(Reading time: 23 - 45 minutes)

ம்மா காய்ந்த துணிகளை மடித்துவைத்துக் கொண்டும் அக்கா டி.வி.யில் சீரியல் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள்.கதிர் உள்ளே நுழைவதைப் பார்த்த இருவரின் முகத்திலும் எந்த மாற்றமும்

இல்லை.

தன்னைப் பார்த்ததுமே வாயெல்லாம் பல்லாக அம்மா ஓடி வந்து நிச்சயத்திற்கு தேதி குறித்துக்

கொண்டு வந்த விஷயத்தைச் சொல்லுவார்கள் என்று ஆவலோடும் ஆசையோடும் எதிர் பார்த்த

கதிருக்கு மிகுந்த ஏமாற்றமாய் இருந்தது.தானாய் கேட்கவும் தயக்கமாய் இருந்தது.

பேன்ட்டைக் களைந்து லுங்கிக்கு மாறினான் கதிர்.அந்த இடைப்பட்ட நேரத்திலும் அம்மாவோ

அக்காவோ வாயே திறக்கவில்லை.

புழக்கடைப் பக்கம் போய் கை கால் கழுவிக்கொண்டு உள்ளே நுழைந்த கதிரை..கதிரு..சாப்பட வா..

தட்டு வெக்கிறேன்..அம்மா சாதாரணமாய் எப்போதும் போல் சொல்லவும் குழம்பிப் போனான் கதிர்.

என்னாச்சு..இவங்களுக்கு..ரெண்டு பேரும் வாயே தொறக்க மாட்றாங்க..நாளு பாக்க போனாங்களா

இல்லியா?

தட்டின் முன் அமர்ந்து கொண்டான் கதிர்.சாப்பிடவே பிடிக்க வில்லை.அம்மா,அக்கா மேல் கோப

மாய் வந்தது.மனசு தவித்து தத்தளித்தது.

அம்மா உருளைகிழங்கு பொரியலும்,சாதமும் தட்டில் வைத்து விட்டு..கதிரு ஒனக்குப் பிடிச்ச

கறிக் குழம்பு வெச்சுருக்கேன்..நல்லா சாப்புடு என்று சொல்லி கரண்டியால் குழம்பிலிருந்து கறித்

துண்டுகளை அள்ளிப் போட..சாதாரணமாய் இருந்தால் கறிக் குழம்பையும் உருளைக் கிழங்கு

பொரியலையும் ஒரு பிடி பிடிக்கும் கதிருக்கு அன்று அவற்றைப் பார்க்கவே பிடிக்கவில்லை.

சாதத்தைக் கைகளால் அளைந்து கொண்டே அங்கும் இங்கும் பார்த்தபடி இருந்த கதிரை

என்னடா கதிரு..தவிட்ட முழுங்கின கோழி மாதிரி திரு திருன்னு முழிக்கிற..அம்மா கேட்க..

பட்டென்று கேட்டேவிட்டான் கதிர்.என்னமா ஐயிர பாக்கப் போனீங்களா இல்லியா?ஒண்ணுமே

சொல்லாம ரெண்டு பேரும் இப்பிடி மௌனமா இருந்தா என்ன அர்த்தம்?

சட்டென அம்மவின் முகம் கொஞ்சம் சோகமாய் மாறியது போல் இருந்தது கதிருக்கு.

என்னாச்சும்மா..கொஞ்சம் பதட்டமாகவே கேட்டான் கதிர்.

கதிரு...அந்த அம்சா பொண்ணு அப்பிடியென்ன ரொம்ப அழ்கா இருக்குதா என்ன?கடசியா அவங்க

வீட்டுல எல்லார்ட்டயும் சொல்லிட்டு வரக்கொள்ள அந்த பொண்ணுகிட்டயும் சொல்லிக்கப் போனேன்..கிட்டப் பார்த்தப்ப அப்பிடி ஒண்ணும் அது அவ்வளவு அழகு இல்லடா..ரொம்ப சுமாராத்

தான் இருக்கு.கொஞ்சம் பல்லு கூட எடுப்பா தெரியுதுடா கதிரு..உலகத்துல வேற பொண்ணா

கெடிக்காது..விடுடா...ஒனெக்கேத்த பொண்ணா இன்னும் அழகா பாக்கலாம்..மீனு நீ என்ன சொல்ற..

ஆமாம் கதிரு..அம்மா சொல்றது நெஜந்தான்..அந்த பொண்ணு அப்பிடி ஒண்ணும் அம்புட்டு

அழகில்ல...வேற பொண்ணு பாக்கலாமான்னு.. யோசன பண்ணிப் பாத்தோம்..அதுனால ஐயிரப்

பாக்கப் போகல..

இருவரும் மாறி மாறிப் பேச உடைந்து போனான் கதிர்.சாபிடாமலேயே எழுந்தவன் கை கழுவி

விட்டு வந்து லுங்கியை விட்டு பேன்ட்டுக்கு மாறி தலையைக்கூட வாராமல் செருப்பை மாட்டிக்

மீண்டும் கடைக்குக் கிள்ம்பியவனை..

டேய் கதிரு..நில்லுடா....

அம்மாவின் குரல் தடுத்து நிறுத்தவே..சற்று நின்று திரும்பிப் பார்த்தான்.

இங்க வா..அம்மா கூப்பிட..போகாமல் நின்ற இடத்திலேயே நின்றிருந்தான்.

அம்மாவே அருகில் வந்து கதிரின் முகத்தைப் பார்த்துச் சிரிக்க ...கதிருக்கு..குழப்பமும்,அம்மா மீது

கொஞ்சம் கோபமும் ஏற்பட்டது.போதாததற்கு அக்கா மீனுவும் பக்கத்தில் வந்து நின்று சிரிக்க

பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது கதிருக்கு.

லேய்..கதிரு...ரொம்ப கொழம்பிட்டியா...ரொம்ப வருத்தமாருக்கா....இந்த பொண்ணு வேண்டான்னு

னாங்க சொல்லவும் அழுதுடுவ போலருக்கு...ம்....அம்புட்டு புடிக்கிதா ஒனக்கு..அம்மா கேட்க...

கதிரு..சும்மாதாண்டா நாங்க ரெண்டுபேரும் ஒன்ன கலாய்ச்சோம்...அந்த பொண்ணு அம்சா நெசமாவே ரொம்ப அழகாதாண்ட இருக்குறா...ஐயிர் நாள் பாத்து சொல்லிட்டாரு..வர புதன் கிழம

நாளு நல்லா இருக்கிரதா சொன்னாரு...சும்மா ஒங்கிட்ட வெளயாடிப் பாத்தோம்.ரொம்ப பயந்துட்டயா...என்று கேட்ட கதிரின் அம்மா அவனின் தலையைக் கலைத்து முதுகில் செல்லமாய்த்

தடவ..கதிருக்கு சந்தோஷம் பிடி படவில்லை.என் செல்ல அம்மா..என்று சொல்லி அம்மாவின் கன்னத்தில் லேசாக முத்தமிட்டுவிட்டு..மீனுக்கா இப்பிடியா என்ன ரெண்டுபேரும் கலாய்ப்பீங்க..

என்று சொல்லியபடி அக்காவின் கைபிடித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு..ஒரு துள்ளளுடன்

வாசலை நோக்கி ஓடி வண்டியைக் கிளப்ப..

டேய்..கதிரு..பாத்து..பாத்து...மெதுவா போடா...வண்டிய தல தெறிக்க ஓட்டாத..பாத்துப் போடா..

அம்மா கத்த...கதிரின் காதில் எதுவும் விழவில்லை..

கதிர் ஆவலோடு எதிர் பாத்துக் காத்திருந்த புதன் கிழமை..முகூர்த்த ஓலை எழுதும் நாள்.அதிகம்

 பேர் வருவார்கள் என்பதால் கல்யாண மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மண்டப வாசலுக்கும்

உள்ளுக்குமாக நடந்து கொண்டிருந்த கதிரை குணாவும்,வேணுவும் கிண்டலடித்துக் கொண்டிருக்க

அழகு தேவதையாய் ஆட்டோவில் வந்து மண்டபத்து வாசலில் இறங்கினாள் அம்சா.

அம்சாவைப் பார்த்த மாத்திரத்தில் அண்ணே...அண்ணே..அண்ணி ரொம்ப..ரொம்ப அழகுண்ணே

குணாவும்.வேணுவும் கோரஸாகக் கத்த கதிருக்கு பெருமை பிடி படவில்லை.

நல்லபடியாய் நிச்சயதார்த்தம் எனும் முகூர்த்த ஓலை எழுதும் நிகழ்ச்சி நடந்து முடிய அம்சாவை

செல்லில் ஒரு போட்டோ எடுப்பதற்குள் கதிருக்கு போதும் போதும் என்றாகி விட்டது.அவ்வளவு

வெட்கம் அம்சாவுக்கு.அன்றிலிருந்து இருபத்தி இரெண்டாம் நாளில் திருமணம் செய்ய நாள் குறிக்

கப்பட மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் தத்தளித்தான் கதிர்.

டும்...டும்..டும்மென மேளம் கொட்ட..ஆனந்தம்..ஆனந்தம்..ஆனந்தமே..என நாதஸ்வரம் முழங்க

அம்சாவின் சங்குக் கழுத்தில் தாலி கட்டினான் கதிர்.அந்த நேரம் உலகிலேயே மகிழ்ச்சியான நபர்

யார் என்று கதிரிடம் கேட்டால் கொஞ்சமும் தயங்காது நெஞ்சு நிமிர்த்தி நான்தான் என்று சொல்வான் கதிர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.