(Reading time: 20 - 39 minutes)

காபியை ஹாலில் இருந்த மேஜைமேல் வைத்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்த போது மணி

7.40.எட்டு மணிக்கெல்லாம் னிறுவன கார் வந்து விடும்.டிரெஸ் மாற்றிக்கொள்ள அவசரமாக தன்

அறைக்குள் நுழைய இருந்தவளை..ஏய்..என்று ப்ரகாஷ் கூப்பிட்ட அழைப்பு சற்றே நிற்க வைத்தது.

என்ன என்பதுபோல் அவனைப் பார்த்தாள் கவிதா.கோவைப்பழம்போல் சிவந்து கிடந்த அவனின்

கண்களைப் பார்க்கவே அருவருப்பாய் இருந்தது.

இன்னிக்கு மகாராணி ஆஃபீஸ் முடிஞ்சி எத்தன மணிக்கு வருவீங்க..?ராத்திரி பதினொன்னாகுமா?

பண்ணெண்டாகுமா?ஆஃபீஸ் வேலதானா..?வேற எதாவது எங்கயாவது வேலயா?கேட்டா புது

ப்ராஜெக்ட் அதுனால வேல அதிகம்னு சாக்கு சொல்லுவியே..நாக்கில் நரம்பில்லாமலும்,

வார்த்தையில் வரம்பில்லாமலும் பேசும் கணவனை அப்படியே கொன்று விட வேண்டும் போல்

இருந்தது கவிதாவுக்கு.

எனக்குப் பணம் வேணும்....ப்ரகாஷ் கேட்கவும் திடுக்கிட்டுப் போனாள் கவிதா..

ரெண்டு நாளைக்கு முன்புதானே பத்தாயிரம் குடுத்தேன்..

நான் ஆம்பளடி..ஆம்பளைக்கு எதனையோ செலவு இருக்கும்..உனக்கு கணெக்கெல்லாம் சொல்லிட்

டிருக்க முடியாது..எனெக்கு பணம் வேணும்னா வேணும்..

நீங்க ஆம்பளையா..அப்டி சொல்லிக்க உங்களுக்கு வெக்கமா இல்ல?உத்யோகம் புருஷ லட்சணம்...

வேல பாத்து சம்பாதித்து பொண்டாடிய காப்பாத்தரவந்தான் ஆம்பள..இப்பிடி பொண்டாட்டி வேலக்கி

 போயி சம்பாத்திக்கிறத அதிகாரம் பண்ணி புடுங்கிகிறவன் ஆம்பளயா என்ன?ஆத்திரமாய்க் கேட்டாள் கவிதா.

ஏய் அடங்குடி..இல்லாட்டி..ஒங்கூட இருக்கமாட்டேன்..எங்கியாவது போய்டுவேன்..அப்பறம் கண்டவன் ஒன்ன சுத்துவான்..ஒத்தையா இருக்கியா..நான் போய்டட்டுமா?வீட்டத் தொறந்து போட்டு

ட்டுப் போய்டுவேன்..துளியும் பண்பாடின்றி பேசும் அவனை என்னசெய்வதென்று புரியாமல்

பார்த்தபடி நின்றாள் கவிதா.தனக்குப் பணம் தேவைப்படும் போதெல்லாம் ப்ரகாஷ் கவிதாவை

இப்படித்தான் உன்னை விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்று சொல்லிச் சொல்லிச் பயமுறுத்திப்

பணம் பறிப்பது வழக்கம்.இப்பவும் அதே அஸ்த்திரத்தைப் பயன்படுத்த பயந்து போனாள் கவிதா.

வாசலுக்கு வந்த கவிதா ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணும் போதுதான் அதில் பெட்ரோல் இல்லை

என்பது னினைவுக்கு வர பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.அங்குதான் அவளின் நிறுவன கார் வருவது வழக்கம்.

கவிதா படிக்கும் போதே மூன்றாம் வருடத்திலேயே கேம்பஸ் இன்டர்வியூவில் பிரபல பன்னாட்டு

 நிறுவனதில் வேலைக்கு செலெக்ட் ஆகிவிட்டாள்.வீடே சந்தோஷத்தில் மூழ்கியது.நான் காம்

வருடம் படிப்பு முடிந்ததும் சென்னை வந்து வேலையில் சேர்ந்தாயிற்று.ஹாஸ்டலில் தங்கி

வேலைக்குச் சென்று வந்தாள் கவிதா.மிகுந்த பயத்தோடுதான் அவளைத் தனியாக விட்டுச் சென்

றனர் அவளின் பெற்றோர்.

எல்லாம் நன்றாகத்தான் போயிற்று கவிதா ப்ரகாஷைப் பார்க்கும் வரை.

வீக் எண்ட் என்பதால் அன்று லீவு.பெரும்பாலும் சனிக்கிழமையில்தான் தனக்குத் தேவையான

வற்றை வாங்க தன்னுடன் வேலை பார்க்கும் சில தோழிகளுடன் குறிப்பிட்ட அந்த மாலுக்கு

கவிதா வருவது வழக்கம்.

அன்றும் அதுபோல் வந்திருந்தாள்.மால் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய

எத்தனிக்கையில் தோளில் மாட்டியிருந்த ஹேண்ட்பேக்கை அறுத்துக்கொண்டு ஒருவன் ஓட..

திருடன்..திருடன் என கத்தினாள் கவிதா.பேக்கில் ஏடியெம் கார்டும் கொஞ்சம் அதிக மாகவே பணமும், விலை உயர்ந்த செல்லும் இருந்தது.ஓடும் அவனை மடக்கிப்பிடித்து இழுத்துவந்தான்

ஒரு இளைஞன்.அறுத்துக்கொண்டு ஓடியவனையே அவளிடம் ஹேண்ட்பேக்கைக் கொடுக்க வைத்து மன்னிப்பும் கேட்க வைத்தான்.அவனை வியப்போடும் நன்றியோடும் பார்த்தாள் கவிதா.

தேங்க்யூ..மிஸ்டர்...

வெல்கம்....ஐ ஆம் ப்ரகாஷ்....ஒகே...பத்ரம் வரேன்....என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று

நடந்து சென்ற அவனை மறையும் வரை பார்த்தபடி நின்றிருந்தாள் கவிதா.

அடுத்தடுத்து இருவரும் பல இடங்களில் சந்தித்துப் பேசியதும் காதலை வளர்த்ததும் தனிக் கதை

ஆயிற்று.அவன் தேசிய வங்கியொன்றின் பெயரைச்சொல்லி அதில் முக்கிய பொறுப்பில்

இருப்பதாகச்சொல்ல மகிழ்ந்து போனாள் கவிதா.

தீபாவளி..ஊருக்கு வந்திருந்தாள் கவிதா.வீடே கலகலப்பானது.புதுப்புது டிரெஸ்ஸும்,பட்சணங்களு

மாக வீடு களை கட்டியிருந்தது.சென்னையிலிருந்து பஸ்ஸில் வரும்போது படிப்பதற்காக வாங்கிய

புத்தகமொன்றை தன் சூட்கேஸ் மீது வைத்திருந்தாள் கவிதா.அதைப் படிக்க வேண்டும் என்ற

ஆர்வத்தில் அதனை எடுத்துப் பிரித்தான் சித்தார்த்.தொப்பென்று அதிலிருந்து கீழே விழுந்தது

ப்ரகாஷின் போட்டோ.அதில் ப்ரிய கவிதாவுக்குப் ப்ரியமுடன் ப்ரகாஷ்.. என்ற கையெழுத்து....

அதிர்ந்து போனான் சித்தார்த்.

வீடு அமளிதுமளிப் பட்டது.இடிந்து போனார்கள் பெற்றவர்கள்.விக்கி வெடித்து அழ ஆரம்பித்தத்

தாயை சித்தார்த்தால் சமாதானம் செய்ய முடியவில்லை.நிலைகுத்திப்போய் நின்றிருந்த அப்பாவையும் அவனால் தேற்ற முடியவில்லை.ஆவேசம் வந்தவர்போல் கத்த ஆரம்பித்தார்

கவிதாவின் அப்பா.

கவிதா..வேண்டாம்..காதல் கீதல்ன்னு எதுலயும் போய் விழுந்துடாதே..நாங்க மானம் மரியாதை

யோடு வாழ்ந்தின்டிருக்கோம்...எங்கள அசிங்கப் படுத்திடாத..பெத்தவங்களுக்குத் துரோகம்

பண்ணிடாத...என்று கத்த ஆரம்பித்தவர் ஒரு கட்டத்தில் கவிதாவைக் கெஞ்சி அழ ஆரம்பித்தார்...

கவிதா நீ எம் பொண்ணில்ல..வேண்டாங்கண்ணு....எவனையாவது கல்யாணம் பண்ணிண்டு வந்து

எங்கள அசிங்கப்படுத்திடாதே..அப்பிடி நீ எதையாவது செஞ்சீன்னா நாங்க மூணு பேரும் தூக்கு

போட்டுண்டுடுவோம்..நாங்க சாகரதுல ஒனக்கு ஆசையா...சொல்லு சொல்லு அப்பா பேச்ச நீ

கேப்பீல்ல....என்று பெண்ணிடம் அவர் அழுவதைப்பார்த்து ஜானகி அடி வயிற்றிலிருந்து வெடித்து வந்த அழுகையை அடக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.

அப்பா அப்பிடில்லாம் ஒண்ணுமில்லப்பா..சும்மா அவர் என்னோட ஃப்ரண்டுதான்பா..நீங்க பயப்படற

மாதிரி நான் எதுவும் செய்திட மாட்டேன்பா..என்று ஒரு பொய்யான உறுதியைக் கொடுத்துவிட்டு

சென்னை திரும்பிய கவிதா நடந்தவற்றை ப்ரகாஷிடம் கூற..ப்ரகாஷ் தன் நாடகத்தை அரங்கேற்ற

ஆரம்பித்தான்.

கவி..நீ என்ன சொல்ர..அப்ப நம்ம காதல்..அது பொய்யாயிடுமா... கவி நீ மட்டும் இல்லேன்னா

எனக்கு வாழ்க்கையே இல்ல..நா உயிரோடவே இருக்க மாட்டேன்..அப்படியே இந்த கடல்ல

விழுந்து செத்துடரேன் கவி..நீ இல்லாம ஒரு வாழ்க்கையை என்னால நெனெச்சுகூட பாக்க முடியாது.உலகத்து மொத்த சோகத்தையும் முகத்தில் கொண்டு வந்து ஆஸ்கார் விருது வாங்கும் அளவு நடித்தான் ப்ரகாஷ்.அவன் க்ண்களில் வெள்ளமென கண்ணீர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.