(Reading time: 23 - 45 minutes)

யா ஐயா என்று கத்தியபடி அவர்களை நோக்கி ஓடினான் கதிர்..ஐயா இவங்க கிட்டேந்து எம் மனைவிய காப்பாத்துங்கையா..இரு கரங்கூப்பி மன்றாடினான் கதிர்.

அம்சாவும் கதறியபடி புதிதாய் வந்த அந்த இருவரின் கால்களிலும் காப்பாத்துங்கண்ணே காப்பாதுங்க

என்று விழவும்..அங்கே இருந்த மற்றவர்களைக் காட்டிலும் வயதில் கொஞ்சம் மூத்ததவனாய்த்

தெரிந்த அந்த மினி லாரி டிரைவர்..என்ன நடக்குதிங்கே என்று கேட்க..

ஹி..ஹி..ஹி என்று இளித்தார்கள் அந்த ஐந்து பேரும்..என்ன குமாரணணே..கரெக்ட் டயத்துக்கு

வண்டீங்க..போன் கெடச்சதுமே கெளம்பிட்டீங்களா..ஒருவன் வினவ..ஏழு பேரும் ஹோ..ஹோ..

என்று சிரிக்கவும்..நிலை குலைந்து போனார்கள் கதிரும் அம்சாவும்.

அம்சாவை மேலிருநு கீழாக விகாரமாய்ப் பார்த்தான் டிரைவர்...சூப்பருடா மச்சாங்களா..

குமாரண்ணே..பேச நேரமில்லண்னே..நீங்கதான் பஸ்ட்டு..ம்ம்ம்ம்..ஆரம்பிக்கலாமா...

ஏய் மச்சானுங்களா..இங்கே வேணாங்கடா..வழக்கமான எடத்துக்குப் போவலாம்..குட்டிய தூக்கி

லாரில போடுஙடா..

அவர்களின் பிடியிலிருந்து திமிறி விடுவித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தாள் அம்சா.ம்ஹூம்..

வேட்டை நாய்களும் ஓனாய்களும் ஓடும் மானை தப்பி ஓட விட்டுவிடுமா என்ன..

எளிதாக அவளைப் பிடித்து லாரியின் பின் கதவைத் திறந்து லாரிக்குள் போட கதறினாள் அம்சா.

கெஞ்சினான் கதறினான் போராடினான் கதிர்.ரோட்டோரம் பிடித்துத் தள்ளப் பட்டான்.

என்னங்க..என்னங்க...காப்பாத்துங்க..கத்தி அலறினாள் அம்சா.

குமாரண்ணே ரொம்ப கத்துறாண்ணே...ஒருவன் சொல்ல..

கத்துணா பொத்து வாய..

எதாலண்னே பொத்த...

...............................................(எழதவோ,சொல்லவோ கூடிய வார்த்தை இல்லை)

ஹோ..என்று ஆபாசமாய் சிரித்தார்கள் அனைவரும்.

அண்ணே...சீக்கிரமா வண்டிய கெளப்புங்கண்ணே..

டுர்..டுர்..டுர்..கிக் கிக் கிக்..வண்டி கிளம்ப மறுத்தது..

குமாரண்ணே என்னாச்சுண்ணே...

மீண்டும் டுர்..டுர்..கிக்..கிக்...கிளம்ப மறுத்தது.

ரோட்டோரம் கிடந்த கதிருக்கு லாரி ஸ்டார்ட்டாகாமல் தகராறு செய்வது புரிந்தது.மெதுவாக 

எழுந்தவன் தள்ளாடித் தள்ளாடி டயர் பன்சராகிக் கிடந்த தன் டூவீலரை நோக்கி நடந்தான்.

டூல் பாக்ஸைத் திறந்து ஸ்பேனரை எடுத்துக் கொண்டான்.முன் பாக்ஸைத் திறந்து கோயிலில்

விளக்கேற்றக் கொண்டு வந்த தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு உடலில் மிச்ச மிருந்த தெம்பைத்

திரட்டிக் கொண்டு லாரியை னோக்கி விரைவாக நடந்தான்.

டுர்..டுர்..கிக்..கிக்.. சப்தம் போட்டபடி இருந்த லாரி கிளம்ப மறுத்து அடம்பிடித்தபடி இருக்க..

அம்சாவின் சப்த்தமும் அடங்கிப் போயிருந்தது...

லாரியின் டீசல் டேங்கின் மூடியை ஸ்பேனரால் எளிதாகத் திறந்தான் கதிர்.லாரி போடும் சப்த்தத்தில்

மூடியைத்தி திறக்கும் சப்தம் யார் காதிலும் விழ வாய்ப்பில்லை.டேங்கில் டீசல் நிரம்பி வழிந்தது.

தீப்பெட்டியிலிருந்து இரெண்டு தீக்குச்கியை எடுத்தான் கதிர்..ஒன்றை தீப்பெட்டியில் சரக்கென்று

உரசி பற்ற வைத்தான்..கையிலிருந்த தீப்பெட்டியைக் கீழே போட்டுவிட்டு எரியும் தீக்குச்சியில்

மற்றொரு தீக்குச்சியைப் பற்றவைத்தான்..சட்டென.. எரியும் இரெண்டு குச்சியையும் த்ளும்பத்

தளும்ப டீசல் நிரம்பியிருக்கும் டேங்குக்குள் போட ..டமார்..என்ற பெரும் சப்தத்தோடு லாரி வெடித்துச் சிதற வானைத் தொடும் அளவுக்குத் தீப்பிழம்பு ஜ்வாலையோடு பற்றி எரிந்தது.

கதிர் தூக்கி வீசப்பட்டான்.

பொது மக்களாலும் மீடியாக்களாலும் அந்த மருத்துவ மனையே அல்லோலகல்லோலப்பட்டது.

குற்றுயிரும் குலையுயிருமாகக் கட்டிலில் கிடந்தான் கதிர்.கதிர் சிகிச்சைபெரும் அறையைச்

சுற்றிலும் காவல் துறையினர்.

காவல் துறை இன்ஸ்பெக்டர் கதிரின் கட்டிகலுக்கு மிக அருகில் காத்திருந்தார்.லர்ரி தீப்பிடித்து

வெடித்துச் சிதறிய இடத்தில் இருந்த ஒரே விட்னெஸ் கதிர்தான் என்பதால் அவனின் வாக்கு

மூலத்தை வாங்கக் காத்திருந்தார்.எப்போது சுய நினைவு வரும் எப்பொது அந்த கோர விபத்தின் காரணத்தை அறிய முடியும் அது சதியா விபத்தா என்பது கதிரின் வாக்குமூலத்திலிருந்துதான் அறிய முடியும் என்பதால் அசையாமல் அமர்ந்திருந்தார்.

கதிரின் உடலில் சிறிய அசைவு தெரியவே பரபரப்பானார் இன்ஸ்பெக்டர்.சட்டென எழுந்து கதிரின்

முகத்தருகே குனிந்து சார்..சார்..கதிர் சார்...அழைத்தார்.

கதிருக்கு சுய நினைவு வந்த நேரம்..ம்..ம்...முனகினான் கதிர்.

சார் அந்த லாரி விபத்து எப்பிடி நடந்தது சொல்லுங்க சார்....

அணையப் போகும் விளக்கு பிரகாசமாய் எரியும் என்பதுபோல் கொஞ்சம் பிரகாசமாய் ஆனான் கதிர்

தன் உயிர் பிரிவதுற்குள் உலகத்திற்கு உண்மையைச் சொல்லி விட வேண்டும் என்று எண்ணினானோ என்னவோ....சொல்ல ஆரம்பித்தான்.

அவனின் கடைசி வாக்குமூலம் டேப்பிலும் எழுத்தாலும் பதிவு செய்யப்பட்டன.

நடந்தது ஒன்று விடாமல் சொன்னான் கதிர்.

மிஸ்டர் கதிர்..ஒங்க மனைவி லாரில இருக்கையிலே நீங்க ஏன் லாரிய கொளுத்தினீங்க?

அவங்களும் அதுல செத்துடுவங்கன்னு ஒங்களுக்குத் தோணலயா?..

தெரியும்..ஆனாலும்..அவங்க கிட்டேந்து எம் மனைவிய என்னால காப்பாத்த முடியாதுன்னு எனக்கு

தெரிஞ்சிபோச்சு..நிச்சயமா அவங்க ஏழு பெரும் எம் மனைவிய பலாத்காரம் பண்ணிடுவாங்கன்னு

தெரிஞ்சு போச்சு.அந்த கும்பலால் கற்பு சூரையாடப்பட்ட எம் மனைவி உயிரோடு இருந்தால்

ஒண்ணு அவளே தற்கொல பண்ணிப்பா..இல்லாட்டி பைத்தியம் புடிச்சி பைத்தியக்காரியா மாறிடுவா

இல்லாட்டி உயிரோடு இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் தனக்கு ஏற்பட்ட கொடுமய எண்ணி எண்ணி

நடைபிணமா ஆயிடுவா.இந்த உலகமும் அவள சும்மா விடாது..அசிங்கமா பாக்கும்..போலீசு..

கோர்ட்டு கேசுன்னு அவள அலைய விடும்.என்னோட அம்சா அதெல்லாம் தாங்க மாட்டா.

இந்த என்னோட கைகள் மட்டும் தொட்ட அவள.. பூமாரியான எம் மனைவிய வேற எந்த மிருகங்களும் தொடக்கூடாது..என் ஒருத்தனோட மனைவியா மட்டும் அவ சாகட்டும்ந்தான்..

அவளயும் இழக்கத்துணிந்தேன்...என் அம்சா பவித்ர மானவள்..அம்சா..அம்சா..இதோ வந்துட்டேன்

அம்சா ..நீ..எங்கயிருந்தாலும்..காத்தோடு காத்தா கலந்திருந்தாலும் நான் ஒன்னத்தேடி வருவேன்

அம்சா...திறந்த விழிகள் திறந்திருக்க கத்ரின் உயிர் பிரிந்தது. கதிரின் உயிர் அம்சாவைக் காற்றில்

தேடிக் கண்டுபிடித்துக் கலந்திருக்குமோ...

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.