(Reading time: 6 - 12 minutes)

காதலும் கடந்து போகும் - ஷக்தி

This is entry #37 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

Love

ப்பா அந்த ராஜா ராணி கதை சொல்லுப்பா ..உங்க செல்ல குட்டி நான் தூங்கனுமா  வேணாமா என செல்லமாய் மிரட்டுகிறாள் குட்டி தேவதை.. நல்லா சாப்பிட்டாதான் நான் கதை சொல்லுவேன் என்று மகளுக்கு ஊட்டி கொண்டே கதை சொல்றார் நம்ம துருவ்.

ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி இருந்தாங்கலாம் .... அப்படின்னு ஆரம்பிச்சு கதை கதையாய் சொல்லிக்கொண்டே மலர்ந்த நினைவுகளில் துருவ் காணாமல் போக, குட்டி தேவதையும் தூங்கிட்டாங்க..

நாம இப்ப எந்த கதைக்குள்ள போக போறோம்னு குழம்பி இருக்கும் போது, ஒரு சத்தம் யாரங்கே என்று .. அரசே நாம் இளவரசரை கண்காணிக்க ஒற்றன் ஒருவனை நியமனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தீர்கள், தங்களின் ஆதரவு படி இன்று முதல் சேவையை தொடங்க அனுமதி தரவேண்டும் என மந்திரியார் கேட்டுக்கொள்ள, அப்டியே ஆகட்டும் என அரசர் ஆணையிடுகிறார்..

சங்க காலத்தில் ஒழுக்க நெறிகளுடன் மக்களும் மன்னர்களும் வாழ்ந்து வந்ததை பல இலக்கியங்களின் மூலம் தெரிந்து வந்துள்ளோம்.. அதையும் தாண்டி மறுபக்கம் ஒன்று இருப்பதை நாம் அறிய தவற விட்டோம்..

இயற்கையோடு ஒட்டி அறவழியில் நிற்க முயன்ற சங்ககால மக்கள் வாழ்வியலை இன்றுபோல அன்றும் சில புலவர்கள் அனுமதிக்கவில்லை! தம் சுய இலாபத்துக்காக மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் பகைகொள்ள வைத்த கல்வி மான்கள் சங்க காலத்திலும் இருந்தார்கள். அந்த இளவரசர் பக்கத்து நாட்டு இளவரசியோடு காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ள போவதாக வந்த வதந்திகளின் விளைவால் ஒற்றன்  நியமிக்கபட்டான்..

வர்ணிக்க முடியாத அழகியலோடு ஆணவ சிரிப்பில் இளவரசி தன் தோழிமார்களுடன் மாறுவேடத்தில் பக்கத்துக்கு நாட்டிற்கு நகர்வலம் வந்த போது இளவரசனின் எதிர்பாராத மோதலில் கண்கள் ரெண்டும் பேசிட கனவுலகில் புகுந்தன..  முதல் மோதல் தித்திக்கும் காதலாய் மாறி காலம் வழிவகுக்க  ஒற்றனும் காட்சியை கண்டான்..

இளவரசனும் இளவரசியும் தனது தேடல்களை காதலில் தொலைக்க, காலத்தின் சதி விளையாட தொடங்கியது..

விடியலின் தேடல் ஆதவன் உதிக்கும் நேரம், குட்டி தேவதை கண் விழித்து, அப்பா கதை சொன்னேங்களா இல்லையா என, மடியில் இருந்து தூக்கி நீ கேட்டுட்டே தூங்கிட்ட செல்லம் என்றார் துருவ்.

அப்பா, ஒவ்வொரு மகள்களின் முதல் காதல் என்பது போல துருவின் மீதான காதல் குட்டி தேவதைக்கு ஒரு படி மேலே என்றே சொல்லலாம்.. இரண்டடியில் பல பொருள் தந்த திருக்குறளின் 133 அதிகாரங்களும் தோற்று போகும் என் மகளதிகாரத்தால் துருவ் மெய்சிலிர்த்து கொள்ளும் அழகியல் அவர்களின் வாழ்க்கை...!

ராகுல், மேகா திருமணம் ஆகி 1 வருடம் முடிந்து, முதலாம் ஆண்டு  திருமண நாளில் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை நினைவுகளாக அசை போட்டு கொண்டிருந்தனர்.. இருவர் திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு காதல் மறுமணமாய் மாறியது..

முதல் காதல் தோல்வி மேகாவின் வாழ்க்கையை புரட்டி போட்டது. அவளின் வாழ்வில் எதிர்காலம் என்றே இல்லை என்று ஏங்கும் தருணத்தில் தான் ராகுல் வந்தான்.. ராகுல் அவளை மனதால் மீட்டு மீண்டும் மலர உறுதுணையாய் உடன் இருந்தான்...

ஒருநாள் இருளும் மாலை நேரத்தில் வழக்கமாய் செல்லும் பாதையில் தனியாக  இருவரும் உரையாடி கொண்டு வருகையில் ராகுல், மேகா நான் உங்கிட்ட ஒன்னு சொல்லணும், அதுக்கு உன் சம்மதம் வேணும் என சொல்லிக்கொண்டே திடீரென, ராகுல், மேகா வா நாம இங்கிருந்து போலாம் முதல்ல, இந்த இடம் கொஞ்சம் பாதுகாப்பா இல்லை என்றான்..

அவள் சட்டென்று திரும்பி பார்த்து, யாரது இந்த தனிமையான பாதையில் இருண்ட நேரத்தில் என்று புரியாமல் கேட்க, வேணாம் மேகா வா போலாம் என்றான் ராகுல்.. அவள் அதை பொருட்படுத்தாமல் முன்னேறி அது யாரு என்று காண செல்ல, அது அவளின் முன்னாள் காதலனும் அருகில் ஒரு பெண் குழந்தையும் என தெரிய வர, அவளின் மனதில் எண்ண ஓட்டங்கள் ஓட ஆரம்பித்தன..

அவன் அவளை பிரிந்து கல்யாணமும் பண்ணிக்கொண்டு குழந்தையும் பெற்று விட்டானே என்று நினைத்து கொண்டு அவனை நோக்கி நடந்தாள்.. அவனை நெருங்கும் தருணம் எதோ ஒன்று மனதில் இனம் புரியா தயக்கத்தில் அவனின் பெயரை மென்மையாக உச்சரித்தாள்.

அவள் : ஹலோ துருவ்

துருவ் : ஹலோ மேகா..

இதை கேட்ட அந்த குட்டி தேவதை, அப்பா .. இவங்க பெயரும் மேகாவா?? யாரு இவங்க என ஆர்வமாய் கேட்க, அதற்கு

துருவ் : குட்டிமா உனக்கு அப்பா தினமும் ஒரு கதை சொல்றேன்ல, அதுல வர அந்த இளவரசி தான் செல்லம் இவங்க..

குட்டி தேவதை : ஹலோ இளவரசி மேகவதியே, என் பெயரும் மேகவதி தான். உங்கள பத்தி அப்பா நிறைய சொல்லிருக்கார் ... அப்புறம்  உங்க இளவரசனுக்கு என்ன ஆச்சு இளவரசி.?

இதை கேட்டு அவள் வாயடைத்து போனாள். என்ன சொல்லவேண்டும் என்று புலப்படவில்லை ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.