(Reading time: 19 - 38 minutes)

ன்ன..என்ன.என்ன..சொல்ரீங்க..எனக்கு..எனக்கு..நான்..நான்..சினிமாவுல..தனது சந்தோஷத்த

அடக்க முடியாமல் திக்கித் திக்கிக் கேட்டாள் செவ்வந்தி.

இந்த ஒரு தவிப்பும் திக்கலும் போறாதா.....இவளின் மனதை எடைபோட..

செவ்வந்தியின்னுள்ளார்ந்த ஆசை புரிந்து போயிற்று அவருக்கு....

அடுத்த அரை மணி நேரத்தில் சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கித் தருவதாகவும் அவளை

முன்னணி நடிகையாக ஆக்கும் வரை தான் ஓய மாட்டேன் என்றும் கையில் அடிக்காத குறையாக

சத்தியம் செய்து கொடுத்தார் டைரக்டர்.அவரின் அரிச்சந்திர சத்தியத்தை நம்பி இவளிடம் பேச்

சுக்கொடுத்து கூட்டிவந்த ஆளுடன் கனவு நகரமான சென்னைக்குக் காரில் ஏறினாள் செவ்வந்தி.

வழி நெடுக... புகழ் பணம் கார் பங்களா ஆடம்பர வாழ்க்கை எல்லாம் பகல் கனவாய் வந்து போயின.

இரண்டு நாட்கள்..அந்தப் பாட்டியின் வீட்டிலேயே அடைந்து கிடந்தாள் புனிதஸ்ரீ.பாட்டி சினிமாவே

பார்த்ததில்லை என்பதால் புனிதஸ்ரீ ஒரு சினிமா நடிகை என்பதெல்லாம் அவருக்குத் தெரியவில்லை

அவளின் பெயரைக்கூட கேட்டுக்கொள்ளவில்லை.

ஒரு டிவி கிடையாது செல்போன் கிடையாது ஷூடிங் கிடையாது ரசிகர் பட்டாளம் இல்லை ஒரு பார்ட்டி இல்லை...பார்யில்லை பாட்டில் இல்லை..ஜிம் இல்லை..பேசக் கூட ஆளில்லை..

குளிக்க சோப்போ டாய்லெட்டோ எதுவும் இல்லை..எண்ணி இரெண்டே நாட்கள்...எந்த வசதியும்

இல்லா இந்த சராசரி வாழ்க்கை நரகமாகத்தெரிந்தது புனிதஸ்ரீக்கு.அவள் மனம் அவளிடம்

முகத்தில் அறைவது போல் கேள்வி கேட்டது.துளைத்து எடுக்க ஆரம்பித்தது.ஒரு முடிவுக்கு

வந்தாள் புனிதஸ்ரீ.

சென்னையில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு வீட்டின் அறையில் கொண்டு வந்து வைக்கப் பட்டாள்

செவ்வந்தி.தானாக விரும்பித்தான் வந்தவள் என்பதால் யாரும் அவளைக் காவல் காக்க வைக்கப்

படவில்லை.

ஏகமாய் குழம்பிப் போயிருந்தாள் செவ்வந்தி.இத்தனை நேரம் கணவன் பெற்றோர் உறவினர் அக்கம்

பக்கம் எல்லோருக்கும் தெரிந்து போயிருக்கும் தான் காணாமல் போனது பற்றி. பயமும் கவலையும்

குழப்பமும் அவளைத் தவிக்க வைத்தது.ஆனாலும் சினிமாவில் நடிப்பு..பேர் பணம்..ஆடம்பரம்..

இந்த னினைப்பு அவளை மீட்டு இயல்புக்குக் கொண்டு வந்தது.

இரவு..8 மணி  தன்னை அழைத்துவந்தவர் மர்றொருவருடன்  அறைக்கு வந்து..மேடம்..இவர்தான்

மிஸ்டர் ராக்கி..ஒங்கள ஃபோட்டோ டெஸ்ட் எடுக்க வந்திருக்கார்.நீங்க ரெடியா?

ஃபோட்டோ டெஸ்டா...

ஆமாம் மேடம் ஒங்கள விதவிதமான போஸ்க்கள்ல போட்டோ எடுத்து தயாரிப்பாளர் டைரக்டருங்க

கிட்டெல்லாம் கொடுத்தா தானே அவங்களும் ஒங்க அழகப் பாத்து தங்களோட படத்துல ஹீரோ

யினா சான்ஸ் கொடுப்பாங்க..

அரை மனதோடு ஒப்புக்கொண்டாள் செவ்வந்தி...

அப்படி இப்படி என்று அவளை தொட்டுத்தொட்டு அசிங்க அசிங்கமாய் நிற்கச்சொன்னார்கள்

அவர்கள் இருவரும்,மிரண்டு போனாள் செவ்வந்தி..ஐயோ என்ன இது ..நா மாட்டேன்..முடியாது

வேண்டாம்.... வேண்டாம் மறுத்தாள் செவ்வந்தி.

சிரித்தார்கள் இருவரும்..இதுக்கே இப்பிடின்னா...

சரி..சரி..பொண்ணு பயப்புடுது..இன்னிக்கு வேண்டாம் ..நாளைக்குப் பாப்பம்...

அறையை விட்டு வேளியேறி இவள் இருக்கும் அறையின் ஜன்னலின் வேளிப்புரத்தில் நின்றார்கள்.

என்னையா இப்பிடி பயப்புடுது..சரிப்பட்டு வருமா..?

நமக்கென்னையா ஆச்சு..நாளக்கி டைரக்டர் வந்துடுவாரு..நாள நைட்டு இத மும்பைக்கு கூட்ட்டிட்டு

போராரு..

அங்கதான் அந்த குறிப்பிட்ட ஏரியாவுல கொண்டு ஒப்படச்சா கணிசமா ஒரு பெரிய தொக கெடைக்கு

மில்ல... அதான்...இந்த பொண்ணுக்கும் ஹிந்தி தெரிஞ்சிருகக வாய்ப்பில்ல..தப்பில்லாம் வர

முடியாது...ம்...ம்..ம்...நமக்கு ஏதோ கொஞ்சம் கிடைக்காதா..?

அவர்களின் பேச்சை ஒன்று விடாமல் கேட்ட செவ்வந்திக்கு..மயக்கமே வரும் போல இருந்தது.

பொறிக்குள் மாட்டிய எலியாய் தவித்தாள்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே அறையின் கதவை வெளித்தழ்ப்பாள் போடாமல் டூவீலரில்

ஏறிச் சென்றனர்.

கொஞ்சமும் தாமதிக்காது வெளியே வந்தாள் செவ்வந்தி..சாலைக்கு வந்ததும் ஆட்டோ ஒன்றுவர

கோயம்பேடு என்றாள்.

இருனூறு ரூபாய் கொடுத்துவிட்டு பேருந்துகள் நிற்கும் இடம் சென்றாள்.தன் ஊர் செல்லும்

பேருந்தில் ஏரி அமந்தபோது அவள் மனம் நிர்மலமாய் இருந்தது.ஆடம்பரமாய் வாழும் ஆசை

அவளை விட்டு ஓடிப்போய் இருந்தது.தன் கணவனைப்பற்றி நினைக்க ஆரம்பித்திருந்தது.

மாணிக்கம் நல்லவன் திசைமாறிப்போகாமல் திருந்தி திரும்பி வந்தவளை நிச்சயம் ஏற்றுக்கொள்வான்.

புனிதஸ்ரீ காணாமல் போனது பற்றிய செய்தி பற்றி எரிந்து கொண்டிருந்தது.சித்தி வாயிலும் வயித்திலும் அடித்துக்கொண்டு அழுதாள்.போலீஸ் துறையே தேடும் பணியில் ஒட்டுமொத்தமாய்

இறங்கியது.செய்திக்குப் பஞ்சமே இல்லாது போகவே பத்திரிகைகளும் சானல்களும் போட்டிபோட்டு

செய்தி வெளியிட்டன.

அழுது கொண்டிருந்த சித்தி சட்டென..நிமிந்து உட்கார்ந்தாள்..யாரு..யாரு..புனிதா..நீயா..

ஐயோ என்னாச்சு..என்னாச்சு ஒனக்கு...நீ எங்க இருக்க...ஒன்ன யாராவது கடத்திட்டாங்களா..

இல்லியா.அப்ப...கோவிலுக்குப் போனியா..தனியாவா..இப்ப எங்க இருக்க சொல்லு ஒடனே கெள்ம்பி வரேன்..அலைபேசியில் தன்னுடன் பேசும் புனிதஸ்ரீயிடம் கதறலோடு பேசினாள் சித்தி.

பரபரப்பாய் பேசப்பட்டுவந்த விஷயம் சப்பென்று முடிவுக்குவந்தது.

தனது ஊரை நோக்கி சித்தியோடு வந்து கொண்டிருந்தாள் புனிதஸ்ரீ.அவளின் பழைய வாழ்க்கைதான் இனி அவளுக்குச் சரிப்படும்..அது புனிதஸ்ரீக்குப் புரிந்தது.

என்றைக்குமே இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்..

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.