(Reading time: 7 - 13 minutes)

எல்லாம் நன்மைக்கே… - அஜி

This is entry #35 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

good

மைதியான‌ இர‌வு நேர‌ம்,

வானத்து நட்சத்திரங்கள்

தமது ஜோடிகளை தேடி,

நகர்ந்து கொண்டிருந்த வேளை,

தூங்கிக் கொண்டிருந்த‌ ஷர்மிக்கு திடீரென‌ விளிப்பு வந்தது.. என்னடா ஏதோ பயங்கரமா சத்தம் கேட்டிச்சி!! என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, திரும்பவும் அதே சத்தம், ஆனால் முன்பு கேட்டதை விட பயங்கரமாக... ..

பயத்தில் பேசுவதற்கு கூட வாய் எழ வில்லை ஷர்மிக்கு. பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஷாகினை பார்த்த பொழுது அவளும் விழித்திருப்பது தெரிந்தது, மெதுவாக அவள் பக்கம் நகர்ந்து ஷாகின் என்று அழைத்த உடனே அவள் திடுக்கிட்டு திரும்பினால்.

அவளும் பயந்திருப்பது நன்றாக தெரிந்தது, உடனே உள்ளுக்குள் ஒரு சின்ன சந்தோசம்.அப்பாடா நாம மட்டும் பயப்டல, நமக்கு கம்பெனிக்கு ஆள் இருக்கு. ஷாகின் உனக்கு ஏதாவது சத்தம் கேட்டிச்சா?? உடனே ஷாகின் பயத்துடனே ஆமா ஷமி உனக்கும் கேட்டிச்சா?

ஆமாடி ரொம்ப பயமா இருக்கு என்று நடுங்கி கொண்டே ஷாகின் கையை பிடித்தாள், இப்பொழுது ஏதோ வெளிச்சம் பளிச்செனமின்னியது!!

ஆஆஆஆஆ……. என்ற அலறலுடன் இருவரும் கண்ணை இறுக்கமாக மூடி கொண்டனர். ஷாகின் மெதுவாக கண் திறந்து பார்த்த போது ஷர்மி நடுங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. தன் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு, ஏய் என்னடி இப்டி நடுங்குற? என்று கேட்கவும்,செம பயமா இருக்குது ஷாகின்.

அப்ப போன வாரம் நைட் பேய் படம் பார்த்துட்டு பாத்ரூம் போகனும்னு உன்ன கூப்டதுக்கு தைரியசாலி மாதிரி எப்டி சீன் போட்ட! நீயும் ப்ரியாவும் சேர்ந்து எப்டி என்ன கழுவி கழுவி ஊத்னிங்க!!

இப்ப அதுவா ஷாகின் முக்கியம் நானே பயத்துல இருக்கேன் இந்த நேரத்துல வந்து என்ன பேசிட்டு இருக்க!

பேசிக்கொண்டு இருக்கும் போதே திரும்பவும் அதே பயங்கரமான சத்தம், இந்த தடவை வெளிச்சமும் கூட வந்தது.

என் கைய நல்லா பிடிச்சிக்க ஷர்மி எனக்கு நைட் கனவு வந்தா கூட உன் மேல கைய போட்டு தான் தூங்குவேன் இப்ப நேர்லயே எல்லாம் நடக்குது எனக்கு அப்டியே ஹார்ட் பீட் ஹை பிட்ச்ல அடிக்குது.

அடிபாவி!! என் மேல கைய வேற போட்டு தூங்குவியா இது எப்ப நடந்துச்சி, சரி விடு என் கைய நல்லா பிடிச்சிக்க நானும் உன் கைய நல்லா பிடிச்சிக்றேன் அப்பதான் நீ பயப்ட மாட்ட.

இந்த டகால்டி வேலைதான வேண்டாங்றது, உனக்கும் பயமாதான இருக்கு அது என்ன நா மட்டும் பயப்டற மாதிரி சீன் போட்றது, இன்னும் நீ திருந்தல.

இப்ப தீடீர்னு கரன்ட் கட் ஆச்சினா எப்டி இருக்கும், என்று ஷாகின் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கரன்ட் கட் ஆகியது.

ஏன்டி! சனியனே, உன் வாய்ல தீய வைக்க, கரன்ட் வேற போயிருச்சி இப்ப என்ன பன்றது.

பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதோ சலசலவென சத்தம் கேட்டது, இது என்ன சத்தம் ஷாகின்? அய்யோ என்ன என்னலாமோ நடக்குதே..

எனக்கு என்ன தெரியும் என்ட கேக்ற? நானே பயத்துல நடுங்கிக்கிட்டு இருக்கேன் மொத்த ஹாஸ்டலே இருட்டுல இருக்கு , இப்ப வேற எங்க அம்மா சொன்ன பேய் கதை எல்லாம் நியாபகம் வருதே.

கொஞ்சம் அமைதியா இரு ஷாகின் ஏதோ கொலுசு சத்தம் கேக்ற மாதிரி இல்ல, என்னதுஉஉ கொலுசு சத்தமா!!

நீ வேற ஊளை விட்டு பயம் காட்டாத, அமைதியா கேளுடி.

ஒரு இரண்டு நிமிடங்களுக்கு பிறகு ஆமா ஷமி சத்தம் கேக்குது, இப்ப கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல வர மாதிரியே இருக்கு, நம்ம ரூம்க்கு பேய் வந்துருமா?? ஏற்கனவே 2nd floor ல ஒரு சீனியர் அக்கா சூசைட் பண்ணி செத்து போயிருக்காங்க.

உனக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது ஷாகின். நானே மரண பயத்துல இருக்கேன், இப்ப தான் இப்டி லூசுத்தனமா எதையாவது உளறுவ.

நா என்ன பண்றது எனக்கு பயத்துல என்ன என்னலாமோ நியாபகம் வருது. அந்த கொலுசு சத்தம் இப்ப நின்னுறுச்சி பாரு ஷாகின்!! ஆமா அப்ப பேய் போயிருச்சா ஷமி?

நானே இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன், இதுல நீ வேற பேய் பிசாசுனு சொல்லிக்கிட்டு…

“இப்பொழுது பயங்கர சத்தமும் ,வெளிச்சமும், போட்டி போட்டுக்கொண்டு வர ஆரம்பித்தது”

அய்யோ இப்பதானடி கொஞ்சம் நிம்மதியா இருந்தோம், திரும்பவுமா!!

நாம இந்த ரூம்லயே இருக்க வேனாம் ஷமி வா நைசா வெளிய ஓடிர்லாம், இந்த ரூம்ல இருக்கவே செம பயமா இருக்கு, விட்டா பயத்லயே செத்ருவேன் போல.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.