(Reading time: 6 - 12 minutes)

வள் : தெரியல குட்டி, அவர் வேற இளவரசிய கல்யாணம் பண்ணிகிட்டார் போல.. அதுலாம் இருக்கட்டும் உங்க அம்மா எப்டி இருக்காங்க குட்டி..

அந்த குட்டி தேவதை அவளின் தந்தையின் கண்களை ஒரு ஏக்கத்துடன் உற்று பார்த்தாள்.. இதுவரைக்கும் இதே கேள்விக்கான பதிலை துருவ், தனது குழந்தைக்கும் தெரிய படுத்தவில்லை.

துருவ் தனது மெல்லிய குரலில் குழந்தைக்கு அறியா வண்ணம் இளவரசி மேகாவிடம்,

குட்டி தேவதையை நான் தத்தெடுத்து, உன் பெயர வச்சிருக்கேன், அப்ப தான் நீ  எப்பவும் என் கூட இருக்கிற மாதிரி என்னால உணர முடியும்... இருவரும் சங்க கால காதல் நினைவுகளில் மெய் மறந்தனர்.

ளவரசனும் இளவரசியும் ஒரு நாள் பூஞ்சோலை ஒன்றில் ரகசியமாக சந்தித்தனர். இருவரும் தங்களின் முதல் சந்திப்பில் தொடங்கி, உனக்கு ஒரு ஆண் எனக்கு  ஒரு பெண் என இரண்டு மாற்று திறன் கொண்ட குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்தது என பகிர்ந்து கொண்ட எண்ணற்ற நினைவுகளை பத்திரப்படுத்தி கொண்டனர். விதியின் சதியால் தங்களின் அரச குடும்ப வாழ்வின் வலிமைக்காக தங்களின் பிரிவை ஏற்று இதுவே இறுதி சந்திப்பு என்பதை உணர்ந்து தயாராகினர்.

இளவரசன், இந்த ஜென்மத்தில் ஒரு பெண்ணின் முதல் காதலனாய் வரம் பெற்றேன் நான் , மறுஜென்மம் என்று ஒன்று இருப்பின் என்னோடு நீ வாழும் வரம் வேண்டும் என குரல் மல்க பிரியா விடை பெற்றான்.

காதலின்  ஆழத்தை தெளிவாக புரிந்த கொண்ட இவர்களை விதி பிரித்தாலும் நினைவுகளால் காவிய காதலாய் நின்று காலம் காலமாய்  சரித்திரத்தில் இடம்பெற்றது..

காதல் எவ்வளவு புனிதம் என்பதை காலமே பதில் சொல்லும் ..

புத்தககண்காட்சி ஒன்றில் துருவ் மற்றும் மேகா இருவரும் தங்களது  முதல்  சந்திப்பிலேயே காதல் கொள்ள காரணமானதும் இந்த காவிய காதல் புத்தகம் தான்...

இருவரும் அந்த இளவரச இளவரசியின் மறுஜென்மமாய் தங்களின் வாழ்வை சித்தரித்து சிறகடித்து பறந்து வந்த வேளை, வாழ்க்கை ஒன்றும் நம் தோழன் இல்லை என்பதற்கேற்ப, இருவரும் பிரிய, அன்றும் போல இன்றும் என்றும் "முதல் காதல்" ஒரு வரமா இல்லை சாபமா என்பது காதலுக்கு மட்டுமே புரியும் புதிர்.. 

மேகா தன் கடந்த கால நினைவுகளால் காயப்பட்டு நிஜ வாழ்வில் திரும்பி, துருவை போல மேகாவும் ஒரு ஆண்மகனை தத்தெடுக்க முடிவு செய்ய, ராகுலும் இதை தான் ஏற்கனவே சம்மதம் கேட்க வந்தான் என்று அறிந்ததும் கண்கலங்கி ராகுலை கட்டி அணைத்தாள் மேகா... 

ராகுலின் முதல் காதலாய் மேகா...

துருவின் முதல் காதலாய் குட்டி மேகா..

மேகாவின் முதல் காதலாய் குட்டி துருவ்..

என காலத்தின் வழியில் காதல் செய்ய கற்றுகொண்டார்கள்..

சிலருக்கு அனுபவம், சிலருக்கு விளையாட்டு, சிலருக்கு வரம் என

என்றுமே தித்திக்கும் நினைவுகளாய்

முதல் காதல் ...

“முதல் காதல், கடைசி காதல் என ஏதும் இல்லை.. நிறைவான ஆழமான காதல் தான் நிரந்தரமா காலம் காலமாய் முத்தாய் ஜொலிக்கும்.. 

ஒருவருக்கு முதல் காதல் கடைசி காதலாக கூட இருக்கலாம்..  ஒருவரோட முதல் காதல் மற்றொருவரோட முதல் காதலாக இல்லாமலும் இருக்கலாம் ..

நாம் பார்க்கிற பார்வையின் பரிணாமங்கள் தான் வேற வேற..

காதல் ஒன்று தான்...  சாகா வரம் பெற்றதும், சாகா நினைவுகளை வரமாய் தருவதும் இந்த தன்னிலை மாறா காதல் தான் ..

என் முதல் காதல், கதையாக..

This is entry #37 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.