(Reading time: 20 - 39 minutes)

னி அப்பா அம்மாவிடமும் செல்ல முடியாது..இனி தான் தான் அவளுக்கு கதி என நினைத்தான்

ப்ரகாஷ்.அதனாலேயே..கவிதாவை மிரட்டி மிரட்டிப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்தான்.

வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தாள் கவிதா.வயிற்றைப் புரட்டி புரட்டி வாந்தி

எடுக்க வேண்டும் போல் இருந்தது.கண்டது எதையும் சாப்பிட வில்லையே..அப்புறம் ஏன் இப்படி

புரியாமல் தவித்தாள் கவிதா.

மதியம் சாப்பாட்டு இடைவேளை.கவிதா வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டுவரவில்லை.கேன்டீனுக்

கும் போய் சாப்பிடப்பிடிக்கவில்லை.வெறுமனே அம்ர்ந்திருந்தாள்.

ஹாய்..கவி..சாப்படல..?கேட்டபடியே வந்தாள் கவிதாவின் நெருங்கிய தோழி மீரா

ம்ம்..இல்ல...

அபோதுதான் கவிதாவின் முகத்தைப்பார்த்தாள்..மீரா.என்ன கவி..ஏன் என்னவோபோல இருக்க?

என்னாச்சு..எனி ப்ராப்ளம்..?கவிதாவின் வாழ்க்கையை முற்றிலுமாக அறிந்த மிக நெருங்கிய தோழி.

கவிதாவுக்கு மீராதான் ஒரே வடிகால்.

ப்ச்..ஒண்ணுமில்ல மீரா..காலேலேந்து வயித்த புரட்டிக்கிட்டு வாந்தியா வருது..எதுவும் சாப்பிட

புடிக்கில..வயித்துக்கு என்னாச்சுன்னு புரியல...

சட்டென கவிதாவைப் பார்த்தாள் மீரா.ஏன் கவி...இந்த மாதம் அது ..வந்துதா?குளிச்சிட்டயா?

சட்டென தூக்கிவாரிப் போட்டது கவிதாவுக்கு..ஐயோ மற்ந்தே போய்ட்டேனே..மனதிற்குள் குளித்து

எத்தனை நாள் ஆயிற்று என கணக்குப் போட்டாள்..கடவுளே என்ன இது பதினெட்டு நாள் அல்லவா

தள்ளிப்போயிருக்கு...வேண்டாம் வேண்டாம் அப்பிடி எதுவும் இருந்துவிடக்கூடாது...அதுவாய்

இருந்தால் அப்படி இருந்து விட்டால் ..நினைக்கவே பயமாக இருந்தது கவிதாவுக்கு..விம்மிவெடித்து

அழ ஆரம்பித்தவளை முதுகைத்தடவி சமாதானம் செய்தாள் தோழி மீரா.

அழாத கவி...அது அப்பிடிதான்னா இருந்துட்டுப் போகட்டுமே..

வேண்டாம் வேண்டாம் மீரா..இது உண்மைனா..இது எனக்கு வேண்டாம்...அவனோட எதுவும் எனக்கு வேண்டாம்...அவன மாதிரியான ஒரு அயோக்கியன் இந்த உலகத்துக்கு வேண்டவே

வேண்டாம்...

ஏன் கவி..ஒன்னமாரி ஒரு நல்ல குழந்தை பிறக்க்கூடாதா என்ன?

இல்ல இல்ல மீரா..அது நால்லதா இருந்தா கூட அவனோட கருவ நான் சுமக்க தயாரா இல்ல....

ப்ளீஸ்..உங்க அம்மா..டாக்டர் தானே....மீரா..எனக்கு  ஒதவ மாட்டாங்களா..ப்ளீஸ்..மீரா..

கவி..அமைதியா இரு கவி..கொஞ்சம் யோசிச்சுப் பாரு கவி..சரியான வாழ்க்கை அமையாம

தவிக்கிற நீ இந்த கொழந்த முகத்தப் பார்த்தாவது கொஞ்சம் ஆறுதல் அடையலாம்ல..அதுனால

இத வேண்டாம்ன்னு சொல்லாத கவி...

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கவிதா ஏற்க மறுத்துவிட இரவு தன் தாயிடம் பேசுவதாகவும்

ஏற்பாடு செய்வதாகவும் சொன்னாள் மீரா.

அரை நாள் லீவு போட்டுவிட்டு வீட்டுக்குக்கிளம்பினாள் கவிதா.

 வீ ட்டுக்கதவு வெறுமனே சாத்தியிருக்க  கதவைத்திறந்து கொண்டு உள்ளே சென்றாள் கவிதா.

ப்ரகாஷைக் காணவில்லை...அவன் அறையில் பார்த்த போது அவனது ஏர் பேக்கையும் கொடியில்

தொங்கும் அவனது ட்ரெஸ்களையும் காணவில்லை.வழக்கம் போல எங்கையாவது போயிருப்பான்

எப்படியும் ரெண்டு மூணு நாள் ஆகும் திரும்ப.கையில் காசிருக்கும்..செலவாகும் வரை ஊர் சுற்றி

விட்டு வருவான் என்று நினைத்த கவிதா இதுவும் நன்மைக்குத்தான்..தான் செய்யப் போகும் சில

செயல்களுக்கு அவன் இங்கு இல்லாமல் இருப்பதே னல்லது என்று எண்ணினாள்.

காலை பத்து மணி.ரமாதேவி மகப்பேறு மருத்துவமனையில் டாக்டர்.ரமாதேவி யெம்டி.டிஜிஒ.

என்ற பெயர்ப் பலகை தொங்கும் அறையின் முன் அமர்ந்திருந்தள் கவிதா.

டாக்டரின் அழைப்பின் பேரில் உள்ளே சென்ற கவிதாவை உட்ட்காரச்சொன்ன டாக்டர் ஏற்கனவே

மகள் மீரா கவிதாவைப் பற்றி சொல்லியிருந்ததால் அதிகமாக எதுவும் கேட்கவில்லை.

ஒரு மருத்துவர் என்ற முறையில் சில அறிவுறைகளைச் சொல்ல..கவிதா பிடிவாதமாக இருக்க

வேறு வழியின்றி அவரும் கவிதா கர்ப்பம் தனா என்று உறுதிப்படுத்திக் கொண்டு வெறும் பதினெட்டு

நாள் கருதானே என்று ஒரு ஊசி போட்டு மாத்திரைகள் எழுதிக்கொடுக்க அவருக்கு னன்றி சொல்லி

மருத்துவமனை விட்டு வெளியே வந்தாள் கவிதா.இதுவே வேறு மருத்துவரிடம் சென்றால் 

அவ்வளவு எளிதாக கருவைக்கலைக்க உதவியிருக்க மாட்டார்கள்.கணவனோ,அப்பாவோ,ரத்த

சம்பந்தப்பட்டவர்களோ கையெழுத்துப் போடவேண்டும் என்பார்கள்.நல்ல வேளை தோழி மீராவின்

உதவியால் இது முடிந்தது..என்று நினைத்த கவிதா மானசீகமாக மீராவுக்கு நன்றி சொன்னாள்.

மருத்துவ மனையைவிட்டு வெளியே வந்த கவிதாவின் கால்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி

நடந்தன.

அட்வொகேட்.கோதண்டம் பி.ஏ.பி.எல்.என்ற பெயர்ப்பலகை தொங்குமமிடத்தில் போய் னின்றன

அவள் கால்கள்.

வக்கீலின் அலுவலக அறை வாசலில் இருக்கையொன்றில் அமர்ந்திருந்தாள் கவிதா.

உள்ளே அழைக்கப்பட..வணக்கம் அட்வொகேட் சார்..

வணக்கம் உட்காருங்க...

உட்கார்ந்தாள் கவிதா.

சொல்லுங்க மேடம்...

சார்..ஐம்..கவிதா...எனக்கு என் கணவர்ட்டேந்து டிவோர்ஸ் வேணும்..ஆமா..என் கணவர்ட்டேர்ந்து

விவாகரத்து வேணும்..என்றாள் உறுதியாக.

கவிதா போல் பலபேரைப் பார்த்திருக்கும் அனுபவத்தால் வக்கீலின் முகத்தில் எந்த மாற்றமும்

ஏற்படவில்லை.

அவரும் தன்னைதேடி விவாகரத்துப் பெற்றுதர வேண்டி வரும் அனைவருக்கும் சொல்லும் கவுன்சிலிங்,மற்றும்அறிவுரைகளை கவிதாவுக்கும் சொல்லிப் பார்த்தார்.

இல்லை சார் மன்னிக்க வேண்டும்...எந்த கவுன்சிலிங்கும் எனெக்குத் தேவையில்லை..எனக்குத்

தேவை விவாகரத்துதான்...இனியும் அந்த ஆளோடு வாழ முடியாது..வாழவும் எனெக்குப் பிடிக்க

வில்லை..சோ..ப்ளீஸ்..எனெக்கு டிவோர்ஸ் வாங்கிக்கொடுங்க..என்றாள் மிக உறுதியோடு.

கவிதாவின் குரலில் தெரிந்த உறுதி கண்ட அட்வொகேட் கோதண்டம் அப்படியானா ஓகே மேடம்..

இந்த ஃபாரத்துல கையெழுத்துப் போடுங்க..என்று ஒரு ஃபாரத்தை அவளிடம் நீட்ட..

வெகு நிதானமாய்..நிம்மதியோடு தனது கையெழுத்தை அந்த ஃபாரத்தில் பதிவு செய்தாள் கவிதா.

அங்கே பூங்காற்று..புயலானது..

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.