(Reading time: 8 - 16 minutes)

நந்தா - வத்சலா

This is entry #29 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ருள் சூழ ஆரம்பித்திருந்த நேரம். தான் செய்ய போகும் காரியத்துக்கான திட்டத்தை தனது மனதிற்குள் வகுதுக்கொண்டான் நந்தா., எங்கிருந்தோ வந்த தைரியத்தின் துணையுடன் அந்த தெருவில் நடந்தான் அவன். அதோ தெரிகிறதே அந்த மரங்கள் நிறைந்த அந்த தோட்டம் அதற்குள் தான் இருக்க வேண்டும் அந்த ஜீவாவும் அவன் நண்பர்களும்.

மெதுவாக நடந்து அந்த தோட்டத்தை அடைந்தான் அவன். அந்த தோட்டத்தை  ஒட்டிய சாலையில் நின்றிருந்த அந்த காரின் பின்னால் பதுங்கிக்கொண்டு எட்டிப்பார்த்தான் நந்தா. அங்கே இருந்த அந்த சிமென்ட் பெஞ்சின் மேல் இருந்தது அந்த துப்பாக்கி. அதன் அருகிலேயே நின்று பேசிக்கொண்டிருந்தான் ஜீவா.

அங்கே நின்றுக்கொண்டு அந்த துப்பாக்கியையே பார்த்திருந்தான் நந்தா. ஜீவாவின் அருகில் சென்று அந்த துப்பாக்கியை இவன் கையில் எடுத்து விட்டால் போதும் பாதி காரியம் முடிந்தது போலே தான். அதை முதலில் செய்துவிடுவோம் அதன் பிறகு மற்றதை யோசிப்போம் தனக்குள்ளே முடிவு செய்துக்கொண்டான் நந்தா.

gunரத்தத்தை பார்த்தாலே உடலெல்லாம் நடுங்கும் நந்தாவுக்கு. இன்று அத்தனை ரத்தத்தை அதுவும் தனது தங்கை அமுதாவின் ரத்தத்தை, கண்ணால் பார்த்திருக்கிறான் அவன். அதை எப்படி தாங்கிக்கொண்டான் என்று அவனுக்கே தெரியவில்லை.

அங்கே ஜீவாவுடன் சேர்த்து நான்கு பேர் நிற்கிறார்கள் உயரமும் பருமனுமாக நான்கு பேர். முரட்டு கும்பல். நந்தா அத்தனை உயரம், பருமன் எல்லாம் இல்லை. அத்தனை சக்தி வாய்ந்தவனும் இல்லை. அவர்கள் கையில் மாட்டிக்கொண்டால் அவன் கதி என்னவாகுமோ? அவனுக்கு தெரியவில்லைதான்.

ஆனாலும் தங்கை மீது அவன்  வைத்திருக்கும் கண் மூடித்தனமான பாசமும், அவளது இன்றைய கதறலும் தான் அவனை செலுத்திக்கொண்டிருக்கிறது. அவனது தங்கை துடித்த துடிப்பும் அவள் கதறிய கதறலும்..... அந்த காட்சி கண்முன்னே விரிய கண்ணில் நீர் கட்டிக்கொண்டது நந்தாவுக்கு,

அந்த ஜீவா எத்தனை பெரிய முரடன் என்று அந்த தெருவில் வசிக்கும் பல பேருக்கு தெரியும். அதனாலேயே தனது தங்கையை அவன் பார்வையிலேயே பட விட்டதில்லை நந்தா. ஆனால் இன்று அவன் வெளியில் சென்றிருந்த சமயம் வீட்டினுள் நுழைந்திருக்கிறான் அந்த ஜீவா.

வீட்டில் அமம்வும் தங்கையும் மட்டும் தனியே இருந்த நேரத்தில், அமுதாவை தன்னுடன் அழைத்து சென்றிருக்கிறான் அந்த ஜீவா. அம்மாவை என்ன சொல்லி ஏமாற்றினானோ? அவளை என்ன சொல்லி தன்னுடன் அழைத்து சென்றானோ இன்னமும் புரியவில்லை நந்தாவுக்கு. நினைக்க நினைக்க கொதித்தது அவனுக்குள்ளே.

எப்படியும் தான் போட்டிருக்கும் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என அவன் முடிவெடுத்த அந்த வேளையில் அங்கே வந்தார் அந்த காரின் ஓட்டுனர்.

'அய்யோ... இந்த கார் நகர்ந்தால் அந்த முரடர்களின் கண்ணில் பட்டு விடுவேனே நான்? அதன் பின் என் கதி?  என்ன செய்வது என்று புரியாமல் ஒரு முறை திகைத்து , சுதாரித்து விலகி ஓடி அங்கே இருந்த ஒரு பெரிய மரத்தின் பின்னால் பதுங்கிக்கொண்டான் நந்தா. அங்கே இருந்த படியே அவர்களை நோட்டம் விட்டான்.

அந்த கார் கிளம்பிய சத்தமும், இவன் ஓடிய சலசலப்பும் ஜீவாவை திசை திருப்பின. அது எப்படியோ???? இவன் ஒளிந்திருந்த மரத்தை நோக்கியே திரும்பினான் அவன். ஏதோ சந்தேகம் வந்திருக்க வேண்டும் அவனுக்கு...

'டேய்... அங்கே ஏதோ சத்தம் கேட்குது போய் பாருங்கடா.. அந்த நந்தா சும்மா இருக்க மாட்டான் கண்டிப்பா நம்மை தேடி வருவான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்டே சவால் விட்டான் அவன்.. நீ தைரியமான ஆம்பிளையா இருந்தா அந்த தோட்டத்திலேயே இரு நான் வருவேன்னு அவனுக்காக தான் நான் இங்கே காத்திருக்கேன். போய் பாருங்கடா ' என உறுமி தனது சகாக்களை நந்தா இருக்கும் திசையை நோக்கியே ஏவி விட்டான் ஜீவா.

அவர்கள் அந்த மரத்தை நோக்கி வர சுவாசமே நின்று போனது போல் இருந்தது நந்தாவுக்கு. மரத்தோடு ஒண்டிகொண்டான் அவன்.

'இறைவா நானும் என் தங்கையும் எந்த தவறும் செய்யாதவர்கள். தப்பு செய்தவன் அந்த ஜீவா. என்னை அவர்களிடம் காட்டிக்கொடுத்து விடாதே' இறைவனை வேண்டிய படியே அசையாமல் நின்றான் நந்தா.

அவர்கள் அந்த மரத்தை நோக்கி ஓடி வந்தனர். தடதட வென ஓடி வந்தவர்களின் காலடி சத்தமே நந்தாவின் இதய துடிப்பை அதிகரித்தது. மூச்சே விட முடியவில்லை அவனால். அங்கே கொஞ்சம் இருள் அதிகமாக சூழ்ந்திருந்த படியாலும்  நந்தா அணிந்திருந்தது  கருப்பு சட்டை என்பதாலும் மரத்தோடு ஒட்டிக்கொண்டு நின்றவனை அவர்களால் கண்டுக்கொள்ள முடியவில்லை.

சில நொடிகள் அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு 'இங்கே யாரும் இல்லையே தல' என்றபடியே ஜீவாவை நோக்கி சென்று விட்டனர். சில  நொடிகள் நிம்மதியாக சுவாசித்தான் நந்தா. மறுபடியும் அந்த துப்பாகிக்கே சென்றது அவன் பார்வை.

அவர்கள் நால்வரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்க, மண்டியிட்டு குனிந்து திரையில் தவழ துவங்கினான் நந்தா. எந்த நிலையிலும் சத்தம் மட்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்பதில் படு கவனமாக நிதானமாக அவர்களை நோக்கி நகர்ந்தான் அவன். கல்லும், மண்ணும், ஒரு சில முட்களும் கூட அவன்  காலை பதம் பார்த்தன. ஆனால் எதுவுமே அவனை பாதிக்க வில்லை. தங்கையின் கண்ணீரே அவனை செலுத்திக்கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.