(Reading time: 20 - 39 minutes)

வித்துப்போனாள் கவிதா.பெற்று பாசத்தைக்கொட்டி வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கி பிள்ளைகளைத் தம் உயிரின் உயிராய் நினைக்கும் பெற்றோரின் கண்ணீரை  விட சிறிது நாட்களே

பழகிய காதலன் என்று சொல்லிக்கொள்பவனின் கண்ணீருக்கு ஆற்றல் அதிகம் போலும்.

நீ இன்றி நான் இல்லை என வசனம் பேசும் அவனை உண்மையானவன் என நம்பி தவித்துப்

போனாள் கவிதா.அந்த நேரத்தில் அவளின் நெஞ்சம் பெற்றோரை மறந்தது அவர்களின் பாசத்தை

மறந்தது..அக்கா..அக்கா என்று சுற்றிச் சுற்றி வந்த அன்புத் தம்பியை மறந்தது....காதலன் ப்ரகாஷின்

கண்ணீரே அவளை அலைக்கழித்தது.

ரெஜிஸ்டர் ஆஃபீஸில் திருமணத்தை முடித்துக்கொண்டனர் ப்ரகாஷும் கவிதாவும்.என்னதான்

இருந்தாலும் பெற்றோரின் னினைப்பு கவிதாவுக்கு வராமல் இல்லை.அவர்களுக்குத் தெரிந்தால்

என்னவாகுமோ என்ற பயமும்,அவர்களுக்குத்தெரியாமல் இப்படிப்பட்ட முடிவை எடுத்தோமே

என்ற வேதனையும் அவளை வாட்டியது.

மணமான இரெண்டு நாட்கள் தாய் தந்தைக்கு தெரிவிக்காமல் இருந்த கவிதா மூன்றாம் நாள்

துணிவை வரவழைத்துக் கொண்டு அப்பாவிடம் போனில் சொல்ல..அப்பா கதறிய கதறல்..

ஆயுசுக்கும் மறக்க முடியாது.

பாவி..நீ நன்னாவே இருக்க மாட்டடி..நீ நாசமா போயிடுவ..உன்ன நான் செத்துட்டதா நெனச்சு

தல முழுகப்பொறேண்டி..இனி நீ எம் மொகத்துலயே முழிகப்படாது..நான் செத்தாலும் வரக்கூடாது

ஐயோ..ஐயோ..நான் என்ன பண்ணுவேன்....என்று கதறி அழுவது கேட்டது.

ப்ரகாஷ்தான் அவளைத் தேற்றினான்.தான் ஒரு மாதம் லீவு போட்டிருப்பதாகவும் தேனிலவுக்கு

குளிர் பிரதேசம் எதற்காவது செல்லலாமென்றும் சொல்லி கவிதாவையும் ஒரு மாதம் லீவுபோட

வைத்தான்.

கவி..அன்போடு அழைக்கும் கணவன் ப்ரகாஷைப் பார்த்தாள் கவிதா.

கவிக் கண்ணு..நாம தேனிலவு போனா செலவு கொஞ்சம் கூடுதலாதானே  ஆகும்..நீ என்ன செய்யிற

ஒன்னோட அக்கவுண்ட்லேந்து பணம் எதுத்து வா..திரும்பி வந்ததும் என் அக்கவுண்ட்லேந்து

பணத்த ஒன்னுதுக்கு மாத்திடறேன்..தப்பா நினைக்காதே..ஒகேவா?என்றான்.

பாவம் கவிதா அவனுக்கென்று ஓர் உத்தியோகமோ,வருமானமோ,பேங்க் அக்கவுண்ட்டோ கிடையாது என்பதே தெரியாமல் இருந்தாள்.என்ன ப்ரகாஷ் நீங்க செலவு பண்ணா என்ன நான் பண்ணா என்ன ஏன் இப்பிடி பிரிச்சு பாக்குறீங்க..என்றாள் அப்பாவியாக.

ஒரு மாதமும் கொஞ்சலும்,கொண்டாட்டமுமாக ஓடிவிட்டது.லீவு முடிந்து விட்டதால்.   நாளை

முதல் பணிக்குத்திரும்பவேண்டும்.

ப்ரகாஷ்..நாளேலேந்து வேலைக்கு போகணும்..நீங்களும்தானே...கேட்டாள் கவிதா.

இல்ல கவி நான் லீவ எக்ஸ்டென் பண்ணிருக்கேன் இன்னும் ஒரு வாரம்..

சொல்லவேயில்ல....

சிரித்து மழுப்பினான் ப்ரகாஷ்....

ஒரு வாரமும் ஓடிப்போயிற்று..அவன் வேலைக்குக் கிளம்புவதாகத் தெரியவில்லை கவிதாவுக்கு..

என்ன ப்ரகாஷ்....பேங்க்குக்கு போகல..லீவும் சொல்லல..என்னாச்சு ஒங்களுக்கு....

இல்ல கவி இன்னும் பத்து நாள் லீவு சொல்லிருக்கேன்...

எதுக்கு தேவ இல்லாம லீவல்லாம்....

சும்மா தொணதொணங்காத..போகருதும் போகாததும் என் இஷ்ட்டம்..முதல் முறையாக சள்லென்று

விழுந்தான் ப்ரகாஷ்...அரண்டு போனாள் கவிதா.

பத்து நாட்கள் ஆகியும் அவன் வேலைக்குச்செல்லாமல் இருப்பதும் அடிக்கடி அவளிடம் பணம்

கேட்பதும் கவிதாவுக்கு சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அன்று பொறுமை இழந்த கவிதா நேருக்கு நேராகவே மனதில் பட்ட சதேகத்தைக் கேட்கவே கொஞ்சமும் பதற்றமோ,பயமோ இன்றி பதில் சொன்னான் ப்ரகாஷ்.

ஆமாண்டி...நான் எங்கும் எதிலும் வேல பாக்கல..ஏன்னா நான் பத்தாவதுக்கு மேல படிக்கில..என்று

சொன்னபோது தலையில் இடி இறங்கியது போல் இருந்தது கவிதாவுக்கு.

உண்மை வெளியில் தெரியும் வரைதான் தயக்கமும் பயமும்.தான் வேலை எதுவும் பார்க்கவில்லை

என்பதும் பத்துகாசுக்குப் பிரயோஜம் இல்லாதவன் என்பதும் கவிதாவுக்குத் தெரிந்து விட்டதை

அறிந்தபிறகு தன் சுய ரூபத்தைக் காட்ட ஆரம்பித்தான் ப்ரகாஷ்.கவிதா வேலைக்குக் கிளம்பிச்

சென்றபிறகு வெளியில் சென்று குடிக்க ஆரம்பித்தவன் இப்போது வீட்டிலேயே குடிக்க ஆரம்பித்தான்.அதிகாரத்தோடு மிரட்டிப் பணம்கேட்க ஆரம்பித்தான்.ப்ரகாஷால் நன்றாக ஏமாற்றப்

பட்டது அறிந்த கவிதா அழாத நாளே இல்லை என ஆயிற்று.மோகம் முப்பது நாள் ஆசை அறுபது

நாள் என்பது போல முப்பது நாட்களிலேயே தன் வாழ்க்கை சிதைந்து போனதை என்ணிஎண்ணி

அழுத போது தான் பெற்றோருக்குச் செய்த துரோகம் அவளை வருத்தியது.

அன்று பணியில் ஈடு பட்டிருந்த கவிதாவுக்கு தலையை வலிப்பதுபோல் இருக்கவே ஒன்னவர்

பெர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தாள்.

வாசல் கதவு திறந்தே கிடப்பதைப் பார்த்து வியப்போடு உள்ளே நுழைந்தவள் கண்ணில் பட்டக்

காட்சியைப் பார்த்து தூகிவாரிப் போட அப்படியே நின்றாள்.ஹால் முழுதும் சிகெரெட் துண்டுகள்

டாஸ்மாக் சரக்கை அப்படியே வாயில் சாய்த்தபடி ப்ரகாஷ்..பொறுக்கவில்லை கவிதாவுக்கு.

சே...என்ன அசிங்கமிது..இது..வீடா..இல்ல வேற எதாவது இடமா...நீயெல்லாம் ஒரு மனுஷனா..?

த்தூ..என்று காறித்துப்பினாள் கவிதா..

ழேய்..என்னடி நீ பெரிய இவளோ..நான் அப்பிடித்தாண்டி குடிப்பேன் நீயா..எனக்கு காசு குடுக்கர..

காலேல கேட்டேனே குடுத்தயா..நீ குடுக்காட்ட எனக்கு பணம் கிடைக்காதா..வெளீல போனேன்னா

எவ கழுத்துச் செயினயாவது அறுத்தேன்னா லட்சலட்சமா பணம் கிடைக்கும்டிபோடி..இவளே..ஒரு

 தடவ  பஸ்ஸுக்குள்ளே ஏறி எறங்கினா கனமான பர்ஸ்ஸோட தாண்டி கீழ எறங்குவேன்..

அன்னிக்கு ஒரு நாள் நீ மாலுக்கு வந்தப்ப ஒங்கிட்டேந்து ஒன்னோட ஹேண்ட்பேக்க ஒருத்தன்

அறுத்துக்கிட்டு ஓடினானே அவ யாருன்னு னெனைக்கிற அவன் எம் ஃபிரண்டு தாண்டி.ஒன்ன மடக்க

நான் செஞ்ச ஏற்பாடுதாண்டி அது...செட்டப்பு..செட்டப்பு எல்லாம் ஒரு செட்டப்பு..ஒன்ன மடக்கிட்டேன்ல...முட்ட முட்டத் தண்ணி அடித்திருந்ததால் அவன் செய்த பித்தலாட்டம் அனைத்தயும் ஒன்றுவிடாமல் சொல்லித் தீர்த்தான் அந்த குடிகாரக் கணவன்.உலகமே தட்டாமாலை

சுற்றுவது போல் இருந்தது கவிதாவுக்கு.பூமி பிளந்து தன்னை அப்படியே விழுங்கிவிடாதா என்று

தோன்றியது.அப்பாவின் அழுகையும் சாபமும் மனதில் தோன்றி மறைந்தது.

இவ்வளவு மட்டமான ஒருவனிடம் எப்படி ஏமாந்தோம்..நம் அறிவும் படிப்பும் எப்படி நமக்கு உதவாமல் போயிற்று...ஒரு குடிகாரனிடம்,ஒரு திருடனிடம்,ஒரு ஏமாற்றுக்காரனிடம் எப்படி

ஏமாந்தோம்...தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய அவனை கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போகலாமா

என்று தோன்றியது கவிதாவுக்கு.இன்னிகழ்வுக்குப் பிறகு அவனிடம் பேசுவதையே தவிர்த்துவிட்டா

ள் கவிதா.

கவிதாவிற்கு அனைத்தும் தெரிந்து போனது தெரிந்ததும் தெனாவெட்டாகிப் போனான் ப்ரகாஷ்.

எப்படியும் கவிதா தன்னை விட்டு எங்கும் போகமாட்டாள்..அவளுக்குப் போக்கிடமும் இல்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.