(Reading time: 26 - 51 minutes)

பூந்தோட்டத்தில் காதல் கண்ணம்மா... - அன்னா ஸ்வீட்டி

ன்னவெல்லாமோ சொல்லி செய்து அம்மாவை சம்மதிக்க வைத்து இந்த விடுமுறைக்கு அல்லிகுளம் வந்துவிட்டாள் மஹிமா. அது அவளது தந்தையின் பூர்வீகம். அப்பாவின் தாயார் அப்பாவிற்கு 5 வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார், இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அப்பாவின் தந்தை தன் முதல் மனைவியின் மகனை பள்ளி ஹாஸ்டல்களிலேயே வைத்து வளர்த்திருந்தார். பள்ளி விடுமுறையிலும் அப்பா செல்லுமிடம் அவரது தாய் வழி பாட்டி வீட்டிற்குதானாம்.

ஆக அப்பாவிற்கு மனதில் தன் தகப்பனாரின் மீது ஒரு வெளிப்படுத்த விரும்பாத கோபம் உண்டு. அதனால் சொந்த ஊருக்கு மிக அத்தியாவசிய தேவை என்றாலொழிய செல்வதே இல்லை. அதனால் வெறும் 100கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூத்துக்குடியில் வசித்தாலும் மஹிமாவிற்கு அல்லிகுளம் விஜயம் அபூர்வத்திலும் அபூர்வம்.

Poonthottathil kathal kannammaஅப்பா அப்படி விலக்கினாலும் அவரது தம்பிகள் அதாவது தாத்தாவின் இரண்டாம் மனைவியின் மகன்களுக்கு அப்பா ஒரு ஹீரோ. இவள் அவர்கள் வம்ச இளவரசி. தரையில் கால்படாமல் தாங்குவார்கள். அதனால் அவர்கள் மீது மஹிமாவிற்கு எப்போதும் அதிக ஈடுபாடு.

அதிலும் கடைகுட்டி சித்தப்பா அமுதன் இவளை விட நாலு வயதே மூத்தவர். மனதளவில் அவர் இவளுக்கு அண்ணனே. அதனால் கல்லூரி விடுமுறையில் அவர்  அல்லிகுளம் வரும் நாட்களில் இவளுக்கும் அங்கு சென்று லூட்டி அடிக்க ஆசை.

இப்பொழுதுதான் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது. ஊரில் பெரியவீடு என்று இவர்கள் குடும்பத்திற்கு பெயர். காரணம் இவர்கள் ஜமீன் வம்சமாம்.

இன்று அதெல்லாம் பழக்கத்தில் இல்லை என்றாயினும் ஊரின் முக்கிய சொத்துக்கள் அனைத்தும் இவர்களுடையது என்பதாலும், பெரும்பாலான அல்லிகுளவாசிகள் அதில் எதாவது ஒன்றில் வேலை செய்பவர்கள்  என்பதாலும் இவர்கள் குடும்பத்திற்கு இப்படி ஒரு பெயர்.

இன்றும் ஊரில் ஏதோ திருமணம். தாத்தா கண்டிப்பாக செல்ல வேண்டும். அப்பாவை பொறுத்தவரை அவரது சின்னம்மா எப்படியோ, இவளை அவரும் கொண்டாடுவார்தான். பெண்பிள்ளை இல்லாத அவருக்கு இவள் பிரியம். இவளும் அப்பாமா என்றுதான் அவரை அழைப்பாள்.

ஆக இன்று அந்த கல்யாணத்திற்கு தாத்தா, அப்பாமா, சித்தப்பா அமுதன் புடை சூழ மஹிமா ஆஜர்.

முதல் வரிசையில், அப்பாமாவிற்கும் சித்தப்பாவிற்கும் நடுவில் அமர்ந்து கொண்ட மஹிமாவிற்கு ஏதோ குறுகுறுப்பு தோன்ற அன்னிச்சையாய் அத்திசை நோக்கினாள். அவன்.

யாரோ என்று எளிதாய் அலட்சிய படுத்த முடியாத அளவிற்கு இருந்தது அவன் வசீகரம். அவளை வருடும் அவன் பார்வை மனதிற்குள் பூபாளம்.

சட்டென திரும்பிக்கொண்டாள்.

இவளுக்கு என்னவாயிற்று....? வழக்கமாக இப்படி யாராவது உறுத்துப்பார்த்தால் எரிச்சல் பொங்கும் இவளுள். இதுவென்ன புதுசாய்...பூபாளம்...சங்கீதம்....??

இது நல்லதிற்கு இல்லையே....

அவன் உடை நேர்த்தி, இவளை நேராக பார்க்கும் அவன் பார்வை,  நிச்சயம் அவன் அல்லிகுளத்தை சார்ந்தவன் இல்லை என்றது.

அதன்பின் அவன் இருந்த புறமே மஹிமா திரும்பவில்லை.

ன்று மாலை இவள் விருப்பத்திற்கு இணங்க அமுதன் சித்தப்பா இவளை ஆற்றங்கரைக்கு அழைத்துப்போனார். மிக அருகில் தான் அவ்விடம் என்பதால் நடந்து தான் சென்றனர். சென்று திரும்பும் நேரம் அல்லிகுளம் பேருந்து நிறுத்தத்தின் அருகிலிருந்த அந்த ஊர் கிணற்றை சுற்றி படு கூட்டம். என்னவாயிற்று?

சென்று பார்த்தால் ஒரு பெண் ‘ஓ’ வென கதறிக்கொண்டிருக்க பலரும் பலதும் சொல்லிக்கொண்டிருந்தனர். விஷயம் இதுதான். ஊரில் நடந்த திருமணத்திற்கு வந்த பெண்களில் ஒரு பெண், பேருந்திற்காக காத்திருந்த வேளையில் எதேச்சையாக கிணற்றை எட்டிப்பார்க்க அந்நேரம் பார்த்து அவளது கழுத்தாரம் கழன்று கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

போட்டிருக்க நகையே போதாது என சொல்லும் மாமியார், உள்ளதும் தொலைந்துவிட்டது என்று சொன்னால் தொலைத்துவிடுவார் என அழுது புரண்டு கொண்டிருந்தாள் அந்த ஒல்லிப்பெண்.

பார்க்க மஹிமாவிற்குமே பரிதாபமாக இருந்தது. ஆனால் ஊரின் அனைத்து கிணறைவிட இது படு ஆழம் என இவளுக்கும் தெரியும். பின் என்ன செய்ய முடியும்??

அதே நேரம் அந்த அவன் அங்கு வந்தான். நீள ஷாட்ஸும், டீ சர்டுமாக வந்தவன், விஷயம் அறிந்தவுடன் தன் டீ ஷர்டை கழற்றி அருகிலிருந்த தன் நண்பணிடம் கொடுத்தவன் பலரின் எதிர்மறையான அறிவுரையையும் மீறி கிணற்றுக்குள் தொங்கிக் கொண்டிருந்த ஏற்றத்தின் கயிறை பிடித்து உள்ளே இறங்கினான்.

கிணற்றை சுற்றி மனித கூட்டம்...கிணற்றின் உள்ளே வெளிச்சமே இல்லை. நீர் அளம்பும் சத்தம் மட்டுமே கேட்டது. 2 மணி நேரத்திற்கு பின் அந்த ஆறு பவுன் ஆரத்துடன் வெளியே வந்தான் அவன்.

நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் கண்கள் சிவந்திருந்ததை தவிர எந்த சோர்வும் அவனிடம் இல்லை.

ஆற்றிற்கு செல்லவென எடுத்து வந்திருந்த தன் டவலை அவனிடம் நீட்டினாள் மஹிமா. வாங்கி துடைத்துக்கொண்டவன், டவலை திரும்பி கொடுக்கும் போது மட்டும் இவள் கண்களை தன் பார்வையால் ஒரு நொடி ஊடுருவினான். அது காந்த புலம். களம் இவள் மனம்.

நோ.... அறிவு அலராமிட முகத்தில் அலட்சிய பாவம் கொணர்ந்தாள்.

அவன், தன் டீ சர்டை அணிந்து கொண்டு அவ்விடத்தைவிட்டு அகன்றான்.

ன்று இரவு படுக்கையில் விழும்போது மனமெங்கும் அவன் ஞாபகம். அந்த வசீகர பார்வை. உதவும் குணம். அலட்டலில்லா பழகு முறை. மன கண்னில் பல முறை ஊர்வலம்.

அவன் இவளைப்போல இங்கு யார் வீட்டிற்கோ வந்திருக்கிறான். அல்லிகுளகாரர்கள் அனைவரும் உறவினர்கள். அந்த வகையில் அவர்களின் உறவினன் இவளுக்கும் உறவினனாகத்தான் இருப்பான். அவன் இவளுக்கு உறவினன். மனம் ஜிவ்வென்றது.

அடங்கு மனமே....அப்பாவை நினை.

டுத்து சில நாட்கள் இவள் நினைவுகளில் மட்டும் அவன் நடை பயின்றான். கண்களுக்கு காட்சி தரவில்லை.

தன் ஊருக்கு திரும்பி போயிருப்பானாய் இருக்கும். சிறு ஏமாற்றமும், பெரு நிம்மதியும் அவளுள்.

 அன்று மாலை இவளும் அமுதன் சித்தப்பாவும் இவர்களது தென்னந்தோப்பிற்கு வாக்கிங் சென்றனர்.

சில நூறு ஏக்கர் பரப்பளவில் இருந்த தோப்பின் நடுவில் ஒரு சிறு குன்று உண்டு. குன்று என்பதைவிட மாபெரும் பாறை என்று சொல்லலாம். அதன் மீது தனக்கு பிடித்த அத்தனை விஷயங்களையும் கொண்டு சென்றிருக்கும் சாக்பீஃஸால் எழுதி வைத்துவிட்டு வருவாள் மஹிமா. அது அவள் வழக்கம்.

அன்றும் அதைத்தான் ஓடி ஓடி செய்து கொண்டிருந்தாள். அந்த அவனை குறித்து எழுத வேண்டும் என்று மனம் அலை பாய்ந்தாலும் பெயர் தெரியாதவனை பற்றி என்ன எழுத? அதோடு சித்தப்பா என்ன சொல்வார்?

“ஏய்.....அமுதா.....என்னடா இத்தன மணிக்கு இந்த பக்கம்....?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.