாள் கவிதா.தலையை லேசாகச்

சுற்றியது.ஓரடி எடுத்து வைப்பதற்குள் உடம்பு கொஞ்சம் ஆடியது.சட்டென கட்டிலின் விளிம்பைப்

பிடித்துகொண்டு சமாளித்துக்கொண்டாள்.சிறிது நிதானித்துவிட்டு பாத் ரூம் போய் பல்

துலக்கி முகம் கழுவி விட்டு ஹீட்டரைப் போட்டு விட்டு கிச்சனுக்குள் நுழைந்தபோது ஹால் கடிகாரம் மணி 5.30 என்று காட்டியது.

கிச்சனுக்குள்ளேயே இருந்த ஃபிரிட்ஜ்ஜிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்து கட் செய்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தபோது.. மனசு அம்மாவிடம் சென்றது.அம்மா.... எவ்வளவு அன்பான பாசமான தன் மீது உயிரையே வைத்திருந்த அம்மா..குட்டி.... கவிதாக் குட்டி..எழிந்திருடா செல்லம்..

லேட்டாருது பாரு..cab வந்துடும்..அப்பறம் எதுவும் சாப்பிடக்கூட சாப்பிடாம ஓடிடுவ...தெனமும்

கால சாப்பாட்ட தவிர்த்தா ஒடம்பு என்னெத்துக்கு ஆறது..எழுந்திரு..எழுந்திரு..தினம் தினம் பாசமாய்

படுக்கையிலிருந்து எழுப்பும் அம்மா.பனாட்டு நிறுவனமொன்றில் டீம் லீடர் கவிதா.நல்ல சம்பளம்.

பஸ் ஸ்டாப்பிற்கு வந்து தன்னை ஏற்றிச்செல்லும் cabல்  ஏற்றிவிட டிவிஸ் 50 யில் தன்னை அழைத்

துச் செல்லும் அப்பா..தான் செல்லும் வரை அங்கேயே நின்று கை அசைத்து விடை கொடுத்த பிறகே

வீட்டுக்குத் திரும்புவார்..எவ்வளவு பாசமான அப்பா..எவ்வளவு நம்பிக்கை தன் மீது அவருக்கு..

இந்த தாய்க்கும் தந்தைக்குமா நான் துரோகம் செய்தேன்..நினைக்கும் போதே விம்மல் வெடித்தது

கவிதாவுக்கு.

ப்ளஸ் 2 வில் நல்ல மதிப்பெண்களோடு பாஸ் செய்து விட்ட கவிதாவுக்கு பி.இ.படிக்க ஆசைதான்.

ஆனாலும் கம்பெனியொன்றில் சாதாரண உத்தியோகம் பார்க்கும் அப்பாவுக்கு அவ்வளவு செலவு

செய்து படிக்க வைப்பது சிரமம் என்பதை அறிந்தே இருந்ததால் தன் விருப்பத்தை பெற்றோரிடம்

சொல்லவில்லை.அப்பாவே ஆரம்பித்தார்...ஜானகி..கவிதாக் குட்டி +2 ல எவ்வளவு மார்க் வாங்கியிருக்கா பாத்தியா..எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஜானகி..மனைவியிடம் சொல்லிச்

சொல்லி மாய்ந்து போனார்.அக்கம் பக்கத்து வீட்டினருக்கெல்லாம் சாக்லெட் வினியோகம்..

எல்லோரிடமும் பெண்ணைப்பற்றிச் சொல்லிச் சொல்லி பெருமை.

ஜானகி..நான் ஏற்கனவே தீர்மானிச்சுட்டேன்..கவிதாவ பி.இ தான் படிக்க வெக்கணும்..எவ்வளவு செலவு ஆனாலும் சரி..பேங்க்ல படிப்பு லோன் தருவாங்க...பேங்க்ல வேல பாக்குற தெரிஞ்சவங்க

கிட்ட சொல்லி வச்சுருக்கேன்...என்றதும் அப்பா சொல்லுவதைக் கேட்டுக்கொண்டிருந்த கவிதாவுக்கு

சந்தோஷம் தாங்க முடியவில்லை.

ஜானகிக்கு பெண்ணை பி.இ.படிக்க வைக்க ஆசைதான் என்றாலும் அடுதாப்ல பத்தாம் வகுப்புப்

படிக்கும் பையனும் இருக்கானே..அவன் ப்ளஸ் 2 முடிச்சதும் அவன என்ன படிக்க வைப்பது அவன

பி.காமோ,பிஎஸ்ஸியோ படிக்கவைக்க முடியுமா?அக்காவ மட்டும் பி.இ.படிக்கவைப்பீங்க நான்

மட்டும்....என்று கேட்க மாட்டானா?ரெண்டு பேரையும் பெரிய படிப்பு படிக்க வைக்க நமக்கு என்ன

அப்படி வசதியா இருக்கு என்று நினைத்த ஜானகி..ஏங்க..இதெல்லம் நமக்கு சரிப்பட்டு வருமா?

இவள படிக்க வச்சா அப்பறம் நம்ம பையன் சித்தார்த்த எப்பிடி படிக்க வைக்கறது?பணத்துக்கு

எங்க போறது?என்று கேட்க..

அம்மா..நான் நன்னா படிச்சு நல்ல வேலைக்குப் போயி சம்பாதிச்சு நானே தம்பிய படிக்க வெப்பேம்மா..நீ கவலயே படாதம்மா என்று கவிதா சொல்லவும்..பாத்தியா ஜானகி எம் பொண்ண..

எப்பிடி பேசரா பாரு..என்ன சொல்ரா பாரு..அவளே தம்பிய படிக்க வெப்பாளாம்...பாத்தியா....

நீயும் கேட்டீல்ல..எம் பொண்ணுடி அவ..என்று வலது கையை தன் நெஞ்சுமீது வைத்து சந்தோஷத்தோடு சொல்லவும்..கவிதாக்குட்டி..என் செல்லமே..என்றபடி வேகமாய் வந்து தன்

மகளைப் பாசத்தோடு அணைத்துக்கொண்டாள் ஜானகி.இவர்களின் பேச்சைக் கேட்டபடிசேரில் அமர்ந்திருந்த சித்தார்த் சட்டென எழுந்து வந்து தேங்க் யூக்கா..என்றான் அக்காவின் கையைப்

பிடித்து.அந்த பாச பந்தங்களை உதறி விட்டு இவன் பின்னால் எப்படி வரத் துணிந்தோம்?

சள..சளவென பாத் ரூமிலிருந்து தண்ணீர் கொட்டும் சப்த்தம்..நினைவுகளிலிருந்து சட்டென மீண்ட

கவிதா..என்ன இன்னிக்குஇவன் இவ்வளவு சீக்கிரம்..எழுந்தாச்சு..ஏதாவது ப்ளான் இருக்கும்..

இல்லாட்டி ஆஃபீஸ் புறப்படுவதற்குள் அவனுக்கும் எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டு 

அவனை எழுப்பி சொல்லிவிட்டு செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்..ஒரு நாளாவது

பிரர்ச்சனை இல்லாமல் ஆஃபீஸ்க்கு நிம்மதியாய்ப் போனதில்லை.அத்தனை பேச்சு அத்தனை

வார்த்தைகள் வரம்பில்லாமல் பேசுவான்.அவன் பாத் ரூமிலிருந்து வந்த பிறகு இன்று என்ன

காரணத்தைக் கண்டு பிடித்து சண்டையை ஆரம்பிக்கப் போகிறானோ..நினைக்கும்போதே

மிகவும் ஆயாசமாக இருந்தது கவிதாவுக்கு.

தொண்டைக்குள் விரலை விட்டுக் குடைந்து குடைந்து சப்தத்தோடு எச்சிலைத்துப்புவது கேட்டது

கவிதாவுக்கு.அப்படி என்னதான் இருக்குமோ தொண்டைக்குள்..கண்டபடி குடித்துவிட்டு வந்தால்..?

துண்டால் முகத்தைத் துடைத்தபடி வெளியே வந்தான் ப்ரகாஷ்...இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.