(Reading time: 8 - 16 minutes)

 

ந்த இருட்டில், அவர்கள் அவன் பக்கம் திரும்பவில்லை. அப்போது அவனருகில் ஏதோ சலசலப்பு. திடுக்கிட்டு நடுங்கித்தான் போனான் நந்தா. ஒரு வேளை பாம்பாக இருக்குமோ. ???

'இறைவா... காப்பாற்று...'  இதயம் தாறுமாறாக துடிக்க மெதுமெதுவாக கண்களை திருப்பி அந்த திசையை பார்த்தான். அரை  இருட்டில் எதுவுமே சரியாக தெரியவில்லை அவனுக்கு. ஆனால் சலசலப்பு மட்டும் அடங்கவில்லை.

அசையாமல் அப்படியே இருந்தான் அவன். அந்த சலசலப்பு இன்னும் பக்கத்தில் கேட்டது உடல் நடுங்கியது நந்தாவுக்கு. ஏதோ ஒன்று அவனை நோக்கி தாவி அவன் மீது அமர்ந்தது. தவழ்ந்துக் கொண்டிருந்தவன் சாய்ந்து விழுந்தான். பகீரென்றது அவனுக்கு. உடல் அதிர்ந்து குலுங்கியது. அது என்ன என்று அவன் பார்பதற்குள் அது அவனை தாண்டி தாவி விட்டிருந்தது. அது ஒரு கருந்தவளை.

மொத்தமாக வியர்வையில் குளித்திருந்தான் நந்தா. ஆனாலும் அந்த அதிர்ச்சியிலும் அவன் சத்தம் மட்டும் எழுப்பி விடவில்லை. அதிர்ச்சியில் மூச்சு முட்ட இருமல் வருவது போல் இருந்தது. அப்படியே அங்கேயே எழுந்து அமர்ந்து வாயை பொத்திக்கொண்டான். எந்த விதமான சத்தமும் வந்து விடக்கூடாது.

சுதாரித்து எழ அவனுக்கு இரண்டு நிமிடங்கள் பிடித்தன. சுவாசத்தை சீர் படுத்திக்கொண்டு மறுபடியும் அந்த துப்பாக்கி இருந்த அந்த சிமென்ட் பெஞ்சை நோக்கி தவழ்ந்தான் நந்தா. முன்பை விட இன்னும் கவனமாக.

நெருங்கிவிட்டான் அந்த சிமென்ட் பெஞ்சை. அதன் அடியில் மறைந்துக்கொண்டான். அதன் முன்னால் நின்றிருந்தனர் அந்த நால்வரும் இப்போது அவர்களுக்கு தெரியாமல் அந்த துப்பாக்கியை எடுத்தாக வேண்டும்.

'இறைவா ஏதாவது உதவி செய்' மறுபடியும் வேண்டிக்கொண்டான் நந்தா. அப்போது அங்கே எதிர் திசையில் இருந்த மரத்திலிருந்து ஏதோ ஒன்று கீழே விழ, சற்றே பலத்த சத்தம் கேட்க......

'டேய்... அந்த நந்தாவாத்தான் இருக்கும் வாங்கடா...' என்று சொல்லியே படியே அந்த திசையை நோக்கி ஓடினார்கள் ஜீவாவும் அவனது சகாக்களும்.

அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி துப்பாக்கியை கையில் எடுத்து விட்டான் நந்தா. அவன் முகத்தில் வெற்றி சிரிப்பு. மனமெங்கும் அப்படி ஒரு சந்தோஷ பிராவகம். அதை தனது சட்டைக்குள் பத்திர படுத்திக்கொண்டான் அவன்.

இப்போது அவர்கள் கண்ணில் படமால் வந்த வழியே திரும்பி ஆக வேண்டும் அவன். பழையபடியே தவழ்ந்தான் அவன். கொஞ்ச நேரம் அவர்கள் அந்த திசையிலேயே நந்தாவை தேடிக்கொண்டிருக்க அவன் எழுந்து நின்றான். இனி அங்கிருந்து ஓடி விடுவது தான் நல்லது என்ற முடிவுக்கு வந்திருந்தான் நந்தா.

இன்னும் சில நிமிடங்கள் தாமதித்தாலும் அவர்கள் அவனை கண்டுகொள்வார்கள். அந்த சிமென்ட் பெஞ்சின் அருகில் வந்ததும் முதல் வேலையாக துப்பாக்கியை தான் தேடுவான் ஜீவா. அது அங்கே இல்லை என்றால் உடனே அவன் இங்கே வந்திருப்பதை கண்டுக்கொள்வான் ஜீவா. அவ்வளவுதான் அதோடு அவன் கதை முடிந்து விடும்.

அடுத்த நொடி அங்கிருந்து அவன் ஓட துவங்க அவன் மீது விழுந்தது ஜீவாவின் பார்வை.

'டேய்... நந்தாடா... அங்கே ஓடுறான் பாரு' ஜீவாவின் குரல் அவனை துரத்த, மூச்சை பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான் நந்தா. அவர்களும் அவனை துரத்திக்கொண்டு வர, தெருவில் ஓடிக்கொண்டிருந்த சைக்கிள், ஸ்கூட்டர்களை இடையில் நுழைந்து கடந்து ஓடினான் நந்தா.

அவனை துரத்திக்கொண்டு ஓடி வந்துக்கொண்டிருந்தது அந்த முரட்டு கும்பல். ஓட்டம். கண் மண் தெரியாத ஓட்டம் நந்தாவிடம். எப்படியோ வீடு வந்து சேர்ந்திருந்தான் அவன்.

வீட்டுக்குள் வந்து சோபாவில் அமர்ந்து ஒரு முறை ஆழமாக சுவாசித்தான்.

'எங்கேடா போனே? ஏன் இப்படி ஓடி வரே?' கேட்டாள் அவனுடைய அம்மா.

'விளையாடிட்டு வரேன். அமுதா எங்கே?

'மாடியிலே இருக்காடா.....'

காப்பாற்றிவிட்டான் அவளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட்டான் நந்தா.

'குட்டிமா...' கத்தியபடியே மாடி ஏறினான் நந்தா. 'உன் துப்பாக்கியை கொண்டு வந்திட்டேன் பாரு...'

'கொண்டு வந்திட்டியா???' உற்சாகமாக கூவிய படியே ஓடி வந்தாள் அமுதா.

'இந்தாடா....' என்று அந்த பொம்மை துப்பாக்கியை அவளிடம் கொடுத்துவிட்டு மண்டியிட்டு அமர்ந்தான் நந்தா. மாலையில் அவள் துப்பாக்கிக்கு சண்டை போட்டு ஜீவா அவளை கீழே தள்ளி விட்டபோது அவள் காலில் பட்ட அந்த ரத்த காயத்தை மெல்ல தொட்டு பார்த்தான் நந்தா.

'ஒண்ணுமில்லை அண்ணா இப்போ சரியாயிடுச்சு' என்று தங்கை சொல்ல மகிழ்ச்சியுடன் புன்னகைத்தான் நந்தா.

முதலிலேயே சொல்லி இருக்கணும். சொல்ல மறந்துட்டேன். அமுதாக்கு அஞ்சு வயசு, நந்தா ஜீவா அப்புறம் அவனோட சகாக்களுக்கு இப்போதான் எட்டு வயசு முடிஞ்சிருக்கு.!!!!!

This is entry #29 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.