(Reading time: 23 - 45 minutes)

சுத்தமாய் போக்குவரத்து நின்றுபோய் இருட்டாகவும் இரு பக்கமும் மரங்கள் அடர்ந்த தோப்புக்களு

மாய் காணப்பட்ட அந்த சாலை...பகலிலேயே தனியாகச்செல்ல பயமேற்படுத்தும் அந்த சாலை..

இரவில்..அடிவயிற்றில் சொரேல் என பயத்தை ஏற்படுத்தியது கதிருக்கு.தான் மட்டும் என்றால்

பரவாயிலை எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம்..அழகு தேவதையாய் இளமை பொங்கும்

வயதில் ஒரு பெண்..பன்சரான வண்டியைத் தள்ளிக்கொண்டு இவளையும் அழைத்துக்கொண்டு

இந்த இருட்டில் அவ்வளவு தூரம் நடந்து செல்வது சாத்தியமா என்று தோன்றியது கதிருக்கு.

என்னங்க..இனிமே எப்பிடிங்க போறது..வண்டியும் பன்சராயிட்டு..அம்சா கொஞ்சம் பதட்டத்தோடு

சிறிது சப்த்தத்தோடு கேட்கவும்..உஸ்..சப்த்தம் போடாதே..மெதுவா பேசு..எச்சரித்தான் கதிர்.

வா..வேகமா நட..எப்பிடியாவது போய்த்தான் ஆகணும்...நடக்க ஆரம்பித்தான் கதிர்.அவனுக்குப்

பக்கத்தில் அவனுக்கு ஈடாக அம்சா..வண்டியையும் தள்ளிக்கொண்டு வேகமாக நடப்பது கதிருக்கு

அவ்வளவு எளிதாக இல்லை.

ஒரு முப்பதடி தூரமே நடந்திருப்பார்கள்..ஒரு மரத்தடியில் கும்பலாய் நாலைந்து பேர் வட்டமாய்

அமர்ந்தபடி..பாட்டிலும் கையுமாய்..மட்டமான சுருட்டின் புகை நெடி வேறு..திகீரென்றது கதிருக்கு.

பயத்தில் ரத்தம் உறைவது போல் இருந்தது.

கூட்டத்தில் இருந்த ஒருவனின் பார்வை இவர்களின் மீது படிந்து அம்சாவின் மீது நிலைத்தது.

உய்யென்று விசிலடித்தான் அவன்.சட்டென மற்ற அனைவரின் பார்வையும் அம்சாவின் மீது

படிவதைப் பார்த்தான் கதிர்.அவன் உடல் நடுங்கியது.சட்டென கதிருக்கு நிர்பயாவின் நினைப்பும்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணின் நினைப்பும் வந்து போயிற்று.பயம் மேலும் அதிக

மானது.அந்த ஐந்து பேரும் சட்டென எழுந்து நின்றார்கள்.

பிடித்துக்கொண்டிருந்த வண்டியைச் சட்டெனத் தள்ளிவிட்டுவிட்டு அம்சாவின் கையைப் பிடித்து

இழுத்துக்கொண்டு ஓட எத்தனித்தான் கதிர்.

கணமும் தாமதிக்காமல் அந்த ஐவரும் சாலையின் நடுவில் வந்து  கைகளை இருபுரமும் நீட்டி இருவரும் ஓட முடியாமல் வழிமறித்து நின்று கொண்டார்கள்.அம்சாவைப் பார்த்து விகாரமாய்ச்

சிரித்தார்கள்.அம்சா அச்சத்தோடு கதிரின் முதுகுக்குப் பின்னால் மறைந்து கொண்டாள்.கதிர்

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வழி விடுங்க என்று சொல்ல..அவர்களில் ஒருவன் ரெண்டு

பேரும் எங்க போயிட்டு வராப்புல..என்று கேட்டான்.

சி..சி...சினிமாவுக்கு..

புதுசா கல்யாணமானவுங்களா..பொண்ணு சும்மா தள தளன்னு இருக்குறா..என்று சொல்ல..

ஏதோ..பெருசா,புதுசா ஜோக்க கேட்டாப்புல மற்ற அனைவரும் கெக்..கெக்..கெக் கென்று சிரித்தனர்.

சரி வழிவிடுங்க..நாங்க போகணும்..

இரு என்ன ரொம்ப அவசரப் படுற..

ஏய்..அவரு புது மாப்ளடா..அவரு அவசரம் அவருக்குத்தெரியும்...மீண்டும் விகாரமாய் சிரித்தனர்.

ஏய் பொண்ணு என்ன புருஷன் முதுகுல பல்லிமாறி ஒட்டிக்கிட்டுருக்கிற..முன்னிடி வா..நாங்கள்லாம்

பாக்கணுமில்ல..

இ..இ..இல்ல வேண்டாம்...

நீ இல்லன்னா..எங்களுக்கு வேணுமே..அம்சா கதிரை பின்புறமாய்க் கட்டிக்கொண்டாள் பயத்தில்..

ஏ..குட்டி..இன்னா பயமா..டேய் பொண்ணு ரொம்ப பயப்படுதுடா..இன்னாட செய்யிலாம்..

நீயா வாரியா..நாங்க வந்து ஒன்னிய இழுக்கவா..

சட்டென ஒருவன் கதிரின் பின்னால் ஒண்டி நின்றிருந்த அம்சாவைப் பிடித்து இழுக்க..

கதிர் கெஞ்ச ஆரம்பித்தான்..வேண்டாம் வேண்டாம் அவள விட்டிடுங்க..ஒண்ணும் செஞ்சிடாதிங்க

இதற்கிடையில் ஒருவன் கொஞ்சம் தள்ளிப் போய் செல் போனில் யாருடனோ பேசிவிட்டு வந்தான்.

அம்சா கதிரின் முதுகுக்குப்பின்னாலிருந்து முன்புறம் இழுத்து வரப்பட்டாள்.

தண்ணி அடித்திருந்த அந்த ஐந்து பேரின் பார்வையும் அம்சாவின் உடலை மாமிசத்தை  கிழித்தெறியக் காத்திருகும் வேட்டை நாய்களின் பார்வையைப்போல் குத்திக்கிழிக்க காத்திருந்தன.

அம்சாவின் கண்களுக்கு அவர்கள் ஓனாய்கள் போலவும்,மானை வேட்டையாடும் புலிகளைப்

போலவும்,இரையைத் தூக்கிச்செல்லும் வல்லூறு போலவும் தெரிந்தனர்.

பயத்தில் அவளின் தேகம் நடுங்கியது.சட்டென அண்ணே..அண்ணே என்று கெஞ்சிக்கொண்டும்

அழுது கொண்டும் என்ன ஒண்ணும் செஞ்சிடாதீங்கண்ணே..என்ன விட்டுடுங்கண்ணே..என்றும்

கதறியபடி அவர்களின் கால்களில் விழுந்தாள்.

கெக்..கெக்..கெக்..என அவர்கள் விகாரமாய் சிரித்தார்கள்.டேய் மாரி..பக்கிரி,சோணா என்னாங்கடா

அண்ணே அண்ணேங்குது..ஒங்ககூட பொறந்திச்சா..எங்கூட பொறக்குலப்பா..ஒருவன் சொல்லிச் சிரிக்க..மற்ற நால்வரும் அசிங்க அசிங்கமாய் வார்த்தைகளைச் சொல்லிச் சிரிக்க செய்வதறியாது 

அழுது தவித்தாள் அம்சா.

அண்ணே தயவுசெஞ்சு விட்டுங்கண்ணே..கெஞ்சினான் கதிர்..

..னாங்க என்ன ஒம் பொண்டாட்டிய எங்ககூடவே வெச்சுக்கவா போறோம்..இப்ப என்னடா மணியாவுது

ஒருத்தன் கேட்க..மணி பத்தர ஆவுதுடா..ஒருத்தன் சொல்ல..ஏய் புது மாப்ள..கால ஒரு நாலு மணி

வர இவ எங்க கூட இருந்தா போதும்..அப்பரமிட்டு நீ கூட்டிக்கிட்டு போவலாம்..அதுவர அப்பால

அந்த மரத்தாண்ட போய் ஒழுங்கு மருவாதியா ஒக்காரு..

அதற்கு மேல் சும்மா இருக்க முடியாமல் அந்த ஐந்து பேரோடும் தனியாளாய் போராட ஆரம்பித்தான்

கதிர்.

பத்து நிமிடங்களுக்கு மேல் போராட முடியாமல் துவண்டு போன அவனை குண்டுக் கட்டாய்த் தூக்கி

சாலையோரம் வீசினர்.அதே நேரத்தில் தூரத்தில் ஏதோ ஒரு வாகனம் வெளிச்சத்தை உமிழ்ந்தபடி

வருவது கதிருக்குத் தெரிய அதை நிறுத்தி உதவி கேட்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

மெதுவாக எழுந்து நின்றான் கதிர்.அவன் கைகளை நீட்டி அவ் வாகனத்தை நிறுத்த முயல்வதற்குள்

அதுவாகவே சடன் பிரேக் போடப் பட்டு நின்றது.அது ஒரு மினி லாரி.

மினி லாரியின் கதவைத் திறந்து கொண்டு முதலில் டிரைவரும் பின்னர் க்ளீனரும் குதித்து இறங்கினார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.