(Reading time: 23 - 45 minutes)

உனைத்தேடி வருவேனடி... - தங்கமணி சுவாமினாதன்

திர் டூவீலர் ஒர்க் ஷாப் என்ற பெயர்ப் பலகை தொங்கும் அந்த சின்னக் கடை  இரு சக்கர வாகனங்களை ஒக்கப்பண்ணும் ஒரு கடை எப்படி இருக்குமோ அந்த சூழலில் இருந்தது.குனிந்து

வெகு மும்முரமாய் ஸ்க்ரூ ஒன்றை முடுக்கிக் கொண்டிருந்தான் கதிர். இருபத்தைந்து வயது..

வாட்ட சாட்டமாக கிட்டத்தட்ட விஷாலைப் போல சாயல்.அவன் மனம் முழுதும் அம்சாவே

Unai thedi varuvenadiஆக்ரமித்து இருந்தாள்.ஐயோ..எத்தனை அழகு...கொள்ளை அழகில்ல..அவன் மனம் அவனிடமே கேட்டது.

 முந்தா நாளு  பொண்ணு பாக்கப் போனப்போ..அந்த பொண்ணு அதான் அம்சா காபி எடுத்துக்கிட்டு

வெளிய வந்தப்ப பாத்ததுமே அவ மொகம் பச்ச்சுன்னு மனசுல ஒட்டிக்கிச்சு..வெச்ச கண்ணு வாங்...கா...ம....

பொண்ணையே பாத்தப்ப பக்கத்துல ஒக்காந்திருந்த மீனு அக்கா தொடேல வெடுக்குன்னு கிள்ளி

காது கிட்ட.. லேய்..லூசுப் பயலே காணாதத கண்டாப்புல அப்பிடி பொண்ண வெறிச்சுப் பாக்காதடான்னு சொல்லவும் சட்டென சுதாகரித்துக்கொண்டு பார்வையை நகர்த்தியதும் நினைவுக்கு

 வர சட்டென சிரிப்பு வந்தது கதிருக்கு..அப்போதே முடிவு செய்து விட்டான் இவள்தான் தனக்கு மனைவியாக வர வேண்டுமென்று,அம்மாவின் முகத்தைப் பார்த்தபோது அம்மாவின் முகத்திலும்

திருப்தி தெரிந்தது.அப்பாடி என்றிருந்தது கதிருக்கு.தங்களுக்குப் பெண்ணைப் பிடித்திருப்பதாகச் சொல்லியாயிற்று.

பொண்ணுக்கு நம்மள புடிச்சிருக்கணுமே என்ற கவலை கொஞ்சம் எட்டிப்பார்த்தது.நல்ல வேளையாக வயதில் கொஞ்சம் மூத்தவராக இருந்த பெண் ஒருவர் வாயெல்லாம் பல்லாக பெண்

இருந்த உள்ளிருந்து வெளியே வந்து பெண்ணுக்கும் முழு சம்மதம் என்று சொல்ல சந்தோஷத்தில்

மூச்சு முட்டியது கதிருக்கு.

முகூர்த்த ஓலை எழுத நாள் பாத்துச் சொல்வதாக சொல்லிவிட்டு வந்தாயிற்று.அம்சாவைப் பார்த்து விட்டு

 வந்தது முதலே மந்திருச்சுவிட்ட கோழி போல்தான் இருந்தான் கதிர்.மனம் ஒரு நிலையில் இல்லை.அடிக்கடி கண்ணாடி முன் நிற்பதும் சீப்பெடுத்து படியப் படிய வாரியிருந்த தலையை

கலைத்துவிட்டுமீண்டும் வாரிக்கொள்வதும் மீசையை அடிக்கடி சீப்பின் நுனியால் சரி செய்து கொள்வதுமாய் இருந்தான்.அவனையும் அவன் நடவடிக்கைகளையும் மவுனமாய்ப் பார்த்து ரசித்துக்

கொண்டிருந்தார்கள் கதிரின் அம்மாவும் அக்கா மீனுவும்.

ஐயிரப்பார்த்து முகூர்த்த ஓல எழுத நாள் பாத்த்துகிட்டு வரோம்.பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு

வெவரம் தெரிவிக்க வேண்டாமா?நானும் மீனுவும் போய்ட்டு வரோம்.நீ கடைக்குக் கெளம்புரையா..

கேட்ட அம்மாவை சந்தோஷமாய்ப் பார்த்தான் கதிர்.சரிம்மா..சரிம்மா..அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு..ஏனிப்படி அவசர அவசரமா பரக்காவெட்டித்தனமா சொன்னோம்...அம்மா என்ன

நெனெச்சுப்பாங்க..என்று வெட்கமாய் இருந்தது கதிருக்கு.

அண்ணே..கதிர் அண்ணே...ஒர்க் ஷாப்பில் வேலைசெய்யும் குணா கூப்பிட காதில் வாங்காமல் தாம்

பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தான் கதிர்.கைகள்தான் வேலை பார்த்ததே தவிற மனம்

அம்சாவையே சுறிச்சுற்றி வந்ததால் குணா கூப்பிட்டது கூட தெரியாமல் இருந்தான் கதிர்.

அண்ணே...மீண்டும் கூப்பிட்டான் குணா.ம்ஹூம்..திரும்பவே இல்லை கதிர்.

செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு கதிரின் அருகில் வந்த குணாவுக்கு கதிர்

செய்து கொண்டிருந்த வேலையைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது.

அண்ணே என்ன செய்யிரீங்கண்ணே...பாருங்கண்ணே...சப்த்தமாய்க் கேட்டான் குணா.

சட்டென நினைவுகளிலிருந்து மீண்ட கதிர் தான் ஸ்க்ரூ முடுக்குவதை விட்டுவிட்டு புத்தம்புதிய

டூவீலரின் ஒரு பகுதியில் பெயின்டை சுரண்டியிருப்பதைப் பார்த்தான்.அம்சாவின் நினைப்பு தன்னை

எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்று தோன்றவே..குணாவைப் பார்த்து அசடு வழிந்தான்.

என்னாச்சுண்ணே ஒங்களுக்கு...ரெண்டு நாளாவே ஒரு மாதிரியா இருக்கீங்க..ஒண்ணும் சொல்லவும்

மாட்ரீங்க..நா ரெண்டு நாளா லீவு... வேலெக்கி வல்ல..அப்போ இங்க என்னதான் நடந்துச்சி..

சொல்லுங்கண்னே சொல்லுங்க..ஏனிப்பிடி ஒரு மாதிரி இருக்கீங்க..இன்னிக்கின்னு பாத்து வேணு

பயலும் லீவு..இல்லாட்டி அவங்கிட்டயாவது கேட்டு தெரிஞ்சிப்பேன்..

வெட்கப்பட்டு னெளிந்தான் கதிர்..போடா..ஒண்ணுமில்ல...

ஒண்ணுமில்லாத்துக்கா இப்பிடி நெளியிரீங்க..?ஏதோயிருக்கு இல்லாட்டி இப்பிடி ஒண்ணு கெடக்க

ஒண்ணு.வேல செய்ய மாட்டீங்க..சொல்லுங்கண்ணே...

லேய்..குணா...முந்தா நாளு பொண்ணு பாக்கப் போயிருந்தேன்....

அடி சக்க..சொல்லவே.... இல்ல...

அது வந்து..பாத்துட்டு வந்து சொல்லலாம்னு..

அட போனாப்போவுதண்ணே..பொண்ணு எப்பிடிண்ணே...அத சொல்லுங்க மொத்தல்ல..

ஏய்..பொண்ணு ரொம்ப சூப்பரு டா...பேரு அம்சா...

அப்ப நிச்சயம் பண்ணிட வேண்டிது தானே..?

ஆமா..அம்மாவும் அக்காவும் ஐயிரு வீட்டுக்கு நாளு பாக்க போயிருக்காங்க..அனேகமா தேதி

குறிச்சிருப்பாங்க.இப்ப எனெக்கு போன் பண்ணுவாங்க பாரு...மிகுந்த எதிபார்ப்போடும்,சதோஷத்தோ

டும் சொன்னான் கதிர்.

ம்ஹூம்....மதியம் ஒரு மணி வரை அம்மாவோ,அக்காவோ போன் செய்யவில்லை.மிகவும்

கவலையாய் இருந்தது கதிருக்கு.

நேரம் இரெண்டு மணியைத்தொட்டபோது அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடிய வில்லை கதிரால்

குணாவுக்கு கதிரைப் பார்க்கப் பாவமாய் இருந்தது..அண்ணே கவலப் படாதீங்கண்ணே..போன எடத்துல கூட்டமா இருந்திருக்கும்..அதான் நேரமாவுது..நீங்கன்னா ஒரு எட்டு வீட்டுக்குப்போயிப்

பாத்துட்டு சாப்டுட்டுன்னா வந்திடுங்கண்ணே..

கதிரும் அந்த எண்ணத்தில்தான் இருந்ததால் உடனே டூ வீலரை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான்.

வீட்டு வாசலுக்கு வந்தபோது வீடு திறந்தே இருப்பது தெரிய அவசரமாக வண்டியை ஸ்டேண்ட்

போட்டு நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.