(Reading time: 7 - 13 minutes)

கே நாம ரூம்ம விட்டு வெளிய போய்ரலாம், ஆனா நம்மட்ட இப்ப டார்ச் கூட இல்லியே. வெளிய வேற இருட்டா இருக்கு, கொலுசு சத்தம் வேற கேட்டிச்சி, பேய் ஏதாவது வந்தா, இருட்ல என்ன பன்ன முடியும்?

அங்க வென்டிலேஷன் வழியா கொஞ்சம் வெளிச்சம் வருது பாரு ஷமி, யோரோ டார்ச் அடிக்றாங்க போல.

ஆமாடி ஒரு வேளை வார்டன் வந்ருப்பாங்கலா இருக்கும் .

இந்த சத்தம் வேற காதை துளைக்குது, இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா என் காது அவுட் ஆகிரும் போலடி ஷமி .

சரி மெதுவா எழுந்திரி ஷாகின், நானும் எழும்புறேன் சத்தம் போடாம வெளில போய்ரலாம்.

ஏய் அங்க பாருடி, அஜீ அந்த காட்ல தூங்கிட்டு இருக்கா பாரு ,அவளையும் எழுப்பி கூட்டிட்டு போகலாம்.

போடி அவள எழுப்பி கூட்டிட்டு போறதுக்குள்ள நாமஒரேடியா போய் சேர்ந்துருவோம். இடியே விழுந்தாலும், இஞ்ச் நகராம ஏலியன் மாதிரி தூங்கற ஆளு அவ.

இப்ப கூட பாரு நாம எவ்ளோ நடுங்கிக்கிட்டு இருக்கோம் அவ ஹாயா கனவு கண்டுட்டு தூங்கிட்டு இருக்கா. நீ மெதுவா நட நாம வெளில ஓடிர்லாம்.

மெதுவாக கதவை திறந்து வெளியே சென்ற பொழுது,அங்கே டார்ச்சை கையில் பிடித்துக்கொண்டு ஓர் உருவம் நின்றது.

அங்க பாருடி அது வார்டன் இல்ல வேற யாரோ, நம்ம வார்டன் குண்டு கத்திரிக்கா மாதிரி இருப்பாங்க, இந்த உருவம் குட்டி கத்தரிக்கா மாதிரி இருக்கு.

பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த உருவம் அவர்களை நெருங்கி வந்தது.

ஏய் அங்க பாருடி ஷமி அது நம்ம பக்கத்துல வருது.

ஆமா வா நாம உள்ள ஓடிர்லாம், உள்ளே செல்ல திரும்பும் போத ஷாகின் என்று அழைக்கும் சத்தம் கேட்டது.

ஹே ஷமி இது நம்ம ராஜிடி, ஆமா நீ இங்க என்ன பன்ற ராஜி.

ஏதோ சத்தம் கேட்டிச்சிடி அதான் வந்தன்.

உனக்கும் கேட்டிச்சாடி, எங்களுக்கும் சத்தம் கேட்டிச்சி ஏதோ வெளிச்சம் எல்லாம் வந்திச்சி என்று ஷமி ஆரம்பிக்கவும்,

ஆமாடி எங்க ரூம்ல கூட எல்லாம் வந்திச்சி, அதான் பயந்து போய் நா வெளில ஓடி வந்திட்டேன். நீங்க இரண்டு பேரும் இருக்கிங்க, அஜீவ எங்கடி.

போடி அவ இப்ப எழூம்புற ஆளா, பகல் பத்து மணிக்கு தான் அவ எழும்புவா.

மூவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே, ப்ரியா அடுத்த ரூமில் இருந்து வெளியே வந்து திட்ட தொடங்கினாள்.

அறிவு இருக்காடி உங்களுக்கு நைட் டைம் தூங்க விடாம என் ரூம் வாசல்ல நின்னு மீட்டிங் போட்ருக்கிங்க.

ஷாகின் ப்ரியாவுக்கு விளக்கத் தொடங்கினாள், இல்ல ப்ரியா பேய் வந்திச்சி.

என்னது பேயா!! என்று ப்ரியா கேட்கவும்,

இல்ல இல்ல ப்ரியா ஏதோ சத்தம் கேட்டிச்சி, வெளிச்சம் எல்லாம் வந்திச்சி என்று ஷமி தொடர்ந்தாள்.

அட எறுமைகளா, இப்டியா பயப்டுவிங்க! மழை பெய்யுதுடி லூசு பக்கீஸ், அது இடி இடிச்ச சத்தம்டி.

என்னதூ மழையா என்று மூவரும் ஒரு சேர கேக்கவும், ஆமாடி நைட்ல இருந்து செம மழை, இடி எல்லாம். இதுக்கா என் தூக்கத்தை கெடுத்திங்க என்று சரமாரியாக திட்ட தொடங்கவும்,

இவ்ளோ பயங்கரமா இடி எல்லாம் இதுக்கு முன்னாடி வந்தது இல்ல, இப்ப இப்டி வந்ருக்குனா உலகம் அழிஞ்சிருமா?? என்று ஷமி அழ தொடங்கினாள்.

அப்டிலாம் எதும் ஆகாதுடி போய் தூங்குங்க காலைல Exam கு படிக்கனும் என்று ப்ரியா மூவரையும் சமாதன படுத்தி (மிரட்டி) தூங்க அனுப்பினாள்.

ய் சீக்கிரம் எழும்புடி…

தூங்கிக் கொண்டிருக்கும் ஷர்மியை யாரோ எழுப்பும் சத்தம் கேட்டு கண் விழித்தாள் என்ன ப்ரியா!

Exam postpone பண்ணிட்டாங்களாம் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புடி.

உடனே ஷமி குதித்துக்கொண்டு எழுந்தாள்.

ஏஏஏஏ Exam postpone பண்ணிட்டாங்களா ஜாலி….

நா வேற Exam கு படிக்கலனு பயந்துட்டே இருந்தேன்.

ஆமாடி லுசு ஷமி, மழை பெய்ரதுனால postpone பண்ணிட்டாங்களாம் அப்ப மழை நல்லதுக்கு தான!!

ஆங்ங்ங்ங்ங்ங்…….

This is entry #35 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.