(Reading time: 26 - 51 minutes)

வாரி எடுத்தான் அவளை

“ஹேய் ...என்ன செய்றீங்க....எல்லாம் பேக் செய்யனு.....”

“அவ்ளவும் பேக் பண்னி அங்க எதுக்கு போகுதாம்.....? டைம் வேஸ்ட்......!!”

அந்த ஃப்ளைட்டில் அன்று அவர்கள் போர்ட் ஆகவில்லை.

“போ....கே எம்... அவ்ளவு ப்ளானும் சொதப்பிட்டு....ஃப்ளைட் இன்நேரம் துபாய க்ராஸ் செய்திருக்கும்.....”

“அதுக்கென்ன நாளைக்கும் அந்த ஃப்ளைட் பாரீஸ் போகும்....அதை நாளைக்கும் நாம மிஃஸ் செய்வோம்...”

“போடா...புத்திசாலி..”

“அது...”

“ஆமா மேடம் எப்படி திடீர்னு இது காதல்னு டிசைட் செய்துட்டீங்க... கண்டுபிடித்த விதத்தை சொன்னீங்கன்னா ஹேய் என் பொண்டாட்டி புத்திசாலின்னு நாங்களும் சொல்லிப்போம்ல.....”

“லவ் இஸ் பேஷண்ட்னு பைபிள்ல சொல்லி இருக்குது இல்லையா அது ஞாபகம் வந்தது. அப்ப இருந்து நீங்க என்னை விரும்பி இருந்தாலும் இல்லைனாலும் இப்பவரை எவ்வளவு  பொறுமையா இருந்திருக்கீங்க......உங்க முடிவு எதுவும் உணர்ச்சி வேகத்துல எடுத்தது இல்லையே....”

“குட் பாய்ண்ட்..ஹப்பி டு நோ...”

“அடுத்து நான் கிடைக்கலைனாலும்னு நீங்க சொன்னப்ப எனக்கு கஷ்டமா இருந்துது...ஐ ரியலைஸ்ட் வாட் யூ மீன் டு மீ...”

“வாட் ஐ மீன் டு யூ?..”

“ம்...ஹஸ்பண்ட்....வைல்டஸ்ட் இமஜினேஷன்ல கூட உங்கள என்னால விட்டு குடுக்க முடியாது...”

“மீ டு கண்ணம்மா..” அணைத்துக்கொண்டான் கணவன்.

“ம்...அப்ப அந்த கேகேல ஒரு கே கண்ணம்மாவா....?”

“காதல் கண்ணம்மா தான் கே கே... அதென்ன கே எம்?”

“காட்டுமிராண்டி...”

“அடி புண்யவதியே....”

“ஹி...ஹி..”

“ஆனா ஒன்னு மட்டும்தான் எனக்கு புரியவே இல்லடி....நாலுவருஷமா லவ் பண்றேன்...உனக்காக பணக்காரன் ஆனேன்னு ஒருத்தன் சொன்னா அத்தன பொண்ணுங்களும் அப்படியே உருகி போய்டுவாங்க.... நீ மட்டும் ஏன்டி... காதலிச்சியா... அப்பனா நீ ஹஸ்பண்டா இருக்க லாயக்கு இல்லனுட்டு...”

“ஹலோ...நாங்க காதலிச்சவன் வேண்டாம்னு சொல்லலை....வெறும் உணர்ச்சி வேகத்தை காதலே இல்லைனுதான் சொல்றேன்...”

ன்று தன் டைரியில் எழுதி வைத்தாள் மஹிமா.

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம். பூந்தோட்டத்துக்குள் போகும்போது பூவை மட்டுமே நாம் சந்திப்பது இல்லை....வழியில் கல், முள், பாம்பு, பலவகை பூச்சி எல்லாம் இருக்கும்.... அதையெல்லாம் கவனமாக பார்த்து விலகி நடந்தால்தான் பூச்செடியிடம் போகமுடியும்... செடியிலும் முள்ளும், வண்டும், ஏன் பாம்பு கூட இருக்கலாம். ஆனால் கவனமாக பறித்தால் பூ நமக்கு கிடைக்கும்....உண்மையில் பூவை விட பூந்தோட்டத்தில் மற்றவை தான் அதிகம். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், அங்கு பூக்களும் இருக்கத்தான் செய்கிறது.

உலகில் இன்னும் நன்மை மிச்சமிருக்கிறது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.