(Reading time: 13 - 25 minutes)

பெண்ணுக்குள் பிறந்தாயே சக்தி - புவனேஸ்வரி

This is entry #36 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

bike

" ஹாய்  டீ பட்டு " ஒரு சோர்வான புன்னகையை சிந்தியப்படி தோழியை பார்த்தாள்  பிரியங்கா .. அவளுக்கு எதிர்மாறாய்

" வெரி குட் மார்னிங் டார்லிங் " என்றாள்  பூரணி .

" என்னடீ புடவைல செம்மையா இருக்க ? எனக்கு துரோகம் பண்ணுறியா ? லவ் செட் ஆச்சா ? " என்றாள்  ப்ரியா ..

" ச்சி  லூசு ..சத்தம் போட்டு பேசி என் மானத்தை வாங்காதே ... ஏற்கனவே நம்ம ரெண்டுபேரையும் ஹாஸ்டல்ல ஒரு மாதிரி தான் பார்க்குறாங்க , பேசுறாங்க .. இதுல நீ வேற " என்று பூரணி சிணுங்கினாலும் அவள் முகத்தில் மகிழ்ச்சி தான் இருந்தது. உடனே நீங்களும் அப்படி கற்பனை பண்ணிட வேணாம் வாசகர்களே .. நம்ம பிரியங்காவும் பூரணியும் மனம் ஒத்த  நெருங்கிய தோழிகள் .. தற்பொழுது பெங்களூரில் ஒரே ஹாஸ்டலில், ஒரே அறையில்  இருக்கின்றனர் ..

" என்ன டீ ரொம்ப டயர்டா இருக்க ?" - பூரணி

" உனக்கு தெரியாததா குட்டிமா ? இந்த நைட் ஷிப்ட்  பார்த்து பார்த்து உயிர் போகுது டீ ..ஏன்தான் ஐ டீ பீல்ட்ல படிச்சேன்னு தெரியல  போ "

" ஹ்ம்ம் வேலையை மாத்துன்னு சொன்னாலும் கேட்குறதே இல்லை நீ "

" இட்ஸ் ஓகே  டீச்சர் மேடம் .. உங்க முகத்தை பார்த்தால் , என் டயர்ட்னஸ்  எல்லாம் டாட்டா சொல்லிடும் .. ஆமா நீ இன்னுமா  ஸ்கூலுக்கு போகல ? " என்றாள்  ப்ரியா ..

" ம்ம்ம் நான் காலைல வேலைக்கு போகும்போது தான் நீ, வேலை முடிஞ்சு வர்ற .. உன்கிட்ட சரியா பேச முடியலையேன்னு  ரெண்டு ஹவர் பெர்மிஷன் போட்டேன் "

" ஹே குட்டிமா " என்ற பிரியங்கா ஆனந்தத்தில் தோழியின் கன்னங்களில் முத்தமழை பொழிந்தாள் ..

" அடியே போதும் டீ .. கொஞ்சம் என் வருங்கால புருஷனுக்கு மிச்சம் வை .. நான் காபி கொண்டு வரேன் " என்று  ஓடினாள்  பூரணி ..துள்ளலாய்  ஓடியவள்  ஷக்தி மீது மோதி நின்றாள் .. ஷக்தி, பூரணி பிரியங்காவை விட வயதில்  இளையவள் .. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து , சொந்த உழைப்பில் முன்னேறி இதே ஹாஸ்டலில்  தான் நிர்வாக பொறுப்பை பார்க்கிறாள் ..அவளது வேலைக்கும் குணத்திற்கும் சம்பந்தமே இல்லை ..காரணம் இயல்பிலேயே ஷக்தி பரம சாது .. கொஞ்சமும் அதட்டாமல் தனது வேலையை செவ்வனே செய்வதே அவளது தனித்துவம் ..

" குட் மார்னிங் ஷக்தி பேபி "

" குட் மார்னிங் அக்கா .. என்ன காலையிலேயே ஜாகிங் ஆ ?"

" ஹே வாலு .. அதெல்லாம் இல்லை .. கீழ காபி ரெடியா ?"

" ம்ம்ம் .. அதெல்லாம் எப்பவோ ரெடி .. நீங்க ஸ்கூல் போகலையா ?"

" அய்யயே  நான் ஸ்டூடண்ட்டா இருந்த காலத்தில் கூட யாரும் என்னை இவ்வளவு கேள்வி கேட்கல .. ஆனா இப்போ டீச்ச்ர ஆகின பிறகு இவ்வளவு பேரும்  ஒரே கேள்வி கேட்குறிங்க !" என்று சலித்து கொண்டாள்  பூரணி ..

" அப்படி கேட்டும் என்ன பயன் ? நீங்க பதில் சொல்லலையே " என்றாள்  ஷக்தி ..

" இப்போ ஹாலிடே பீரியட். நான் ஸ்கூலுக்கு போயே  ஆகணும்னு ரூல்ஸ் இல்ல பேபி .. கொஞ்சம் வேலை இருந்தா மட்டும் போவேன் .. இன்னைக்கு லீவ் தான் .. ப்ரியாவுக்கு தெரியாது சொல்லிடாத "

" ச்ச ..ச்ச .. நான் ஏன் அக்கா சொல்ல போறேன் .. " என்று புன்னகைத்தவள் ஒரு சின்ன தலை அசைப்போடு அங்கிருந்து நகர்ந்தாள் .. அவள் நடக்கும்போது கூட அதில் ஓர் அழகு இருந்தது , அடக்கம் இருந்தது ..

" ப்ப்ப்பா...பூரணி உனக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படி ஒரு பெண்மை நிறைந்த உடல்மொழி வராது " என்று எண்ணியபடி காபியை எடுத்து கொண்டு மேலே வந்தவள்  ப்ரியாவின் விசும்பல் சத்தம் கேட்டு  வேகமாய் அறைக்குள் வந்தாள் ..

" ஹே குட்டிமா .. என்ன டீ .. என்னாச்சு ?" என்று பூரணி பதற, ப்ரியா கைகளில் செல்போனை பார்த்து கொண்டு அழுதாள் ..

" இந்த சனியன் பிடிச்ச செல்போனை வீசணும் .. சரி என்ன பண்ணின சொல்லு ?யாராச்சும் போன் பண்ணங்களா  ?"   இல்லை என்று தலையசைத்து அழுதாள் ..

" ரேடியோல ஏதாச்சும் நியுஸ் கேட்டியா ?" .. மீண்டும் இல்லை என்றே தலையசைத்தாள் ..

" சரி , ஏதாச்சும் நியுஸ் படிச்சியா?  " என்றதுமே ப்ரியாவின் அழுகை அதிகம் ஆகியது .. ஓரளவிற்கு பூரணி என்ன நடந்திருக்கும் என்பதை கணித்திருந்தாள்  .. பூரணியை விட ப்ரியா மிகவும் இளகிய மனம் படைத்தவள் .. கொஞ்சம் சோகமான பாடலை கேட்டால் அந்த பாடலோடு ஒன்றி போய்  விடுவாள் .. சோக கதைகள் படித்தால் இரண்டு நாட்களுக்கு சோகமாய்த்தான் இருப்பாள் ..அதேபோல செய்திகளில் ஏதேனும் அசம்பாவித செய்திகளை பார்த்தாள்  அழுதுவிடுவாள் ..

" முருகா , இன்னைக்கு என்ன படிச்சா தெரியலையே " என்ற பூரணி நினைக்கும்போதே விசும்பலுடன் பேசினாள்  பிரியங்கா ..

" முதல்ல நம்ம வயசு பொண்ணுங்களை தொட்டானுங்க .. அப்பறம் ஷக்தி வயசு பொண்ணுங்களை தொட்டானுங்க .. அதுக்கு அப்பறம் அஞ்சு ஆறு வயசு பொண்ணுங்களை தொட்டானுங்க .. இப்போ கை குழந்தை டீ .. 28 நாள் தான் ஆகி இருக்கு குட்டிமா .. ஒரு பச்சை குழந்தைய தொட்டு தூக்கவே நாம பயப்படுவோம் .. குழந்தைக்கு வலிக்குமான்னு பதறுவோம் .. இந்த ராஸ்கல் ரேப் பண்ணி இருக்கான் குட்டிமா .. ச்ச வெறி பிடிச்ச நாய் .. " என்று கதறினாள் ..பூரணிக்குமே  கண்களில் கண்ணீர் சுரந்தது ..அதைவிட வளர்ந்தும் குழந்தையாய் மடிமீது  அழுது கொண்டு இருப்பவளை பார்க்க இன்னும் வலித்தது .. சொல்வதற்கு வார்த்தை இன்றி  கூந்தல் வருடி அவளை தேற்றினாள்  பூரணி ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.