(Reading time: 13 - 25 minutes)

" ஹே ப்ரீ பார்த்து டீ " தோழியின் கைகளை பிடித்து கொண்டு மாடியில் இருந்து ஜன்னல் வழியாய் குதித்தாள்  பூரணி .. கண்ணில் மரணபயம் தெரிய, குதித்தவளை பார்த்து சிரித்தாள் ப்ரியா ..

" ஹா ஹா .. என்னடி இதுக்கே இப்படி பயப்படுற ..."

" குரங்கு குட்டி .. நான் உன்னை மாதிரி இப்படி ஜன்னல் தாண்டி குதிக்கிறதை  வேலையாய்  வெச்சு இருக்கேன்னு நினைச்சியா "

" ஹீ ஹீ .. சரி வா என்ன நடக்குது பார்ப்போம் " என்றவள் அவளது கைகளை பிடித்து கொண்டு , பிரதான சாலையில் நடக்க தொடங்கினாள் ..

" பேய் பேய் .. நைட் ஷிப்ட்  பார்த்து பார்த்து பேய் மாதிரி நடக்க வைக்கிற என்னை நீ .. ஈ காக்காய் கூட தூங்கிட்டு இருக்குற நேரம் இப்படி நடக்க வெச்சுட்டியே .. பைக் என்ன, ஒரு சைக்கிள் கூட காணோம் " என்று காலில்  தட்டுபட்ட கல்லை காலால் எத்திகொண்டே விளையாடிபடி பேசினாள்  பூரணி ..

" விடு பூரி .. எப்பவாச்சும் தானே இப்படி ரொமண்டிக் வாக் போக முடியுது .. அதை என்ஜாய் பண்ணுவோம் " என்று  ப்ரியா பொறுமையாய் நடக்க, சலனமில்லாத அமைதியுடன் இருந்தது அந்த பாதை .. தோழிகள் இருவரும் பேசிக்கொண்டே, நடந்த நேரம் அவர்களது ஹாஸ்டல் அருக யாரோ ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது .. பின்னாலேயே  அந்த பைக் வரவும் , அந்த ஆசாமி அங்கிருந்து ஓட முயன்றான் .. அதற்குள் ப்ரியாவும் , பூரணியும் அவனை பிடிக்க அந்த பைக்கில் இருந்து இறங்கி வந்தான் நம்ம " ப்ளேக் ஹீரோ " ..

" ஹே நம்ம ஹீரோ டீ " என்று ப்ரியா வாயைபிளந்த நேரம் அந்த ஆசாமி அவர்களை எல்லாம் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான் .. கண்ணீருடன் நடுங்கியபடி நின்றிருந்தாள்  அந்த பெண் அனுஷா.. " பூரி, நீ அனுஷாவை கூட்டிகிட்டு "

" ஏன் நீ உன் ஹீரோ கூட பேசணுமா ?" என்று காது கடித்தாள்  பூரணி ..

" ச்சி  போ " என்று அவள் கூறவும் அனுஷாவை கூட்டிக்கொண்டு உள்ளே நகர்ந்தாள்  பூரணி ..

" ரொம்ப தேங்க்ஸ் ஹீரோ "

" .."

" உங்க பேரு ?"

" .."

" ஏதும் பேச மாட்டிங்களா ?" என்றவளுக்கு பதில் சொல்வதற்காக ஹெல்மெட்டை கழற்றினான் அவன் ..

றுநாள்,

" ஹே ப்ரீ ... என்னதான் டீ ஆச்சு ? "

".."

"எவ்வளவு நேரம் இப்படியே அமைதியா இருப்ப ? நேத்து நைட்ல இருந்து ஒரு வார்த்தை பேசாம நடு  ரோட்டுல நின்னுகிட்டு இருந்த நீ ? அவன் என்ன டீ சொன்னான் ? என்ன டீ ஆச்சு ..சொல்லி தொலையேன் டீ " என்று என்று பூரணி அவளை உலுக்க ,

" அதை நான் சொல்லுறேன் " என்றபடி அறைக்குள் நுழைந்தாள்  ஷக்தி ..பூரணி , பிரியங்காவின் செல்போனை அவர்களிடம் நீட்டிவிட்டு அறைகதவை தாளிட்டு அமர்ந்தாள்  ஷக்தி ..

" என்ன ஷக்தி இது ? எங்க போன் நீயா எடுத்து வெச்சு இருந்த ? "

" ஆமா அக்கா " என்றவள் ப்ரியாவை பார்த்தாள் .. சுற்றிவளைத்து பேசுவது அவளது பாணி இல்லை என்பதினால் நேரடியாகவே  சொல்ல வந்ததை கூறினாள் ..

" நேத்து ப்ரியா அக்கா, என்னை பார்த்து தான் ஷாக் ஆகிட்டாங்க .. நீங்க ரெண்டு பேரும்  அடிக்கடி பேசிக்கிற அந்த ப்ளேக் ஹீரோ வேற யாருமில்ல .. நான்தான் "

" நீயா ?"

" ஆமா நானே தான்.. நான் இந்த ஹாஸ்டல் நிர்வாகி மட்டும் இல்ல ... ஒரு கராத்தே ஸ்கூல்ல பொண்ணுங்களுக்கு தற்காப்பு கலையும்  சொல்லி தரேன் .. "

" ஹே , எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா ஷக்தி இது ? இதை ஏன் மறைச்சு வைக்கிற ? ஏன் எங்ககிட்ட சொல்லல ?"

" எதுக்கு சொல்லணும் ? இது என் அடையாளம் இல்லை ...இது ஒரு நிர்பந்தம் "

" என்ன சொல்லுற ?" என்றனர் இருவருமே தீவிரமாய் ..

" பொண்ணுன்னா எப்படி இருக்கணும் ? பெண்ணை கடவுள்ன்னு சொல்லுறாங்க , வீட்டுக்கு தேவதைன்னு சொல்லுறாங்க , குலம்  காக்க வந்தவள்ன்னு  சொல்லுறாங்க .. ஆனா உண்மையான பொண்ணுடைய நிலை என்ன ? எத்தனை பேருகிட்ட இருந்து ஓடிட்டே இருக்கோம் .. என் பதினாறு வயசுல ஆரம்பிச்ச ஓட்டம் , நான் வளர்ந்த ஆஸ்ரமத்துலேயே  என்னை மானபங்கம் பண்ண முயற்சி பண்ணாங்க , அங்க இருந்து தப்பிச்சு , ஒரு வேலையை தேடிக்க எவ்வளவு கஷ்டபட்டேன் ..எத்தனை மிருகங்களை  சந்திச்சேன் .. பெண்ணாய் மட்டும் இருக்கணும்னு ஆசைப்பட்டேன் .. சமுதாயம் என்னை இப்படி இருக்கவும் நிர்பந்தபடுத்தியது .. "

" ஏன் பெண்ணுக்கு வீரம் இருக்க கூடாதா ஷக்தி ? ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஷக்தி இருக்குன்னு பாரதியே சொல்லி இருக்கார் " - பூரணி

" ஆனா அந்த பாரதி பெண்ணுக்கு வன்கொடுமை தந்தது இல்லையே அக்கா .. ஒரு பெண் , எந்த ஒரு கவலையும் இல்லாமல் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழணும்னு அடிப்படையாய் யோசிக்கிறதுல என்ன தப்பு ? வீரம் என்பது இப்படி  ஆண்கள்கிட்ட கற்பை காப்பத்திக்கிற விஷயம் இல்லையே .. சின்ன சின்ன பிரச்சனையில் தொடங்கி, மலையளவு பிரச்சனையையும் தீர்த்து வைக்கும் தன்மை கொண்டவள் பெண் ..அதுதான் பெண்ணின் வீரம் " என்றவளின் கண்ணீர் பெருக்கெடுத்தது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.