(Reading time: 23 - 45 minutes)

த்தனை சந்தோஷம் அவனுக்கு.மாலையும் கழுத்துமாய் புதுத் தாலி தொங்க அழகு தேவதை

யாய் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அம்சாவைப் பர்க்கப் பார்க்க பெருமையாய் இருந்தது கதிருக்கு.

அன்று இரவு...திருமணமான ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திக்கும் நேரம்.அறையில்

பரபரப்பாய் அமர்ந்திருந்தான் கதிர்.அறையின் வெளியே பெண்களின் சிரிப்பு...அம்சாவின் தோழிகள்

அவளைக் கிண்டல் செய்வது கேட்டது கதிருக்கு..சிரித்துக் கொண்டான்.க்ளிக்..மெலிதான சப்த்தத்

துடன் கதவு திறக்க....உள்ளே நுழைந்தாள் அம்சா..அழகுச் சிலையொன்று உயிர் கொண்டு வருவது

போல்.இனி நமக்கங்கே வேலையில்லை..பண்பாடு கருதி நகர்வது நல்லது.

அடுத்த மூன்று நாட்கள் உறவினர் வீட்டு விருந்து அது இது என ஓடிவிட அன்றுதான் வீட்டில்

இருந்தார்கள் இருவரும்.கதிருக்கு மனைவியை புதுப் படமொன்றுக்கு அழைத்துச்செல்ல விருப்பம்.

அம்சாவிடம் கேட்ட போது அவளின் முகத்தில் ஏகத்திற்கும் சந்தோஷம்....விதி சிரித்தது....

அம்மா.... தாயை அழைத்தான் கதிர்..

என்ன கதிரு..

அம்மா நானும் அம்சாவும் இன்னிக்கு பஸ்ட் ஷோ சினிமாக்குப் போவலாமா?

அதுக்கென்ன..கதிரு..தாராளமா போய்ட்டு வாங்களேன்..விதி கொஞ்சம் சப்தமாய் சிரித்தது.

அம்சா...

என்னங்க..அத்த....

இந்தா இந்த பூவ வெச்சுக்க..சொல்லிவிட்டுத் தானே பூவை அம்சாவின் தலையில் சூட்டிவிட்டு

மருமகளின் முகத்தைத் தொட்டு திருஷ்டி கழித்தாள் கதிரின் தாய்.

அம்சா..

சொலுங்க அத்த..

கதிரு ஒன்னக் கூட்டிக்கிட்டு சினிமாவுக்குப் போரதா சொன்னான்..கொஞ்சம் முன்னாடியே கிளம்பி

போர வழிலயே இருக்குற காளியம்மன் கோயிலுக்குப் போய் வெளக்குப் போட்டுட்டு போங்க..

சரி அத்த....

கல்யாணத்திற்கென புதிதாய் வாங்கிய சுடிதாரில் அம்சா அம்சமாக இருந்தாள்.அவளுக்கு ஏற்றபடி

கதிரும் பளிச்சென பேன்ட் ஷர்ட் உடுத்திக் கிளம்ப இருவரும் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு

வாசலுக்கு வர..கதிரின் அம்மாவும் வெளியில் வந்தாள்.

வண்டியை ஸ்டார்ட் செய்தான் கதிர்.பின்னால் இரு புறமும் காலைத் தூக்கிப் போட்டு அமர்ந்தாள்

அம்சா.இதத்தான்..இதத்தான்..நான் எதிர் பார்த்தேன் என்று மனதிற்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டான் கதிர்.

கதிரு பாத்து ஓட்டு..ரொம்ப வேகமா போகாதே....அம்மா சொல்ல..

சரிம்மா....சிறிது தூரம் போய் வேகமெடுத்தான் கதிர்.

அம்மா சொல்லியனுப்பியபடி காளியம்மன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றினார்கள்.கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் விளெக்கேற்றி விட்டு கையில் வைத்திருந்த தீப்பெட்டியை மறக்காமல் வண்டியின் பாக்ஸில் போட்டாள் அம்சா.

இருவருக்குமே பிடித்த தல படம்.அருகருகே அமர்ந்து படம் பார்ப்பது இருவருக்குமே புது அனுபவம்..

ஆயிற்று படம் முடிந்து அனைவரும் வெளியே வரும்போது செல்லை எடுத்து மணி பார்த்தான்

கதிர். மணி 9.15 எனக்காட்டியது.

அம்சா.. வா.. ஹோட்டலில் ஏதாவது சாப்பிட்டு விட்டு வீட்டுக்குப் போகலாம்...

எதுக்குங்க...அத்த வீட்ல காத்துக்கிட்டு இருப்பாங்க..

பரவால்ல அம்சா..அம்மாக்கு போன்ல சொல்லிடுவம்..

சரிங்க..சொல்லிடுங்க...

அம்மாவுக்கு போன் செய்து சொல்லியாயிற்று.

பிரபல ஹோட்டல் ஒன்றில் இருவரும் திருப்தியாய் சப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது மணி

10.20.மேகமே இல்லாமல் தூரல் விழுந்தது.

ஏங்க..மழவரும் போலருக்கு வண்டில போய்ட முடியுமா..?

பெரிசா ஒண்ணும் மழ வராது அம்சா..நின்னிடும்..போய்டலாம்.

வண்டியை ஸ்டார்ட் செய்தான் கதிர்.தூரல் கூட உடலுக்கு இதமாய் இருந்தது.கதிர் சொன்னது

போலவே தூரலும் நின்று போயிற்று.

எப்படியும் பத்தே முக்காலுக்குள் வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் வண்டியை

வேகப் படுத்தினான் கதிர்.

குறிப்பிட்ட தூரம் வரை சாலை அந்த நேரத்திலும் பர பரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது.சாலை

விளக்குகளும் பளீரென ஒளியை உமிழ்ந்து கொண்டு இருந்தன.அந்த குறிப்பிட்ட தூரம் வந்ததும்

ஒரு வளைவு ஒரு திருப்பம் அந்த திருப்பத்தில் திரும்பி அனேகமாக எல்ல வாகனங்களும் அந்த

வழியே செல்ல வேண்டிய இடம் நோக்கிச் சென்று விடும்.ஓரிரெண்டு மட்டும் அவ்வப்போது

அந்த திருப்பத்தில் திரும்பாது நேராகச் செல்லும்.அது அதிகம் கவனிக்கப்படாத சாலை என்பதால்

சாலை விளெக்குகளும் ஓரித்தில் எரிந்தால் வெகு தூரம் தாண்டித்தான் இன்னொன்று எரியும்.

சாலையும் அப்படித்தான்.குண்டும் குழியுமாக.அந்த நேராகச் செல்லும் வழியேதான் கதிர் செல்ல

வேண்டும்.எப்படியும் ஒரு ரெண்டு கிலோ மீட்டர் இருக்கும் கதிரின் வீடு அந்த திருப்ப சாலையின்

சந்திப்பிலிருந்து விலகி நேராகச் செல்லும் சாலைக்குள் வண்டியைச் செலுத்தினான் கதிர்.

பராமரிப்பின்றி குண்டும் குழியாகவும் இருட்டாகவும் இருந்த அந்த சாலை கதிருக்குக் கொஞ்சம்

பயத்தை ஏற்படுத்தியது.பரவாயில்லை வண்டியைக் கொஞ்சம் வேகமெடுத்து ஓட்டினால் சீக்கிரம்

போய்விடலாம் என்று மனதிற்குள் சமாதானம் செய்து கொண்டவன்..அம்சா கொஞ்சம் கெட்டியா

என்னைப் புடுச்சுக்கோ..வேகமா போகணும்..என்றபடி வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

வண்டி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது.அம்சாவுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது..கதிரின் இடுப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

உஸ்ஸ்ஸ்..என்ற சப்த்தத்தோடு வண்டி சாலையில் தாறு மாறாக ஓட ஆரம்பித்தது..என்னங்க..

என்னங்க...அம்சா..பயத்தில் மெலிதாய் சப்த்தம் போட்டாள்.

டயர் பன்சராகி காற்றுப் போகிறது..புரிந்து போயிற்று கதிருக்கு.நெஞ்சில் கவலை எட்டிப் பார்த்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.